Category: பெரியார் முழக்கம் 2025

குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!

குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!

கடந்த 20 ஆண்டுகளாக கழக மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் மீது பொய்யாக சரித்திர குற்றவாளி பதிவேட்டை கோபி காவல் துறையினர் பராமரித்து வருகிறார்கள், அதனால் தான் பெரும் அவதிக்கு ஆளாகியிருப்பதாகவும், தன்னுடைய தனி மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தன் மீது கடுமையான குற்றப் பின்னணி எதுவும் கிடையாது, நான் விடுதலைப் புலிகளை ஆதரித்த காரணத்திற்காகவும், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “இனி என்ன செய்யப் போகிறோம்” என்ற குறுந்தகடு வெளியிட்டதற்காகவும் என் மீது வழக்கு பதியப்பட்டு சுமார் மூன்றரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். 2009-ஆம் ஆண்டு ஈரோடு மாநகரில் உள்ள ஒரு கோயில் மேல் மேம்பாலம் கட்டக்கூடாது என்று இந்து முன்னணியினர் உண்ணாவிரதம் இருப்பதை எதிர்த்து, நானும் கழகத்தினருடன் இணைந்து உண்ணும் விரதம் மேற்கொண்டதற்காக ஈரோடு போலீசாரால் வழக்கு பதியப்பட்டு அதற்காக 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். 2006 ஆம்...

புதுவையில் பெரியார் கைத்தடி பேரணி

புதுவையில் பெரியார் கைத்தடி பேரணி

புதுவையில் 10-5-25 அன்று பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! சமூகநீதியைக் காப்போம்! உழைப்பாளர் நாள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பெரியார் கைத்தடி பேரணியும்- பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பாக நடைபெற்றது. அரியாங்குப்பத்தில் கலைஞர், சிங்காரவேலர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பெரியார் கைத்தடி பேரணியை பா.செ.சக்திவேல் (தலைமை பொதுக்குழு உறுப்பினர் திமுக புதுச்சேரி)‌, மகேசு காஞ்சி மக்கள் மன்றம் இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில்‌ வழிநெடுக கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் சிலைக்கு கழக மயிலாடுதுறை மகேஷ் மாலை அணிவித்தார். அரியாங்குப்பம் பகுதியில் தொடங்கி சுமார் 3 கிலோமீட்டருக்கு பேரணியாக சென்று பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகள், பாடல்கள், நாடகங்கள் பொதுமக்கள் மற்றும் தோழர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தொடர் சொற்பொழிவுகளாக இல்லாமல் பேச்சுக்களுக்கு இடையே பாடல்கள், நாடகங்கள் என‌ கலைத்திருவிழா போல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரா. உமாபதி, (திவிக சார்பாக சென்னை...

விடயபுரம் பயிற்சி முகாம் வரலாறு!

விடயபுரம் பயிற்சி முகாம் வரலாறு!

`கடவுள் வணக்கம்’ கூறுவதைப் போல இனி நாம் எல்லா நிகழ்ச்சிகளும் கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொல்லித்தான் தொடங்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தார் பெரியார். அன்றுமுதல் இன்றுவரை திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் கடவுள் மறுப்பு வாசகம் சொல்லப்படுவது வழக்கமான ஒன்று. அத்தகைய வரலாற்றுச்சிறப்பு மிக்க வாசகம் முதன்முதலில் சொல்லப்பட்ட இடம் விடையபுரம்.” 2018-ஆம் ஆண்டு திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அங்கிருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது. அதைப்போல தமிழ்நாட்டிலும் பெரியார் சிலை ஒருநாள் உடைக்கப்படும் என்று பதிவிட்டார் ஒருவர். எதிர்ப்புகள், வழக்குகளுக்குப் பிறகு தனது அட்மின் மீது பழியைத் தூக்கிப்போட்டார். அதுபோல, பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசுவார்கள், செருப்பு மாலை அணிவிப்பார்கள். நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டால், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றுசொல்லி பிணை கேட்பார்கள். மறைந்த அரை நூற்றாண்டுக்குப் பிறகும் எதிரிகளை இப்படி பெரியார் அச்சுறுத்துகிறார் என்றால், அவருடைய சித்தாந்தம் ஒரு காரணம். மற்றொன்று, அவரது சிலைக்குக் கீழே பீடத்தில் தவறாமல்...

