Category: பெரியார் முழக்கம் 2025

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் ஒட்டிய ஸ்டிக்கர்-விடுதலை இராசேந்திரன்

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் ஒட்டிய ஸ்டிக்கர்-விடுதலை இராசேந்திரன்

ஆளுநர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. நீதிமன்ற அவமதிப்புச் சின்னமாக இங்கேயே இருக்கட்டும். உச்ச நீதிமன்றம் ஆளுநரின் மீது இரண்டு ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளது. சட்ட விரோதமாக முறைகேடாக செயல்பட்டுள்ளார் என்பது ஒன்று anti constitunal and erroneous, நல்ல எண்ணம் கொண்டவராக நடந்து கொள்ளவில்லை என்பது இரண்டு. The conduct exhibited on part of the Governor, as it clearly appears from the events that have transpired even during the course of the present litigation, has been lacking in bonafides. There have been clear instances where the Governor has failed in showing due deference and respect to the judgments and directions of this Court. In...

பெரியார் இயக்கத் தொண்டர்களைப் போல் உலக வரலாற்றில் எவரும் இல்லை- -உதயநிதி ஸ்டாலின்

பெரியார் இயக்கத் தொண்டர்களைப் போல் உலக வரலாற்றில் எவரும் இல்லை- -உதயநிதி ஸ்டாலின்

கோவையில் ஏப்ரல் 29-ல் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி பேசியதாவது: தந்தை பெரி­யா­ரைப் போல தன் கொள்கைக்காக உழைத்த தலை­வர் உலக வர­லாற்­றி­லேயே எங்கு தேடி­னா­லும் கிடைக்க மாட்­டார். பெரி­யார் இறந்து 51 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. ஆனால், தமிழ்­நாட்­டின் அர­சி­யலை இன்­றும் அவர்­தான் தீர்­மா­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றார் என்­றால், அது­தான் பெரி­யா­ரின் சிறப்பு. இன்­னும் பெரு­மை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், இன்­றைக்கு உங்­க­ளின் அழைப்பை ஏற்று வந்து இருக்­கி­றேன். தி.மு.க–வின் இளைஞர் அணிச் செய­லா­ள­ராக வந்­தி­ருக்­கி­றேன், அது பெரு­மை­தான். நீங்­கள் எல்­லோ­ரும் சொன்­ன­தைப்­போல் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக வந்­தி­ருக்­கி­றேன், அது­வும் பெரு­மை­தான். தமிழ்­நாட்­டின் துணை முத­ல­மைச்­ச­ராக வந்­தி­ருக்­கி­றேன், அது­வும் பெரு­மை­தான். ஆனால், அவை எல்­லா­வற்­றை­யும்­விட மிகப் பெரு­மை­யாக நான் கரு­து­வது என்­ன­வென்­றால் உண்­மை­யான பெரி­யா­ரின் கொள்­கைப் பேர­னாக இந்த மாநாட்­டிற்கு வந்­தி­ருக்­கி­றேன். அத­னால்­தான் பெரி­யா­ரின் தொண்­டர்­கள் மத்­தி­யில் பேசும்­பொ­ழுது எனக்கு தனி வித­மான...

ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…

ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு எனும் முழக்கத்தோடு.. 25.04.2025 வெள்ளி மாலை 4.00 மணியளவில் சேலம் ரயில் நிலையத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார். கழக மாநில வெளியீட்டுச் செயலாளர் கோபி.இராம.இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ராவண பிரபு, CPML மக்கள் விடுதலை ப.செல்வகுமார், உழைப்போர் இயக்கம் கண்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கலந்து கொண்டவர்கள்: அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், தலைமைக் குழு...

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

கோவை: காஞ்சி விஜயேந்திர சங்கராச்சாரி அரசியல் சட்டத்திற்கு எதிராக இன ஒதுக்கல் பேசியதைக் கண்டித்து கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு, கழகத்தின் கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் இரவிக்குமார், தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் இளவேனில், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், Cpi ml ரெட் ஸ்டார் இனியவன், மக்கள் அதிகாரம் கணேஷ், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிக்குமார் மற்றும் தோழமை அமைப்பினரும், திராவிடர் விடுதலைக் கழக மாநகரச் செயலாளர் வெங்கட், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாதவன், சதீஷ், ஸ்டாலின் ராஜா, மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், கௌதம், கதிரவன் கலந்து கொண்டனர். நாமக்கல்: குமாரபாளையம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாலை...

போலித் தமிழ்தேசியர்களுக்கு மறுப்பு! புரட்சிக் கவிஞர் ‘திராவிட’ எதிர்ப்பாளரா?

போலித் தமிழ்தேசியர்களுக்கு மறுப்பு! புரட்சிக் கவிஞர் ‘திராவிட’ எதிர்ப்பாளரா?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியார் மறுத்து திராவிடம் பேசினார் என்று “விலை போகும் தமிழ்த்தேசியங்கள்” பிதற்றி வருகின்றன. அந்த புரட்டுக்களை மறுத்து மறைந்த திராவிட இயக்கப் பெருங்கவி தமிழேந்தி ‘பாசறை முரசு’ இதழுக்கு எழுதிய கட்டுரை புரட்சிக் கவிஞர் நினைவு நாளையொட்டி வெளியிடப்படுகிறது. “திராவிடர்’ என்ற சொல் இந்தியர் என்ற சொல்லுக்கு எதிரான பொருளிலும் அமைந்தது. மேலும் “பார்ப்பனர் அல்லாதார்’ என்ற சொல்லைப் புறந்தள்ளிய பெரியார், “நம்மைக் குறிக்கப் பார்ப்பனர் அல்லாதோர் என்கிறோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக் கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நாம் ஏன் அல்லதோர் ஆக வேண்டும்?” என்று விளக்கம் தந்தார். பின் நாட்களில் “திராவிடம்’ என்பதும் “தமிழகம்’ என்பதும் ஒன்றே என்று பெரியார் அரசியல் நிலைப்பாடு எடுத்தார். பெரியாரின் கருத்துக்கு இசைவாகவே ‘திராவிடம்’ என்பதும் ‘தமிழகம்’ என்பதும் ஒன்றே எனப் பாவேந்தர் பாட்டிசைத்தார். மன்னும் தமிழே திராவிடம் என்று திரிந்த தென்றால் மறுப்பவர் இல்லை திருத்தமிழம் எனும்...

சந்துரு பரிந்துரைகளை நிறைவேற்றுக!

சந்துரு பரிந்துரைகளை நிறைவேற்றுக!

“அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளங்களைக் குறிக்கும் கயிறுகள், டீ-சர்ட்டுகளை அணிய தடைவிதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும். கிருஷ்ணகிரி மாவட்டம் சொப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் வீரப்பன் உருவம் மற்றும் ஒரு அரசியல் கட்சியை அடையாளப்படுத்தும் டீ-சர்ட்டுகளையும் அணிந்து திரைப்படப் பாடலுக்கு நடனமாடி உள்ளனர். பெற்றோர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வந்தன. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறிச் செயல்படும் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது. அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அரசு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. அந்த விழாக்கள் இலக்கியம் மற்றும் பண்பாடுகளைப் போற்றும் விதமாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக சாதியைப் பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் இடம் பெறக்கூடாது...

ஆட்சிக்கு மதச்சாயம் பூசலாமா? அமைச்சரே?

ஆட்சிக்கு மதச்சாயம் பூசலாமா? அமைச்சரே?

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா? என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலளிக்கையில், மூடநம்பிக்கை மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது. எனவே, சட்டம் கொண்டு வர முடியாது என்று பதில் அளித்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் பகுத்தறிவும் அறிவியலும் பாடத்திட்டத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்று பேசி உள்ளார்.இந்திய அரசியல் சட்டம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அமலில் இருக்கிறது. கலைஞர் முதல்வராக இருந்தபோது பேராசிரியர் நன்னன் தலைமையில் ‘மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு’ ஒன்றை உருவாக்கினார். ‘பகுத்தறிவு கலை இலக்கிய மன்றம்’ திமுகவின் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு ஏற்கெனவே ராமன் சமூக நீதியின் சின்னம் என்று பேசிய அமைச்சர் ரகுபதி இப்போது மூடநம்பிக்கைகளை...

