நங்கவள்ளி கழகத் தோழர்களின் சிறப்பான செயல்!

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் தலைவர்களின் படங்கள் வரையப்பட்டன. அதில் தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படங்களை மட்டும் பெயர் பட்டியலில் இருந்தும் அவற்றை வரையாமல் தவிர்த்தனர்.கழகத் தோழர்கள் நங்கவள்ளி கிருஷ்ணன், சந்திரசேகரன், உமாசங்கர், மனோஜ் ஆகியோர் பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களிடம் இதுகுறித்து வலியுறுத்தினர். நமது கோரிக்கையை ஏற்று தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் படங்கள் வரையப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நடந்த வரையும் பணி 10.07.2026 அன்று முடிவடைந்துள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 16072026

You may also like...