மேட்டூர் நாத்திக விழா சிந்தனை: “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”

மேட்டூர் நாத்திக விழா சிந்தனை: “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”

பெரியார் முதன்முதலாக விடயபுரம் பயிற்சி வகுப்பில் உருவாக்கிய கடவுள் மறுப்பு வாசகத்திற்க்கு விளக்கம் அளித்து பெரியார் எழுதிய கருத்தாழமிக்க கட்டுரை: கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பினவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று கூறிவருவது கண்டு, பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பதுபோல் துள்ளுகிறார்கள்; துள்ளிக் குதிக்கிறார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவிவிடுகிறார்கள். பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்; எதிர்பார்க்கின்றேன். காரணம், போராட்டம் துவக்கினால், எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு, மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவதுதான். கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக்கொள்ளும் சிகாமணிகளே! நான், கடவுளை உண்டாக்கியவன் முட்டான் என்றால், எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? “உண்டாக்கியவன் முட்டாள்” என்றால், உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கின்றவனே! நீ, கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்கிறாயா? உனது...

வினாடி வினா

வினாடி வினா

தமிழ்நாடு இரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய ஆட்சி அனுப்பிய நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பி விட்டது. -செய்தி ஆமாம்.தெற்கு ரயில்வே வடக்கு இரயில்வேவாக மாறிவிட்டது.  “ஆச்சாரியா பஞ்சகச்சம்” வேட்டியை வெளியிட்டு ராமராஜ்ய மரபுகளுக்கு பெருமை சேர்த்துள்ளோம். -ராம்ராஜ் காட்டன் ராம்ராஜ் காட்டன் ஜட்டிகளைத் தயாரித்து ராமனுக்கு பெருமை சேர்த்ததையும் சேர்த்து சொல்லுங்க‌.  கீழடி அகழ்வாய்வு அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத்துக்கு திருத்தி எழுத திருப்பி அனுப்பியுள்ளது. -ஒன்றிய ஆட்சி ஆர்எஸ்எஸ் ஆபிஸ்க்கு மெயில் போடுங்க. அமர்நாத் வேலையை அவங்க பார்த்துப்பாங்க.  எங்க கூடத்தான் பாமக இருக்கு -பாஜக தலைவர் நயினார் சரி; பாமக யாரு கூட இருக்கு நயினார் ஜீ.  குற்றவாளி ஞானசேகரன் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை விசாரிக்க வேண்டும். -அண்ணாமலை இது நீதிமன்ற விசாரணை ஜீ, அமலாக்கத்துறை விசாரணை அல்ல. பெரியார் முழக்கம் 01062025இதழ்.

நாமக்கல் மாவட்ட கழகம்‌  “முழக்கத்துக்கு”நன்கொடை

நாமக்கல் மாவட்ட கழகம்‌ “முழக்கத்துக்கு”நன்கொடை

நாமக்கல் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் அ முத்துப்பாண்டி, மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்டக் காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை, குமாரபாளையம் நகரத் தலைவர் எம் டி தண்டபாணி ஆகியோர் முயற்சியில் புரட்சி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 வழங்கப்பட்டது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 01062025இதழ்