உண்மைக்கு அஞ்சும் கோழைகள்!

உண்மைக்கு அஞ்சும் கோழைகள்!

சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் புலே. இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தது படக்குழு. இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியம், படத்தின் பல காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து உரையாடல்களை நீக்க வலியுறுத்தியுள்ளது. இதனால் திரைப்படம் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குத் திரையிடத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மையமாக, படத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்டார்கள், ‘மஹர், மாங், பேஷ்வா என சாதிப் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது. மூன்றாயிரம் ஆண்டுகள் அடிமைத்தனம் என்றெல்லாம் குறிப்பிடக்கூடாது’ எனப் பல இடங்களில் உரையாடல்களை நீக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார்கள். படத்தின், முன்னோட்டக் காட்சிகளில் பார்ப்பன ஒடுக்குமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், திரைப்பட வாரியத்தின் இந்தப் போக்கு குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் “இந்த சாதிய, இன வெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது” என்று விமர்சனம் செய்துள்ளார். “எது அவர்களைத் தொந்தரவு...

மாற்றங்களுக்கு முகம் கொடுத்த ‘போப் பிரான்சிஸ்’!

மாற்றங்களுக்கு முகம் கொடுத்த ‘போப் பிரான்சிஸ்’!

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் நீண்ட மருத்துவப் போராட்டத்திற்கு பிறகு விடைபெற்றுக்கொண்டார். நம்மை பொறுத்தவரை மதங்கள் மனித சமூகத்துக்கு கேடு விளைவிப்பவைதான். மனித சமூகத்தில் சுரண்டலுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் கலவரங்களுக்கும் ஊற்றுக் கண்களாகவே மதங்கள் இருக்கின்றன. கடவுளை விட மதங்கள்தான்‌ ஆபத்தானவை என்று பெரியார் கூறினார். அனைத்துக் கடவுளும் ஒன்றுதான்‌ என்பதை மதவாதிகள் ஏற்றுக்கொள்ளவார்கள். அனைத்து மதங்களும் ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். மதத்தின் பெயரால் சிந்தப்பட்ட குருதிகளை வரலாறுகள் உணர்த்திக்கொண்டு இருக்கின்றன. ஆனாலும் மதங்களின் நாடுகள் உலக வரைபடத்தில் இருக்கவே செய்கின்றன. காலத்தின் மாற்றங்களை கருத்தில்கொள்ள மறுத்து பிடிவாதம் காட்டும் மதக் கருத்தியல்வாதிகள் நிறைந்த உலகில் போப் பிரான்சிஸ் சீர்த்திருத்தங்களுக்கு முகம் கொடுத்து இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 2019-ல் ஐக்கிய அரபு அமீரகம் சென்று, கத்தோலிக்க-இஸ்லாமிய உறவுகளை வலுப்படுத்தினார். ‘திருச்சபை ஏழைகளுக்கானது’ என்ற கொள்கையை வலியுறுத்தி, உலகளாவிய ஏழ்மை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்....

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

எழுச்சியுடன் நடந்த கழக ஆர்ப்பாட்டம் காஞ்சியில் சங்கராச்சாரிகளின்‌ முகமூடி கிழிப்பு!

பெரியார் மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசிய பார்ப்பனக் கைக்கூலிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்களை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி, பார்ப்பன சங்கராச்சாரிகளின் பார்ப்பன முகமூடியைக் கிழித்துக் காட்டியது. பெரியார் மீது கைவைத்தால் சங்கரச்சாரிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் களம் இறங்கியது. குறிப்பாக சங்கரமடம் உள்ள காஞ்சிபுரத்தில் 21.04.2025 மாலை 5 மணியளவில் பேருந்து நிலையம் அருகே எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனி பேருந்தில் காஞ்சிபுரம் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். காஞ்சி விஜயேந்திரன் கடந்த ஜனவரி 19 அன்று பெங்களூரில் ‘பிராமணர்கள்’ மாநாட்டில் இந்து சமூகத்தில் சூத்திர, பஞ்சமர்களிடம் இருந்து பிராமணர்கள் விலகி தங்களது மேலாண்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற இன ஒதுக்கல் கருத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசி இருந்தார். சூத்திர, பஞ்சமர்கள் அடிமைப்பட்டவர்கள் என்ற மனுதர்மம் விதிக்கும் கோட்பாடுகளுக்கு உயிரூட்டுவதே அவரது பேச்சின்...

மகளிர் ஒன்று கூடல்!

மகளிர் ஒன்று கூடல்!

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம் 30.03.2025 ஞாயிறு காலை 11.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை ஏற்காடு JP ரெசிடென்சில் சிறப்பாக நடைபெற்றது. கடவுள் மறுப்பு வாசகம் திருப்பூர் யாழினி கூற கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தோழர் சுதா தலைமை வகித்தார். சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தோழர் திவ்யா வரவேற்புரை நிகழ்த்தினார். கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்களும் தோழர்களிடையே கருத்துரையாற்றினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு குடும்பங்களில் கடைபிடிக்கப்படும் மூடநம்பிக்கையால் பெண்ணடிமைத்தனம் எவ்வாறு வளர்கிறது, பெண்கல்வியால் தமிழ் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் தோழர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இறுதியாக சேலம்...

பள்ளிபாளையம் தோழர்கள் மீதான வழக்குகளும் ரத்து!

பள்ளிபாளையம் தோழர்கள் மீதான வழக்குகளும் ரத்து!

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த மனிதத் தன்மையற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்றைய அதிமுக அரசு தோழர்கள் மீது பொய் வழக்குகளை போட்டது. அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி விஜேந்திரனை கண்டித்து கொடும்பாவி எரிப்புப் போராட்டம் பள்ளிபாளையத்தில் நடத்தப்பட்டது. திருச்செங்கோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரண்டு வழக்குகளிலும் கழகத் தோழர்கள் சரவணன், முத்துப்பாண்டி, கோபி, தியாகு, அஜ்மீர் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர் குமாரபாளையம் வழக்கறிஞர் கார்த்தி அவர்கள் சிறப்பாக வாதாடி தோழர்களை விடுவித்தார். பெரியார் முழக்கம் 17042025இதழ்

பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?  தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை!

பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்? தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை!

சென்னை: 18/3/25 செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், உத்திரமேரூர் பேருந்து நிலையம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம், செய்யாறு – ஆரணி கூட்டுச் சாலை ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கருத்துரையாற்றிய தோழர்கள்: இரா. உமாபதி, ரவிபாரதி, சுகுமார், ம.கி. எட்வின் பிரபாகரன், காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு), அருண் கோமதி, திலகவதி (மக்கள் அதிகாரம்) ஆகியோர். பொன்ராஜ் – வீரமணி – கார்மேகம் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அமீன் (தமுமுக), அ.வெ.முரளி (திக), ஆதித்ய கரிகாலன் ஆகியோர் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆதித்ய கரிகாலன் தங்கும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். சுகுமாறன், குமார், சூர்யா, கோபி, இரண்யா, வீரா, அசோக், முரளி, அருண் கோமதி, அருண் (இளைஞரணி) ஆகியோர் கலந்து கொண்டனர். 19/3/25 மதுராந்தகம் பேருந்து நிலையம், சோத்துப்பாக்கம் சந்திப்பு, திண்டிவனம் காந்தி சிலை, மயிலம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சென்னை அணியின் தெருமுனைக்...

