பரப்புரைக்கு தயாராகும் சென்னை மாவட்டக் கழகம்!

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், ஜூலை-5 மாலை 6 மணிக்கு, கழகத் தலைமை அலுவலகத்தில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் நடைபெற்றது.

குரலற்றோரின் குரலாக கருத்தரங்கங்கள் நடத்துவது, தென் மாவட்டங்களுக்கு பரப்புரைப் பயணம் மேற்கொள்வது, பெரியார் பிறந்தநாளை குடும்ப விழாவாக நடத்துவது, சமூக வலைத்தள செயல்பாடுகள், தேர்தல் முடிவுகள், பிரச்சார அணுகுமுறை, நன்கொடை திரட்டுதல், மாநாட்டு சுவரெழுத்து, பயணப் பெயர் பட்டியல் தயாரிப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

பரப்புரைப் பயணத்தை சிறப்பாக நடத்துவது குறித்து தோழர்கள் கருத்துகளை வழங்கினர். குறைந்தது 20 தோழர்கள் பயணக்குழுவில் பங்கேற்க வேண்டும், பெண் பேச்சாளர்களும், கலைக்குழுவினரும் இடம் பெற வேண்டும், பயண நோக்கம் குறித்த டீசர்ட்டை தயாரிப்பது, சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாள் பயணத்தையும் பல்வேறு நவீன வடிவத்தில் கொண்டு போய் சேர்ப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டன. உடனுக்குடன் செய்திகளை பதிவேற்றுவதற்கும் குழு ஒன்றை அமைக்க பரிசீலிக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலுல் பயணத்தின் நோக்கத்தில் ஒத்த கருத்துகளைக் கொண்ட ஆதரவு சக்திகளோடு முன்கூடியே தொடர்பு கொண்டு ஆதரவைப் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் குழப்பங்கள் மேலோங்கி உள்ள சூழலில் பெரியாரின் சமுதாயக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் பரப்புரை நோக்கத்தை தோழர்கள் பாராட்டி வரவேற்றனர். குரலற்றவர்களின் குரலாக அரசியல் அதிகாரத்திலும் சமூக வளர்ச்சியிலும் புறக்கணிக்கப்படும் விளிம்புநிலை சமுதாய பிரிவினரான வண்ணார், நாவிதர், குயவர், ஒட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக பிரிவினரின் உரிமைகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் குரல் கொடுக்க முன்வந்ததை தோழர்கள் பாராட்டியதோடு சமூகநீதியின் தேவையையும் அர்த்தத்தையும் இது உணர்த்துகிறது என்று பல தோழர்கள் குறிப்பிட்டனர். பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இ.ரா. உமாபதி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர்கள் மா. வேழ வேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் ம.கி. எட்வின் பிரபாகரன், ந. தட்சிணாமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப. அருண், தாம்பரம் நகர அமைப்பாளர் அருண் கோமதி, இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், இரண்யா, திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பகுதி அமைப்பாளர்கள் த.நா. சூர்யா, விஜயன், சதீஷ் கண்ணன், தமிழ்நாடு மாணவர் கழகம்: இளவரசன், ஷர்மிளா, குடிஅரசு, நிமிர்வோம் வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த், தோழர்கள் பாரி சிவா, முழக்கம் உமாபதி, சிபி, வாசிமபதம சரவணகுமார், சுரேந்தர், தீபக், ஏசுகுமார், திநகர் லட்சுமணன், திருவல்லிக்கேணி லட்சுமணன், புருஷோத்தமன், அசோக், ஆனந்தி, அஸ்வின், குறளரசி, தினகரன், மயிலை அருண், சஞ்சய், ஜேம்ஸ், மோகன், செந்தில், மாணிக்கம், குமார், சித்தார்த்தன், மஞ்சுநாதன், தாமரை, அகராதி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

தோழர் இரண்யா தனது மகன் அகராதியின் பிறந்தநாள் மகிழ்ச்சியாக கழகத்துக்கு ஒலிபெருக்கியை தனது பரிசாக வழங்குவதாக அறிவித்தார். செம்பாக்கம் ராஜா சங்கர், நுங்கம்பாக்கம் மகேந்திரநாத், ராயப்பேட்டை ஆதன், சோழிங்கநல்லூர் அன்பு சுரேந்தர் ஆகியோர் இயக்கத்தில் இணைந்தனர்.
(சேலம், திருப்பூர் மாவட்டச் செய்திகள் அடுத்த இதழில்..)
பெரியார் முழக்கம் இதழ் 09072026

You may also like...