பாமகவில் நடக்கும் “குடும்ப நீதி” சண்டை – விடுதலை இராசேந்திரன்

பாமகவில் நடக்கும் “குடும்ப நீதி” சண்டை – விடுதலை இராசேந்திரன்

பிறவியின் அடிப்படையில் இலவசமாகக் கிடைத்தது ஜாதி. இந்த ஜாதியால் பயன் அடைந்தவர்கள் அதைக் கொண்டாடினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் கொடுமைகளை அனுபவித்தார்கள். ஜாதி சமூகத்தை வளர்க்கவில்லை; மாறாக சமூகத்தைப் பிளவுபடுத்தியது; சமூக ஒற்றுமையையும் அது கட்டிக் காக்கவில்லை. இன்றைக்கு அரசியலில், அதிகாரத்திலும், சமூக உறவுகளைப் பகிர்ந்து கொள்வதிலும், முரண்பாடுகளும் மோதல்களும் வெடித்துக் கொண்டு இருக்கின்றன. “பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று நடக்கும் அதிகார சண்டை என்பது ஜாதி அரசியலில் மோசமான தோல்வி!” சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி ஒரு காலத்தில் முற்போக்கு பாதையில் பயணித்தது உண்மை; பிறகு 35 வயதில் தனது மகனை இராமதாஸ்அமைச்சராக்கிய பிறகு அது திசை மாறியது. மருத்துவர் ராமதாஸ் அது நான் செய்த பெரும் தவறு என்று இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். சமூக நீதி அரசியலை சமூகத்திற்காகப் பயன்படுத்தாமல் பதவிகளுக்காகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு கூட்டணிகளை மாறி மாறி ஏற்படுத்திக் கொண்டு சுயநலப் பாதையில் அதிகாரத்திற்காக பயணித்தவர்கள், அந்த...

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

காணாமல்போன கடவுள் சக்தி -கோடங்குடி மாரிமுத்து

கடவுள் இல்லை; எங்கே கடவுள் சக்தி? என்று நாத்திகர்கள் பேரணி நடத்துகிறார்கள் என்பதற்காக எந்த கடவுளும் கொந்தளிக்கவில்லை. “இதோ அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்கிறேன்,பார்!” என்று ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு ஓடி வரவில்லை. சரி, போகட்டும்;கொளத்தூர் கழக மகளிர் கனவில் வந்தாவது மிரட்டி இருக்கலாம் அதற்கும் தயாராக இல்லை உண்மையில் கொந்தளித்தது யார் தெரியுமா? கொளத்தூர் காவல்துறை தான். “அய்யோ கடவுள் எதிர்ப்புக்கு நாங்கள் அனுமதி தர முடியுமா? அது பாவமல்லவா?” என்பதற்காக காவல்துறை கொந்தளிக்கவில்லை. “சங்கிகள் கூச்சல்களை சந்திக்க வேண்டியிருக்குமே என்பதுதான் அவர்களின் பயம். “என்னை எதிர்ப்பவருக்கு பேரணி நடத்த அனுமதிக்காதே! அழித்துவிடுவேன்” என்று ஏதேனும் ஒரு காவல் அதிகாரி கனவில் வந்தாவது கடவுள் மிரட்டி இருக்கலாம் அதுவும் இல்லை” அப்படி எதுவும் நடக்காமலேயே கடவுள் பக்தியோ, பக்தர்களின் மனம் புண்படும் செயல்களையோ நிகழ்த்த மாட்டோம் என்று எழுதிக் கேட்டது காவல்துறை. “எதற்கு நாங்கள் எழுதித் தர வேண்டும்; கடவுளைப்...

கழகத் தலைமை அலுவலகத்தில் இட ஒதுக்கீடு அறிமுகவகுப்பு!

கழகத் தலைமை அலுவலகத்தில் இட ஒதுக்கீடு அறிமுகவகுப்பு!