“இந்து மதத்தை நாசப்படுத்துகிற கொடிய நஞ்சு பார்ப்பனியமே”

“இந்து மதத்தை நாசப்படுத்துகிற கொடிய நஞ்சு பார்ப்பனியமே”

அம்பேத்கரை உரையாற்ற அழைத்திருந்த ஜாத் பட்தோடக் மண்டல் அமைப்பில் 1920-ஆம் ஆண்டுகளில் துணைத் தலைவராக இருந்தவர் பெரியார். அப்போதும் பெரியாரை ‘நாத்திகர்’, ‘இந்து விரோதி’.’பார்ப்பன எதிர்ப்பாளர்’ என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் கூறிய புகாரின் அடிப்படையில் பெரியார் துணைத் தலைவர் பதவியில் நீட்டிக்கப்பட்டவில்லை. அதே அமைப்புதான் 1936-இல் அம்பேத்கரை ஜாதி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை ஏற்க அழைத்து, அவரது உரையை மாற்றியமைக்க வற்புறுத்தி அம்பேத்கர் மறுத்த நிலையில் மாநாட்டையே நிறுத்தியது. குடிஅரசில் பதிவுசெய்த அம்பேத்கர் உரையை ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்ற தலைப்பில் 4 அணா விலையில் நூலாக வெளியிட்டார் பெரியார். அம்பேத்கரின் உரை குறித்து காந்தியும் தனது ‘அரிஜன்’ நாளேட்டில் விமர்சித்து எழுதினார். அம்பேத்கர் எழுப்பிய வாதங்களுக்கு எந்த பதிலும் கூறாத காந்தி. “ஒரு மதத்தை அதன் மோசமான உதாரணங்களைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. அது உருவாக்கிய மிகச் சிறந்த உதாரணங்களைக் கொண்டே மதிப்பிட வேண்டும்” என்பதே காந்தியாரின் பதிலாக இருந்தது....

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் கடிவாளம்!

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் கடிவாளம்!

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அரசியலமைப்புத் தலைவராக பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளின்படியே நடக்க வேண்டும். அவர்களுக்கென்று தனி அதிகாரம் உள்ளதாகக் கருதக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் 415 பக்க தீர்ப்பில், ஆளுநர்களின் எதேச்சதிகாரப் போக்கிற்குக் கடிவாளம் போடும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தீர்ப்பின் நகல் அனைத்து மாநில உயர்நீதிமன்றங்கள், ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கும் சில முக்கிய அறிவுரைகள் இத்தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புப் பிரிவு 201ன் கீழ் குடியரசுத் தலைவர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களை பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு காலதாமதம் ஏற்பட்டால் அந்த மசோதா கொண்டு வந்ததன் நோக்கம் நீர்த்துபோகிவிடும். பிரிவு 201-இன் கீழ் குடியரசுத் தலைவர் தேவையில்லாமல் காலதாமதம் செய்யக்கூடாது. எனவே, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை...

“குரியன் ஜோசப்” குழு காலத்தின் தேவை!

“குரியன் ஜோசப்” குழு காலத்தின் தேவை!

ஒன்றிய பாஜக ஆட்சி இந்திய அரசியல் அமைப்புக்குள் செயல்படும் மாநிலங்களின் அடையாளங்களை சிதைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. உரிமைகளை பறிப்பதற்கான முறைகேடான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது ஒன்றிய பாஜக ஆட்சி. இந்து ராஷ்டிரம் உருவாக்க மாநிலங்களின் மொழி மற்றும் கலாச்சாரங்கள் அவர்களுக்கு பெரும் தடையாக வந்து நிற்கின்றன. தமிழ்நாடு அரசு குறிவைத்து நசுக்கப்படுகிறது. இந்து ராஷ்டிராவை திராவிட மாடல் முற்றாக எதிர்த்து நிற்பதே இதற்குக் காரணம். ஆளுநர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு தந்த நெருக்கடிகளை சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார் தமிழ்நாடு முதல்வர். இது மாநிலங்களின் வரலாற்றில் நிலைப்பெற்று நிற்கும் சாதனை. இதைத் தொடர்ந்து ஒன்றிய ஆட்சியின் உரிமை பறிப்பு அடாவடிகளை எதிர்கொள்ள முன்னாள் உச்சநீதிமன்றம் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஒன்றிய ஆட்சி சட்டத்தை எப்படி முறைகேடாகப் பயன்படுத்துகிறது என்பது குறித்தும் மாநில உரிமைகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளையும் இந்தக்...

சனாதன-ஜாதி எதிர்ப்புக் கூட்டங்களுடன்  கழகம் எடுத்த அம்பேத்கர் விழாக்கள்!

சனாதன-ஜாதி எதிர்ப்புக் கூட்டங்களுடன் கழகம் எடுத்த அம்பேத்கர் விழாக்கள்!

சென்னை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, 14-04-25 காலை 9:30 மணியளவில், அடையார் அம்பேத்கர் மணி மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 10:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் மயிலாப்பூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது… மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், கழக இளைஞரணி அமைப்பாளர் ப.அருண ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். தென்சென்னை காலை 8 மணிக்கு, சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு, தோழர்கள் மாலை அணிவித்து, கொள்கை முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “அம்பேத்கருக்கு இந்துமதச் சாயம் பூசும் அவதூறுகளுக்கு மறுப்பு” நூல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வை திவிக தென்சென்னை மாவட்ட...

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

சேலம்: 18/03/2025 வீரகனூர் பேருந்து நிலையம், பெரம்பலூர் வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைகணபதி, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் சுதாகர் ஆகியோர் தலைமை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை தாமோதரன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரை...

சட்டங்களே வேண்டாம்; சாஸ்திரங்களே போதும்! – காஞ்சி சங்கராச்சாரியின் நச்சுக் கருத்துக்கள்(2)

சட்டங்களே வேண்டாம்; சாஸ்திரங்களே போதும்! – காஞ்சி சங்கராச்சாரியின் நச்சுக் கருத்துக்கள்(2)

“பெண்களுக்கு சொத்துரிமை கூடாது” பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினால் ஸ்த்ரி தர்மமே பாழாகிவிடும்அதற்கு வர இருந்த சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னவர் காஞ்சி சீனியர் சங்கராச்சாரி. நாடாளுமன்றத்தில் நேரு பெண்களுக்கு சொத்துரிமை தரும் மசோதாவை கொண்டு வந்த போது அதை தடுத்து நிறுத்த தீவிர முயற்சிகளில் ஈடுப்பட்டவர்‌ சங்கராச்சாரி. இது குறித்து அக்னி கோத்திரம்” ராமானுஜ தாத்தாச்சாரியார் இந்து மதம் எங்கே போகிறது? நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “இதப்பார்த்தீரா.. ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயிடுவா. அபாண்டமா, அபச்சாரமா போயிடும்” -என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகாபெரியவர். நான் சிரித்தபடி பதில் சொன்னேன். ‘எனக்கு நல்லதுதான். ஸ்வாமி… என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு. ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான்! -இந்த பதிலைக் கேட்டதும். “அசட்டுத்தனமா...

சென்னையில் மார்க்ஸ் சிலை!

சென்னையில் மார்க்ஸ் சிலை!

தமிழ்நாட்டில் காரல் மார்க்ஸ் சிலை திறக்கப்படும் என்று திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார் சோவியத் சோஷலிச ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பு புரட்சிகளை உறுதியாக அடக்கியவர் ஸ்டாலின், பெரியார் இயக்கம் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரஷ்யாவை உறுதியாக ஆதரித்தது அதன் நினைவாகத்தான் கலைஞர் தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார் சோவியத் பயணம் மேற்கொண்ட பெரியார், ஸ்டாலின் பங்கேற்ற மே தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலகட்டத்தில் தான் ஸ்டாலின் அதிபர் பதவிக்கு வந்தார் எதிர் புரட்சிகளை முறியடித்து சோவியத்தில் சோசியலிசத்தை உறுதிப்படுத்திய ஸ்டாலின் பெயரை த் தாங்கி நிற்கும் உலகின் ஒரே முதல்வர் திராவிட ஆட்சியின் முதல்வர் தான் : காரல் மார்க்சின் சிலையை திறந்து வைக்கும் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது மிகச் சிறப்பு; மிகப் பொருத்தம். – விடுதலை இராசேந்திரன் பெரியார் முழக்கம் 10042025இதழ்

வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளது. இந்த 4 ஆண்டுகளில் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. அவற்றினால் எட்டப்பட்ட பலன்கள் என்னவென்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சி, 9.69% என அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட 8% வளர்ச்சி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆய்வறிக்கையில் உத்தேசிக்கப்பட்ட 9.3% வளர்ச்சி ஆகியவற்றை விடவும் அதிகமான வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு எட்டியிராத அதிகபட்ச வளர்ச்சி என்பது மட்டுமல்ல, இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை இந்த ஆண்டு பதிவு செய்திருப்பது தமிழ்நாடுதான். குறிப்பாக சேவைகள் துறை 12.7%, இரண்டாம் நிலை துறைகள் 9% வளர்ச்சி கண்டுள்ளன. ஒன்றியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க...

