கள்ளக்குறிச்சியில் நீட் தேர்வுக்கு எதிரான ஒரு நாள் பரப்புரை!

கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில், 20-06-2026 சனிக்கிழமை அன்று கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் மருத்துவக் கனவைச் சிதைக்கும் `நீட்’ தேர்வை இரத்து செய்யக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு நாள் பரப்புரைப் பயணம் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பாபா தலைமையில் நடைபெற்றது.

காலை 10 மணி மூங்கில்துறைப்பட்டு, காலை 12 மணி மேல் சிறுவள்ளூர் கூட்டு சாலை, மாலை 3 மணி வாணாபுரம் கூட்டுச்சாலை, மாலை 6 மணிக்கு கடுவனூர் பேருந்து நிலைத்தியலும் நடைபெற்றது. இதில் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார், மாவட்டச் செயலாளர் க.ராமர், மாவட்டத் தலைவர் க.மதியழகன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.அ.இளையரசன் திமுக கல்லக்குறிச்சி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விசய் ஆனந்து மற்றும் சி.பி.அய்யை சார்ந்த சையத் கரீம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மு.நாகராஜ், ரிஷிவந்திய ஓன்றிய அமைப்பாளர் இரா. கார்மேகம், வீ.முருகன், ரிஷிவந்திய ஒன்றியத் தலைவர் மா.குமார், கி.ஆனந்தன் ஏ.ஜெயப்பிரகாஷ் சு.வல்லரசு, இரா.ஜீவா ஆகியோர் கலந்துகொண்டனர்
பெரியார் முழக்கம் இதழ் 02072026

You may also like...