01.06.2025 தமிழ்நாடு மாணவர் கழகம் முன்னெடுத்த புதிய தோழர்களுக்கான “இட ஒதுக்கீடு – அ முதல் ஃ” என்ற தலைப்பில் அறிமுக வகுப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியரசு தலைமை தாங்கினார், தோழி அனைவரையும் வரவேற்றார், தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் இளவரசன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கும் தோழர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகர் இட ஒதுக்கீடு பற்றி சிறப்பாக அறிமுக வகுப்பெடுத்தார். வகுப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற தோழர் லாவண்யா அவர்களுக்கு தோழர் அன்பு தனசேகர் பரிசுத்தொகை ரூ.1000/- வழங்கினார். நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன் உட்பட 40-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். தோழர்களுக்கு மதிய உணவை தி.வி.க மாவட்டச் செயலாளர் உமாபதி வழங்கினார். நிறைவாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்...

தமிழிலிருந்து பிறந்ததே திராவிட மொழிகள்! – பெரியார்

தமிழிலிருந்து பிறந்ததே திராவிட மொழிகள்! – பெரியார்

ழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று கூறியதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். பெரியார் கருத்து இதுவாகவே இருந்து இருக்கிறது. அவரது எழுத்தில் இருந்து சிலபகுதிகள்; மொழிவாரி மாகாணம் பிரிக்கப் படப்போகிறது. மொழி வாரி வித்துவான்கள் நியமிக்கப்பட்டு மொழி வாரி இலக்கணங்களும் செய்யப்பட்டு திராவிட மொழியைப் பாழாக்கத் திட்டம் தீட்டியாகி விட்டதே!…. பண்டிதர்களில் சிலர் இவை நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த நாலு அக்கா தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பதுதான் என் கருத்து. இத்திராவிடத் தாய்க்குப் பிறந்தது ஒரே மகள்தான். அது தமிழ்தான். அந்த ஒன்றைத்தான் நாம் நாலு பேரிட்டு அழைக்கிறோம். நாலு இடத்தில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய நாலிடத்திலும் பேசப்படுவது தமிழ் ஒன்றுதான். நாலும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு. ஒன்றுதான் நாலாக நமது அறியாமையால் கருதப்பட்டு...

மதக்கலவரத்தை தூண்டும் ஆதினத்தை கைது செய்-மதுரையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மதக்கலவரத்தை தூண்டும் ஆதினத்தை கைது செய்-மதுரையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மதக்கலவரங்களை தூண்டும் விதமாக பேசி வரும் மதுரை ஆதினத்தை கண்டித்து 16-5-2025 அன்று காலை 10:30 அளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மதுரையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன நிகழ்வில் பால் பிரபாகான் (கழக பரப்புரைச் செயலாளர்) கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி (திவிக) தலைமையில் நிகழ்வு தொடங்கி, கனியமுதன்(விசிக), மீ.த பாண்டியன்(மதநல்லிணக்கக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்), பசும்பொன் பாண்டியன் (அ.தி.ம.மு.க), பேரறிவாளன் (பொதுச் செயலாளர் – தமிழ்ப் புலிகள்), கபீர் நகர் கார்த்திக் (ஆதித்தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர்), வரதராஜன் (பெரியார் நெறியாளர்), தமிழ்ப்பித்தன் (த.பெ.தி.க), ராமலிங்கம் (ம.க.இ.க மாநில ஒருங்கிணைப்பாளர்), அப்பாஸ் (மனிதநேய மக்கள் கட்சி), குமரன் (பு .இ.மு) ஆகியோர் கலந்து கொண்டு ஆதீனத்தைக் கண்டித்தும், அவரை கைது செய்யவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோழமை இயக்கங்களுடன் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக்...