வீழ்த்தப்பட்டது ரவி அல்ல, அமித்ஷா!

வீழ்த்தப்பட்டது ரவி அல்ல, அமித்ஷா!

மாநில அரசை விருப்பம் போல கலைத்து விளையாடிய ஒன்றிய அரசுக்கு, 1994-இல் `எஸ்.ஆர்.பொம்மை வழக்கு’ கடிவாளம் போட்டதைப் போல, ஆளுநர்களின் எதேச்சிகாரப் போக்குக்குக் கடிவாளம் போடும் தீர்ப்பை தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு போராடி வென்றிருக்கிறது. பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஆர்.என்.ரவிக்கு எதிராக தி.மு.க. அரசு தொடர்ந்த வழக்கில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை, மாநில அரசைப் பின்பற்றித்தான் ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாகச் செயல்படக்கூடாது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார்” என்று தீர்ப்பிலேயே கண்டித்துள்ளது. மேலும், “அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது”...

ம.பி.யில்  பார்ப்பனரின் ‘இன ஒதுக்கல்’ சனாதன இந்துக்களுக்கு மட்டும் தனிக் கிராமாம்!

ம.பி.யில் பார்ப்பனரின் ‘இன ஒதுக்கல்’ சனாதன இந்துக்களுக்கு மட்டும் தனிக் கிராமாம்!

சனாதன இந்துக்களுக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனி கிராமம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அனுமார் கோயில் பார்ப்பன அர்ச்சகர். 1000 சனாதன இந்துக்கள் இந்த கிராமத்தில் குடியேறுகிறார்கள். சனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த கிராமத்தில் நுழைய தடை விதிக்கப்படும். அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்த தனிக் குடியிருப்புக்கு மாநில பாஜக ஆட்சி பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்துக்கள் மட்டும் வாழும் முதல் கிராமம் ம.பி. பாகேஷ்வர் அனுமர் கோயில் சார்பில் அமைகிறது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் கன்ஞ் மாவட்டத்தின் சத்தர்பூரில் உள்ளது கதா கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ‘பாகேஷ்வர் தாம்’ எனும் அனுமர் கோயில் உள்ளது. இதன் தலைமை அர்ச்சகர் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, பாகேஷ்வர் தாம் ஜன் சேவா சமிதி என்ற சமூக நல அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பின் சார்பில் கோயிலுக்கு அருகில் உள்ள பரந்த பகுதியில் ஒரு இந்து கிராமத்தை உருவாக்க இதற்காக...

“சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை வேண்டும்     தமிழ்நாடு முதல்வருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை !”

“சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை வேண்டும் தமிழ்நாடு முதல்வருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை !”

இது குறித்து கழகத் தலைவர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்தத் தீர்ப்பின் வழியாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன என்பது குறித்தும், ஒப்புதல் வழங்குவதற்கான கால வரையறை குறித்தும் இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்தத் தீர்ப்பினால் மும்மொழிக் கொள்கை ஆனாலும், நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை ஆனாலும் வழிகாட்டி மாநிலமாக திகழும் தமிழ்நாடு, அதன் செயல்திறன் மிக்க முதலமைச்சர் இந்த வகையிலும் இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக ஒன்றிய ஆளுங்கட்சி ஆளாத மாநிலங்களுக்கு ஒரு புதிய தெம்பினை ஊட்டி இருக்கிறார். அதற்காக நாம் தமிழ்நாடு முதலமைச்சரை மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறோம். மேலும் இந்தத் தீர்ப்பு ஒப்புதல் வழங்கிய சட்ட த்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதல்வரே ஆகிவிடுகிறார்...

மோடி நடத்துவது “உயர்ஜாதி” ஆட்சி –

மோடி நடத்துவது “உயர்ஜாதி” ஆட்சி –

“பார்ப்பன‌ உயர் ஜாதி சுரண்டலுக்கு வழிவகுக்கும் ஜாதி அமைப்பு. இதுகுறித்து நான் ஆழமாக ஆராய்ந்தேன். இந்த நாட்டில் பார்ப்பன உயர் ஜாதியில் பிறக்காத ஏனையோர் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்கின்றனர்” என்று ராகுல் காந்தி பேசியுள்ளார். கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி பாட்னாவில் நடந்த ‘அரசியல் சட்டத்தை காப்போம்’ மாநாட்டில் ராகுல் காந்தி பேசினார். மூன்றாவது முறையாக பீகார் வந்துள்ளார் ராகுல் காந்தி, “காந்தியடிகள் உண்மையின் சோதனை நூலை எழுதினார். மோடி பொய்களின் சோதனையை எழுதிக் கொண்டிருக்கிறார்” என்று கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாகத் தாக்கினார். மேலும் அவர் பேசியதாவது: அரசியல் சட்டம் சாவர்க்கரின் சிந்தனை அல்ல; மாபெரும் தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனையைக் கொண்டது. இப்போது நடக்கும் ஆட்சி பார்ப்பன உயர்ஜாதி நலனுக்காகவே நடக்கிறது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிறப்படுத்தப்பட்ட மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்த நாட்டில் நீங்கள் பார்ப்பனராகவோ,‌‌ உயர் ஜாதியினராகவோ பிறக்காவிட்டால் இரண்டாம்...

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

விழுப்புரம்: 17/03/2025 (திங்கள்) கீழ்பெண்ணாத்தூர் கலைஞர் பேருந்து நிலையம், கடலாடிகுளம் பேருந்து நிலையம், செஞ்சி பேருந்து நிலையம், அப்பம்பட்டு மசூதி அருகில் நடைபெற்றது. காலை உணவு மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தோழர் பொன்.சுப்ரமணி வழங்கினார். நம் பிரச்சார பயணத்தின் தலைப்பான பெரியார் ஏன் எதிரிகளை பதறவைக்கிறார் என்ற செய்தியை அவர்களின் சிந்தனைப் பலகையில் 17/3/2025 அன்றைய செய்தியாக எழுதி வரவேற்றனர், மேலும் ராமநாதன்,கோதண்டராமன், ஆதிமூலம், தமிழ் மக்கள் கட்சியை சார்ந்த முகிலன் அம்பேத்கர் மக்கள் கட்சி விழுப்புரம் மாவட்ட செயலாளர் சு.மழைமேனி பாண்டியன், பகுத்தறிவு கழகத்தை சார்ந்த துரை.திருநாவுக்கரசு, பேராசிரியர். ஜாக்குலின், வி.சி.க. விழுப்புரம் மாவட்ட செயலாளர் தனஞ்செழியன், திராவிடர் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கோபண்ணா, பேராசிரியர் நந்தகுமார், தமுமுக அலிஜான் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் செயலாளர் ராசநாயகம், க.ராமர், பூ.ஆ இளையரசன், தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர்...

காஞ்சி சீனியரின் “நச்சுக் கருத்துக்கள்”-

காஞ்சி சீனியரின் “நச்சுக் கருத்துக்கள்”-

பார்ப்பனர் என்றால் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவர்கள் என்று கூறும் பார்ப்பனர்களே! பார்ப்பன அடிமைகளே! இதோ காஞ்சி சீனியர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்துக்களை தொகுத்துத் தந்து இருக்கிறோம் இதற்கு என்ன பதில்…. “நான்கு வர்ணம் தேவையே!” சங்கராச்சாரியார் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலிலே வெளிப்படையாகவே சொல்லு கின்றார். “நம் மதத்தில் (இந்துமதம்) ‘பிராமணர்’, ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த “வர்ணங்களை நாம் “ஜாதி” என்கிறோம். வாஸ்தவத்தில் ஜாதி வேறே, வர்ணம் வேறே: வர்ணங்கள் மேலே சொன்ன நான்குதான். இதற்குள்ளேயே ஒவ்வொன்றிலும் பல ஜாதிகள் இருக்கின்றன. “பிராமண” வர்ணத்திலேயே அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல சாதிகள் இருக்கின்றன. நான்காம் வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டி, நாயக்கர், நாயுடு, கவுண்டர், படையாட்சி என்கிற மாதிரி எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன. நான்கு ஜாதிகளுக்கும் (அதாவது வர்ண ங்களுக்கும்) சாஸ்திரங்களில் வெவ்வேறு விதமான கர்மாக்களையும் ஆசாரங்களையும் விதித்திருக்கிறது. இதனால் ஒரே...

பெரியார் முழக்கம் சந்தாக்களை விரைந்து அனுப்புவீர்…

பெரியார் முழக்கம் சந்தாக்களை விரைந்து அனுப்புவீர்…

புரட்சிப் பெரியார் முழக்கம் ஆண்டு சந்தா : ரூ.300/- ஐந்தாண்டு சந்தா : ரூ.1500/- தொடர்புக்கு : 15. தோழமை, வெங்கடேஸ்வரா நகர், பெருங்குடி, சென்னை – 600096. பேச : 63697 76351. பெரியார் முழக்கம் 03042025இதழ்

பஞ்சாங்கப் புரட்டு அம்பலம்!

பஞ்சாங்கப் புரட்டு அம்பலம்!

தமிழ்நாடு அரசியலில் “ கூட்டணிப் பெயர்ச்சிகள்’ தொடங்கி உள்ளன. மக்கள் குழம்பி நிற்கிறார்கள் அதே போல் “சனிப் பெயர்ச்சியிலும்” குழப்பங்கள். வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது என்று ‘த்ருக்’ பஞ்சாங்கம் கூறுகிறது. வாக்கிய பஞ்சாங்கம் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி இல்லை என்று கூறுகிறது. திருநள்ளாறு சனி பகவான் கோயில் நிர்வாகம் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி இல்லை என்று கூறிவிட்டது. ஏனைய‌ சோதிடர்கள் உண்டு என்று கூறுகிறார்கள். அன்றாடம்‌ ராசி பலன்களை நம்பும் நம்பிக்கையாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள். பஞ்சாங்கங்கள் அறிவியலுக்கு எதிரானது என்பதற்கு இதுவே சான்று. அறிவியல் என்றால் ஒரு கருத்துதான் இருக்க முடியும் விண்வெளியில் நிகழும் மாற்றங்களை அறிவியல் ரீதியாக ‘ஜீயோ சென்டிரிக் டாட் காம்’ என்ற‌ இணையதளம் விளக்குகிறது. ஆனால் இது மக்களுக்கான கிரகப் பலன்களைக் கூறாது. காரணம், அது அறிவியல் அல்ல மக்களோ பஞ்சாங்கத்தைதான் நம்புகிறார்கள் அறிவியலை மறுக்கிறார்கள். சனிப்பெயர்ச்சி போல் கூட்டணி பெயர்ச்சியும்...

காந்தியை தாழ்வாரத்தில் உட்கார வைத்த சீனிவாச ஐயங்கார்

காந்தியை தாழ்வாரத்தில் உட்கார வைத்த சீனிவாச ஐயங்கார்

நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர்செல்வமும் உமாமகேசுவரம் பிள்ளையும் காந்திஜியைச் சந்தித்தப் பேசிய உரையாடல் “சுதேசமித்திரன் (16.09.1927)” இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகியிருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பது கூட இப்போது சுவையாக இருக்கும். உமா மகேசுவரம்பிள்ளை: பிராமணர் – பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும். காந்தி: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப் பற்றிப் பலவிதமாகக் கூறுகிறார்கள். பிராமணர்- பிராமணரல்லாதாருக்கிடையே இப்போது வேறுபாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் அவை மறைத்துவிடும் என்று டாக்டர் வரதராஜுலு நாயுடு கூறுகிறார். என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும், என்னைப் போன்றவர்கள் இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்கு...

காஞ்சி விஜயேந்திரனின் ‘இன ஒதுக்கல்’ APARTHEID!

காஞ்சி விஜயேந்திரனின் ‘இன ஒதுக்கல்’ APARTHEID!

பெங்களூரில் மூவாயிரம் பார்ப்பனர்கள் திரண்ட ‘கர்நாடக பிராமண மகா சபாவில்’ (19/01/2025) பேசிய காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி ‘பிராமண வெறியை’ தூண்டி விட்டு இருக்கிறார். அவர் இந்து மதம் பற்றிப் பேசவில்லை; வேதமதம் பற்றி பேசியிருக்கிறார். வேத மதம்தான்‌ சனாதனம் என்றும் ‘பிரமாணிசம்’ மட்டுமே வேத மதத்தைக் காப்பாற்றும் என்பதால் ‘பிராமணர்கள்’ ஒன்றுபட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். ‘பிராமணர்கள்’ தங்கள் பிறவி அடையாளங்களை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகளையும் பட்டியலிட்டுள்ளார். “1. ஒவ்வொரு நாளும் தங்களுக்கு உரிய வேத சடங்குகளை வீட்டில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும். 2. பிராமணர்கள் வெளிநாடு போகக்கூடாது. (கடல் தாண்டுவது குற்றம் என்று சாஸ்திரம் கூறுகிறது). இங்கேயே தங்கி சனாதன கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும். 3. ‘பிராமணர்கள்’ மட்டுமே குடியிருக்கும் ‘அக்கிரகாரங்களை’ உருவாக்க வேண்டும். சுமார் 100 பிராமணர்கள் வசிக்கக் கூடிய தனிக் குடியிருப்புகள்(gated communities)...

சென்னை: பூணூல் அறுப்பு வழக்கு தள்ளுபடி!

சென்னை: பூணூல் அறுப்பு வழக்கு தள்ளுபடி!

திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், லெனின் சிலையை அகற்றியதுபோல, தமிழ்நாட்டில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று 2018-இல் ஆணவத்தோடு சமூக ஊடகத்தில் பதிவிட்டார் எச்.ராஜா. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. சென்னை மாவட்டத் தோழர்கள் எச்.ராஜாவின் பேச்சுக்கு எதிர்வினையாக தியாகராயா நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் பார்ப்பனர்களின் பூணூலை அறுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. அசோக் நகர் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு, சைதாப்பேட்டை 17-வது நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 10 தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். உமாபதி, சுகுமார், இராவணன், கோபி, ஜான், அருண், பிரதீப், பிரபாகரன், திவாகர், நந்தா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 7‌ தோழர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டு 6 மாதங்கள் சிறை தண்டனைப் பெற்றனர். வழக்கறிஞர் இளமாறன், உதவியாளர் பேரன்பு ஆகியோர் வழக்கை சிறப்பாக நடத்தினார்கள். அதேபோல, 2008-இல்‌ கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்வினையாக...

மோடிக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பா?

மோடிக்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பா?