நீதிபதிகளே மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் நாத்திகர் விழாவில் தோழர்கள் உரை

நீதிபதிகளே மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள் நாத்திகர் விழாவில் தோழர்கள் உரை

ஜெசி மூடநம்பிக்கைகளை நீதிபதிகளே பரப்புப்கிறார்கள் என்று காஞ்சி மக்கள் மன்றம் தோழர் ஜெசி கூறிப்பிட்டார். அவரது உரையிலிருந்து… இன்றைக்கு பல்வேறு மூடநம்பிக்கை கருத்துக்களை சாமியார்கள் பேசுவதைவிட நீதிபதிகள், அமைச்சர்கள் இப்போது தீவிரமாக பேசி வருகிறார்கள். ஒரு நீதிபதி பேசுகிறார் “பசு ஆக்சிஜனை உள்ளிழுத்து ஆக்சிஜனையே வெளியேற்றம் செய்கிறது. சாமியார்களிலே வித்தியாசமான சாமியார் நித்தியானந்தா தான். அவர் பேச்சுத் தொணி கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும். நித்தியானந்தா ஒரு (cosmic Airport)பிரபஞ்ச விமான நிலையத்தை உருவாக்கி இருக்கிறார். கருவுறும் பெண்கள் எல்லோரும் வாருங்கள். இந்த பிரபஞ்ச விமான நிலையத்தில் உங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இடத்தில் வந்து குழந்தை பெற்றுக் கொண்டால் பிறக்கும் போது ஞானம் பெற்றிருப்பார்கள். நான் அதற்குரிய (DNA) மரபணுக்களை மாற்றிவிடுவேன் ஆகையால் இங்கே வாருங்கள் என்று நித்தியானந்தா அழைக்கிறார். ஒரு ராஜஸ்தான் நீதிபதி பேசியது: ஆண் மயில்கள் பிரம்மச்சாரிகளாம். பெண்மயில்ளோடு உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. ஆண்மயில்களின் கண்ணீரை குடித்துத்...

“நாத்திக வாழ்க்கை நோக்கி வாருங்கள்”

“நாத்திக வாழ்க்கை நோக்கி வாருங்கள்”

நாத்திக வாழ்வியல் ஏற்று உன்னதமான லட்சிய வாழ்க்கையை நோக்கி வருமாறு மக்களுக்கு நாத்திகர் விழா வேண்டுகோள் விடுத்தது. இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: முன்மொழிந்தவர்: இரண்யா தீர்மானம்-4: கடவுள், மத நம்பிக்கை இல்லாமல் மானுடத்தையும் அதன் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டதே நாத்திக வாழ்வியல் நெறி. சமத்துவம் மற்றும் அறிவியலை இலக்காகக் கொண்டு ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூக சமத்துவத்தை நோக்கியது. இதில் பார்ப்பனிய கருத்தியல்களான ஜாதியத்துக்கோ, பெண்ணடிமைக்கோ, மூடநம்பிக்கைக்கோ இடமில்லை. வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு சிந்தனைகள் தொடங்கிவிட்டன. உலகம் முழுவதும் கடவுள் மத கற்பனைகளை ஏற்காத நாத்திகர்கள் வாழ்கிறார்கள். கடவுள் மத நம்பிக்கை இல்லாத அதிக மக்களைக் கொண்ட நாடு பின்லாந்து. உலகிலேயே மகிழ்ச்சியாக வாழும் நாடு பின்லாந்து தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எப்படி கடவுள் மத நம்பிக்கைக்கும், அதனை பரப்புவதற்கும் உரிமை வழங்குகிறதே அதனை போல கடவுள் மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் மனசாட்சி உரிமை என்ற அடிப்படை உரிமைச்...

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு நாத்திகர் விழா கோரிக்கை

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு நாத்திகர் விழா கோரிக்கை

கொளத்தூரில் மே24-ல் நடந்த நாத்திகர் விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முன்மொழிந்தவர்: ஈரோடு மணிமேகலை தீர்மானம்-1: சமூகத்தில் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும். சாமியார்களின் அதீத சக்திகளை மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கைகளை வாய்ப்பு ஆக்கிக் கொண்டு சாமியார்கள் பெண்களின் நகைகளைப் பறிப்பது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது போன்ற குற்ற செயல்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து தொலைக்காட்சிகளும் ஒவ்வொரு நாளும் இந்த குற்ற செயல்களை நிகழ்ச்சிகளாக ஒளிப்பரப்பி வருகின்றன. பேய்,பில்லி, சூனியம், பரிகாரம், தாயத்து போன்ற பல்வேறு வடிவங்களில் இந்த மோசடிகள் நடைபெறுகின்றன. அறிவியல் மனப்பான்மையை குடிமக்களிடையே உருவாக்க வேண்டும் என்று இந்திய அரசியல்சட்டப் பிரிவு (51 (A) (h) கூறுகிறது. இந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்தோடு பல்வேறு இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த இயக்கங்களுக்கு பல்வேறு நிலைகளில் அரசு ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்...