மோடி பதவியேற்ற 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக நாக்பூர்‌ ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் சென்று உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மோடிக்கும் ஏதோ முரண்பாடு இருப்பது போலவும் மோடி பதவி விலக ஆர்.எஸ்.எஸ். நிர்பந்திப்பது போலவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. மோடி போய் வேறு எந்த ஜோடி வந்தாலும் அவர்கள் நிறைவேற்றப் போவது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை மட்டும் தான். மோடி ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கைகளைத் தான் தனது ஆட்சியில் அமல்படுத்தி‌ வருகிறார். இதில் முரண்பாடுகள் மோதல்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் பித்தலாட்டமான செய்திதான். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைத் தான் மோடி ஆட்சி‌ அமல்படுத்துகிறது என்பதில் இருந்து திசைத் திருப்பி மோடிக்கு ஆர்.எஸ்.எஸ்.-க்கும் மோதல் என்பது போன்ற‌ செய்திகளை உருவாக்கி அடிப்படையான கருத்துக்களை திசைமாற்ற பார்க்கிறார்கள். பெரியார் முழக்கம் 03042025இதழ்

இன‌ ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு!

இன‌ ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு!

காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி பெங்களூருவில் கடந்த ஜனவரி 19-ம் தேதி நடந்த ‘பிராமண’ மாநாட்டில் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் (Apartheid) என்ற சட்ட விரோதக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். ‘பிராமணர்கள்’ என்பது வர்ணாசிரமத்தின் அடையாளமாகும். ஜாதி அடையாளம் அல்ல. அய்யர், அய்யங்கார் என்பது ஜாதி. ‘பிராமணர்’ என்ற வர்ணாசிரம அடையாளத்தைப் பேசினால் இந்து மதத்தின் பிற பிரிவினரை சூத்திரர், பஞ்சமர் என்று இழிவுபடுத்துவதாகும். அந்த அடிப்படையில் விளிம்பு நிலை மக்களான சூத்திரர் பஞ்சமர்களோடு பிராமணர்கள் கலந்து வசிக்கக் கூடாது; தனிக் குடியிருப்பு வேண்டுமென்று பேசி இருப்பது சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் கொள்கையே ஆகும். இது சர்வதேச குற்றம். சமத்துவபுரம் வேண்டுமென்று வலியுறுத்தும் தமிழ்நாட்டில் ‘அக்ரகாரம்’ வேண்டுமென்று சங்கராச்சாரி பேசியிருக்கிறார். இதைக் கண்டித்து சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மயிலாடுதுறையில் கடந்த மார்ச் 22-இல் கூடிய திராவிடர் விடுதலைக் கழக மாநாடு தீர்மானம்...

சோனியா காந்தியின் திராவிட இயக்கக் குரல்-கல்விக் கொள்கையில் மதவாதம் திணிப்பு; மாநில உரிமைகள் பறிப்பு;

சோனியா காந்தியின் திராவிட இயக்கக் குரல்-கல்விக் கொள்கையில் மதவாதம் திணிப்பு; மாநில உரிமைகள் பறிப்பு;

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, “ஒன்றிய ஆட்சி நாட்டின் கல்வி முறையைப் படுகொலை செய்து வருகிறது. மாநிலங்களைக் கலந்து ஆலோசிப்பதில்லை, மானியங்களை நிறுத்துகிறது, மதவாதத்தைத் திணிக்கிறது. பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களுக்கு ஏகபோக அதிகாரங்களை வழங்குகிறது கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்களை ஊடுருவ விட்டுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார். திராவிட இயக்கத்தின் குரலாக, சோனியாவின் இந்த கருத்து அமைந்துள்ளது. இதுகுறித்து ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (மார்ச் 31)-இல் அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான கருத்துக்கள். இந்திய கல்விமுறையை மூன்று “சி”க்கள் வேட்டையாடுகின்றன. அதிகாரக் குவிப்பு (centralisation of power), வணிகமயமாக்கல் (Commercialisation) மற்றும் மதவாதமயமாக்கல் (Communalisation). இதில் மட்டுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தி இருக்கிறது. கவர்ச்சிகரமான தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தி நாட்டின் குழந்தைகள் இளைஞர்களின் கல்வியை ஆழமான அரசியல் ஆக்கி வருகிறது. கட்டுப்பாடற்ற அதிகாரக் குவிப்பு கடந்த 11 ஆண்டுகளாக பாஜக அரசின் செயல்பாட்டின் அடையாளமாக இருந்து வருகிறது. இது...

சங்கராச்சாரிகளை அம்பலப்படுத்துவோம்!

சங்கராச்சாரிகளை அம்பலப்படுத்துவோம்!

“சமூக மாற்றத்திற்கு வாழ்நாள் முழுதும் போராடியவர் பெரியார். சமூகத்தை அடிமைப்படுத்திய சக்திகளை சரியாக அடையாளம் கண்டார். ”ஜாதி வர்ணாசிரம” கட்டமைப்பே தமிழர்களின் எதிரி என்ற முடிவுக்கு வந்தார். அதற்கான கருத்தியல்களை வழங்கிய பார்ப்பனியத்தையும், அதன் தலைமை பீடமான சங்கராச்சாரிகளையும் கடுமையாக எதிர்த்தார். பெரியார் ஜாதி ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பிறவியின் அடிப்படையில் பிராமண, சூத்திர பேதத்தை நியாயப்படுத்தும் வர்ணாசிரமமே நமக்கான தர்மம் என்றனர். பெரியார் தீண்டாமைக்கு எதிராகக் களமாடினார். வைக்கத்தில் போராடினார். சங்கராச்சாரிகள் தீண்டாமை தேவை அது ஷேமகரமானது என்றார்கள். பெரியார் பெண்ணடிமை ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பெண்கள், ஆண்களுக்கு அடிமைப்படுவதே நமக்கான தர்மம் என்றனர். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள் தரிசு நிலம். அவர்கள் பார்க்கக்கூடாதவர்கள், தீண்டப்படாதவர்கள் இதுவே நமது தர்மம் என்றார்கள். பெரியார் தமிழை அறிவியல் மொழியாக்க விரும்பினார். இன்னும் தமிழ் காட்டுமிராண்டி மொழியாகவே இருக்கலாமா என்று கவலைப்பட்டார். திருக்குறள்...

எளிதில் கிட்டும் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு!

எளிதில் கிட்டும் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு!

தமிழ்நாட்டில் சுமார் 10 ஆண்டுகளாக, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் MS / PhD போன்ற மேற்படிப்பு படிப்பதற்கு என்று உதவித்தொகை திட்டம் நடைமுறையில் இருக்கிறது. 2021-ஆம் ஆண்டுவரை இந்த திட்டத்தினால் பயன்பெற்றவர்கள் மொத்தம் 10 பேர்கூட கிடையாது. ஆனால், 2021ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இப்போது வரை மட்டும் சுமார் 135 பேர் இந்த திட்டத்தினால் பயன்பெற்று வெளிநாட்டில் படிக்கிறார்கள். பல மாணவர்கள் வருடத்திற்கு 30 லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்தில் நிதியுதவி பெறுகிறார்கள். கடந்த நிதி ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு சுமார் 30 கோடி ரூபாய் இதற்காக செலவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

மும்மொழிக் கொள்கை சீரழிவு!

மும்மொழிக் கொள்கை சீரழிவு!

புதிய கல்விக்கொள்கையை இந்தியாவிலேயே முதன்முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம் கர்நாடகா. 2021-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசு, புதிய கல்விக்கொள்கையை அம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்தியது. 2023-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்தவுடன், இந்தப் புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெறுவது குறித்தும், மாநிலக் கல்விக் கொள்கையை வரையறுப்பது தொடர்பாகவும் 15 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு இதுவரை தங்களது வரைவறிக்கையைச் சமர்பிக்கவில்லை. இதனால், புதிய கல்விக்கொள்கை இன்னும் அம்மாநிலத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி மும்மொழிக் கொள்கையும் கடைபிடிக்கப்படுகிறது. மூன்றாவது மொழியாக எந்த இந்திய மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று, தமிழ்நாட்டில் பா.ஜ.க. சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் மூன்றாவது மொழியாக இந்திதான் கற்பிக்கப்படுகிறது. 6, 7-ஆம் வகுப்புகளில் இந்தி கற்றுக்கொடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதும் முழுமையாக இந்தி ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இப்படி, கற்றல் குறைபாட்டோடும், அதனால் ஏற்படும் மனச்சுமையோடும் இருக்கும் மாணவர்களுக்குப்...

தரிசனத்துக்கு சட்டையை கழற்ற மறுப்பு! கேரளாவில் போராட்டம்

தரிசனத்துக்கு சட்டையை கழற்ற மறுப்பு! கேரளாவில் போராட்டம்

திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அறிவிப்பை மீறி பத்தனம்திட்டா அருகே சம்பவம்! கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள தர்மசாஸ்தா கோயிலில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அறிவிப்பை மீறி சட்டை அணிந்து தரிசனம் செய்த பக்தர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் குருவாயூர் கிருஷ்ணன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்பட பல முக்கிய கோயில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்லக்கூடாது என்ற மரபு கடந்த பல வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள சிவகிரி நாராயண குரு ஆசிரமத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆசிரமத்தின் தலைவர் பேசும் போது கோயில்களில் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். சிவகிரி மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இந்த வழக்கம் பின்பற்றப்பட மாட்டாது என்று அவர் மேலும் கூறினார். காலம் மாறும் போது இது போன்ற நம்பிக்கைகள் தேவையில்லாதது என்று முதல்வர்...

மாநாட்டிலிருந்து சில துளிகள்

மாநாட்டிலிருந்து சில துளிகள்

பயணக் குழுவினர் மயிலாடுதுறை கேணிக்கறையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக முழக்கங்களுடன் மாநாட்டு மேடைக்கு அணிவகுத்து வந்தனர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனின் திராவிட மாடலா? ஆரிய மாடலா? நூலை (தலையங்கத் தொகுப்பு) கள்ளக்குறிச்சி பயணக்குழு பொறுப்பாளர் இராமர் வெளியிட பயணக்குழுவில் தொடர்ந்து வந்த சென்னை இரண்யா, சேலம் ஆனந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ரூபாய் 500 மதிப்புள்ள நூல் 400-க்கு விற்கப்பட்டது. அனைத்து பிரதிகளும் மாநாட்டில் விற்றுத் தீர்ந்தன. மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் கழக வளர்ச்சிக்கு ரூ.25,000 கழகப் பொருளார் சு.துரைசாமி அவர்களிடம் வழங்கப்பட்டது. மேடை அருகே அமைக்கப்பட்ட தனித்‌திரையில் பெரியார் பற்றிய குறும்படம் ஒளிப்பரப்பட்டது. குறும்படம் தோழர்கள் இடையே உணர்வலைகளை உருவாக்கியது. .பிரகாஷ் எழுத்தில் கொளத்தூர் கபிலன் ஸ்டுடியோ இந்த குறும்படத்தை உருவாக்கியது. பயணக் குழுவை வழிநடத்திய இரா.உமாபதி, காவை ஈசுவரன்,‌ கள்ளக்குறிச்சி இராமர்,‌‌ கோவை நிர்மல் பயண அனுபவங்களையும்‌, மக்கள் தந்த ஆதரவுகளையும்...

பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடிவடிக்கை

பெரியார் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடிவடிக்கை

“ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பார்ப்பன சொற்பொழிவாளர்களும், பிராமணர் மாநாடு போன்ற மாநாடுகளில் உரையாற்றுபவரும் முன்வைக்கும் பல வாதங்கள் அரசியல் சட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ள சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றுக்கு எதிராகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட குற்ற வரையறைக்குள் வருவதாகவும் உள்ளன. a) அவ்வாறான உரைகள் ஆற்றப்படும் இடங்களிலேயே எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டுமாறு தோழர்களை, தமிழ்நாட்டு பார்ப்பனர் அல்லாத மக்களை, குறிப்பாக இளைஞர்களை இம்மாநாடு வேண்டி கேட்டுக்கொள்கிறது. b) தனி இடங்களில் அவ்வாறு பேசப்பட் டாலும் காணொலி வழியாக பொதுவெளியில் பரப்பப்படும் போது உரிய நிறுவனங்களுக்கு புகார் ( report) இடுமாறும், அதேவேளை காவல் நிலையங்களில் புகார் அளித்து உரிய ஒப்புகையைப் பெறுமாறும் இம்மாநாடு வேண்டி கேட்டுக்கொள்கிறது. c) பெரியார் மீதான ஆதாரமற்ற அவதூறு களை பரப்பியதற்காக புதிய தண்டனை சட்ட விதிகள் 192, 196, 352, 353 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க...

அர்ச்சகர் நியமனத்தை விரைவுப்படுத்துக

அர்ச்சகர் நியமனத்தை விரைவுப்படுத்துக

அதேபோல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் திட்டத்தை 24 பேருடன் அறநிலையத் துறை நிறுத்திக் கொண்டுவிட்டது. அர்ச்சகர் பதவிக்காகப் பயிற்சி பெற்றவர்கள் நீண்ட காலமாக காத்திருக்கி றார்கள். நீதி மன்றத்தில் உள்ள தடைகளை அகற்ற எந்த முயற்சியும் அறநிலைத்துறை எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது எனவே நீதிமன்றத் தடைகளை நீக்கி அனைத்து சாதிகளும் அர்ச்சகராகும் திட்டத்தை அடுத்தடுத்த கோயில்களில் விரிவுபடுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.” பெரியார் முழக்கம் 27032025இதழ்

இந்துசமய அறநிலையத்துறைக்கு கண்டனம்‌

இந்துசமய அறநிலையத்துறைக்கு கண்டனம்‌

“இந்துக் கோயில்களை நிர்வகிப்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அண்மைக்காலமாக மக்களிடம் இந்து மதப் பரப்புரை செய்யும் துறையாகவே மாறிவருகிறது. பழனியில் உலக முருகன் மாநாட்டைநடத்தியது. இப்போது மகா சிவராத்திரியை அறநிலையத்துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு முதன்முறையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடியதாக இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருமைப் படுகிறார். சிவராத்திரி போல் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி விழாக்களையும் அடுத்தடுத்து கொண்டாட அறநிலையத்துறை திட்டமிட்டு உள்ளதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம். மத உணர்வுகளை மக்களிடம் வளர்த்து விடும் அறநிலையத்துறையின் இந்தச் செயல்பாடுகள் மதவாத சக்திகள் வேர்ப் பிடிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று சுட்டிக் காட்டுகிறோம். அறநிலையத் துறையின் எல்லை மீறும் செயல்களுக்கு, இந்த மாநாடு கண்டனத்தைப் பதிவு செய்கிறது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்களை தடை செய்க

தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்களை தடை செய்க

“தமிழ்நாட்டு கிராமங்களில் ஜாதிய பாகுபாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் நிலவும் தீண்டாமை வடிவங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அந்த அறிக்கையை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திடம் நேரில் வழங்கினர். தலித் மக்கள் வாழும் பகுதிகளில் ரேஷன் கடைகள் நடத்தத்தடை, முடிவெட்ட மறுப்பு, இரட்டை தம்ளர் முறை, இருசக்கர வாகனங்களில் செல்லத் தடை போன்ற பல்வேறு வடிவங்களில் தீண்டாமை பின்பற்றப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக உயர்நீதிமன்றங்கள் ஜாதிக்கு எதிராகதீர்ப்புகளை வழங்கி வருவது பாராட்டி வரவேற்கத் தக்கதாகும். ஜாதி அடிப்படையில் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது. கோயில் திருவிழா விளம்பரங்களில் ஜாதிப் பெயர் போடக்கூடாது. ஜாதியை நிலை நிறுத்தும் போக்கு, செயல்பாடுகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இந்த நிலையில் தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பும் நாடகத் தொடர்கள்,...

தமிழ்நாடு முதல்வரை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது!

தமிழ்நாடு முதல்வரை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது!

“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் ஒன்றிய ஆட்சியின் திணிப்புகள், மறுப்புகளுக்கு எதிராகக் கருத்தியல் போராட்டம் நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் பாஜகவின் மெஜாரிட்டி எண்ணிக்கையைக் குறைத்து மைனாரிட்டி நிலைக்குத் தள்ளியவர்கள் தமிழ்நாட்டு வாக் காளர்கள். அதன் காரணமாக தமிழ்நாட்டு மக்களின் நிதி உரிமைகளைப் பறிப்பதோடு ஆளும் கட்சிக்குக் கடுமையான அரசியல் நெருக்கடிகளையும் ஒன்றிய பாஜக ஆட்சி உருவாக்கி வருகிறது. 1967 முதல் இருமொழிக் கொள்கையை நடை முறைப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு. கல்வி கட்டமைப்பில் இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தோல்வி அடைந்த மும்மொழித் திட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் மீது மிரட்டித் திணிக்கும் ஒன்றிய ஆட்சிக்குப் பணிய மாட்டோம், நிதி தர மறுத்தாலும் மாநில அரசு அந்த நிதியை ஒதுக்கும். மும்மொழிக் கொள்கை காவிக் கொள்கை, நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். கொள்கை என்று அறிவித்துவிட்டார் தமிழ்நாட்டின் முதலமைச்சர். 40-க்கும் மேற்பட்ட மாநில மொழிகளை இந்தி அழித்த வரலாற்றை முதலமைச்சர் சுட்டிக்...

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும், அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று ‘பெரியார் பணி செய்வதே என் கடன்’ என்ற லட்சிய வெறியோடு ஒரு வாரகாலம் பயணித்த கழகச் செயல் வீரர்களை இம்மாநாடு பாராட்டுகிறது, மகிழ்கிறது.இந்தப் பயணத்தில் தோழர்கள் செலுத்திய உழைப்பு வீண் போகாது; வரலாற்றில் பதியப்படும் என்று இந்த மாநாடு பெருமை அடைகிறது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

பரப்புரையில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள்!!

சென்னை பரப்புரைக் குழு: கிழக்கு தாம்பரம் வால்மீகி நகரில் சங்கராச்சாரியார் படத்தை சட்டைப் பையில் வைத்திருந்த வெங்கடேஷ் என்ற புதிய ஆதரவாளர் பரப்புரை பயணத்தைக் கூர்ந்து கவனித்து கூட்டம் முடிந்ததும் தோழர்களுக்கு தேநீர் வாங்கி கொடுத்தார். மேலும், “நான் ஆன்மிகவாதிதான். ஆனால் பக்தி வேறு அரசியல் வேறு” என்றும், “எனக்குப் பெரியாரை பிடிக்கும். பெரியார் இல்லை என்றால் நான் இன்றைக்கு இந்த டிராவல்ஸ் தொழிலை வைத்திருக்க முடியாது” என உணர்ச்சி பொங்க கூறினார். “இன்றைக்கு சீமான் போன்ற ஆட்கள் பெரியாரைப் பற்றி அவதூறு பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் இந்த மாறி அயோக்கியனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துங்கள். பெரியார் இல்லை என்றால் இன்றைக்கு கல்வி கற்க முடியமா தமிழர்கள்” என்றும் கூறினார். அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பரப்புரை வாகனத்திற்கு பெட்ரோலை கேனில் தர மறுத்தனர். வெங்கடேஷ் அவர்கள் சென்று கழகப் பிரச்சார ஜெனரேட்டர்க்கு 610 ரூபாய்க்கு பெட்ரோல்...

நூல் வெளியீடு !

நூல் வெளியீடு !

“ஆரிய மாடலா? திராவிட மாடலா?” திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அவர்களின் எழுத்தாக்கத்தில் கருத்து செறிவு மிகுந்த கட்டுரைகள்,வரலாற்று தகவல்கள், நிகழ்கால அரசியல் பார்வைகள்……(கெட்டி அட்டையில்) முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலையில் ரூ.300/- (ரூபாய் முன்னூறு மட்டும்) (தபால் செலவு ரூ.50 தனி) “பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைப் பயணத்தின் போது (மார்ச் 15 முதல் மார்ச் 22 முடிய) முன்பதிவு செய்யப்படும்.முன்பதிவிற்கு அலைபேசி எண் : 94986 56683 – இந்த எண்ணில் GPay செய்து விட்டு வாட்ஸ் அப்பில் முன்பதிவு செய்யவும். பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டில் சிறப்பு வெளியீடாக இந்நூல் வெளியிடப்படுகிறது. முன்பதிவு செய்வோருக்கு மாநாட்டு திடலில் புத்தகங்கள் வழங்கப்படும். நாள் : 22.03.25 சனி நேரம் : மாலை 04.00 மணி இடம் : சின்னக் கடைவீதி, மயிலாடுதுறை. – நிமிர்வோம் வெளியீடு, 15.03.2025

அரைகுறையாய் படித்துவிட்டு அவதூறு பரப்புவதா?  பெரியாரை விமர்சிக்கும் அடிமுட்டாள்கள்!-

அரைகுறையாய் படித்துவிட்டு அவதூறு பரப்புவதா? பெரியாரை விமர்சிக்கும் அடிமுட்டாள்கள்!-

(சென்னையில் பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெற்ற நிமிர்வோம் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் தொடர்ச்சி) பெரியார் ஆங்கிலம் படிக்கச் சொன்னார்‌. தேவநேயப் பாவணரும், பாவலர் பெருஞ்சித்திரனாரும் சேர்ந்து ஆங்கிலமும் தமிழும் படிக்க வேண்டும் என்று சொன்னவர்கள்தான். ஆராய்ச்சிப் படிப்புகள் வரைக்கும் தமிழில் படிக்க வேண்டும் என்ற குரலும் அப்போதே ஒலிக்கத் தொடங்கியது. “தமிழில் சொற்களே இல்லை, தமிழில் எப்படி ஆராய்ச்சி படிப்புகளை படிக்க முடியும்?” ஆனால் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தமிழ்வழிக் கல்வி மாநாட்டில் பேசும்போது தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்று சொல்லுவேன். உடனே மணியரசன் போன்றவர்கள்‌, மணி‌ தமிழர் இல்லை, தமிழருக்கு பெருமிதம் இல்லை என்று வசைபாடுவார்கள். அடுத்தக் கூட்டத்தில் நான் சொன்னேன், “தமிழர்களுக்கு பெருமிதமான வரலாறே இல்லை; அடிமை வரலாறு, சூத்திர வரலாறுதானே நமக்கு எல்லாம். அழகான தமிழ்ப்பெயர் அருண்மொழிவர்மன்‌ என்பதை ராஜராஜ சோழன் என்ற வடமொழி பெயராக...

உயிரிழப்புகளை மறைக்கிறது ஒன்றிய அரசு?

உயிரிழப்புகளை மறைக்கிறது ஒன்றிய அரசு?

உத்தரப் பிரதேசத்தில் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெற்ற கும்ப மேளாவில் 66 கோடி பேர் திரண்டதாகவும், உலகின் மிகப்பெரிய ஆன்மீகத் திருவிழா இதுதான், இதற்கு ஈடாக மக்கள் கூடிய இன்னொரு கொண்டாட்டத்தை காட்ட முடியுமா என்றும் சங்கிகள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். ஆனால் 66 கோடி பேர் என்று சங்கிகள் கூறுவது வாய்க்கு வந்ததை அள்ளிவிடும் கட்டுக்கதை என்று ஊடகங்கள் அம்பலப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஏனெனில் கும்பமேளா நடைபெற்ற பிரயாக்ராஜிற்கு விமானத்தில் சென்றவர்கள் எண்ணிக்கை 5.6 லட்சம் பேர். ரயிலில் சென்றவர்கள் எண்ணிக்கை 4.24 கோடி பேர். அரசுப் பேருந்துகளில் சென்றவர்கள் 3.25 கோடி பேர். தனியார் பேருந்துகளில் சென்றவர்கள் 2.7 கோடி பேர். ஒட்டுமொத்தமாக சேர்த்தால் 10.25 கோடி பேர்தான் ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் மூலம் சென்றிருப்பார்கள். இதில் கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் எண்ணிக்கை குறித்து எந்த கணக்கும் இல்லை. ஆனால் ரயிலில் சென்றவர்களை விடவோ,...