கொளத்தூர் குலுங்கியது

கொளத்தூர் குலுங்கியது

சேலம் மாவட்டம் மகளிர்‌ அணி சார்பில் 24.05.2025 அன்று நாத்திகர் விழா அதை ஒட்டி அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்! மூடநம்பிக்கைகளை ஒழிப்போம் என்கிற முழக்கத்தோடு மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி மற்றும் நாத்திகர் விழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள், தோழர்கள் மட்டும் தனி வாகனத்தில் மாநாட்டுக்கு வந்தனர். பெண்கள் மட்டுமே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கர்ப்பிணிப் பெண்களும், கைக்குழந்தைகளுடனும் பெண்கள் பங்கேற்றனர். குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன கிருத்திகா அலகு குத்தி பேரணியில் பங்கேற்றார். உக்கம்பருத்திக்காடு சு. கோமதி, காவலாண்டியூர் க.கலைச்செல்வி, கொளத்தூர் அழகேஸ்வரி, உக்கம் பருத்திக்காடு கு.லதா, மாதம்மாள் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர். சேலம் (கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்எஸ், மேச்சேரி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், ஏற்காடு, ஆத்தூர்‌) போன்ற பகுதிகளில் இருந்தும் ஈரோடு வடக்கு, தெற்கு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி, பொள்ளாச்சி, மடத்துக்குளம், சென்னை, மதுரை, தஞ்சாவூர், தென்காசி,...

பெண்களின் “நாத்திகப் பேரணி” – கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை!

பெண்களின் “நாத்திகப் பேரணி” – கடவுள் இல்லை; மதம் இல்லை; ஜாதி இல்லை!

கருப்பு உடை தரித்து பெரியாரியப் பெண்கள் தீச்சட்டிகளுடன் அலகுகுத்திக் கொண்டும் கடவுள் இல்லை என்றும் பேரணியாக அணிவகுத்த காட்சியை கொளத்தூர் கண்டது. “நாங்கள் பெரியாரியப் பெண்கள்; எங்களுக்கு கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை, தோழியர்களே! இந்த நம்பிக்கைகள் தான் நம்மை அடிமையில் ஆழ்த்துகின்றன” என்ற செய்தியை மக்களுக்கு கூறினார்கள். மேட்டூர் வட்டத்தின் ஒரு சின்னஞ்சிறு கிராமம் கொளத்தூர். அந்த ஊரைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழக மகளிர் அணியினர் ஒரு புரட்சிகர முடிவை எடுத்தனர். நாத்திகர் விழா நடத்துவது என்று அறிவித்து களம் இறங்கினர். கழகத் தலைமைக்கு அந்த முடிவை தெரிவித்தனர். பெண்களே நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். பெண்களே பொதுமக்களிடம் நிதி திரட்டினார்கள். கடவுள், மதத்தை எதிர்த்து இப்படி பெண்கள் களத்தில் இறங்கி செயல்பட்டு பேரணியையும் விழாவையும் நடத்தி அதை வெற்றியாக்கி சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு முழுதும் இருந்து கழகத் தோழர்கள் பெண்களும் ஆண்களுமாக கொளத்தூர் நோக்கி திரண்டனர்....

மாணவர்களுக்கு ஆலோசனை மய்யம்,மாணவர் கழகம் முடிவு

மாணவர்களுக்கு ஆலோசனை மய்யம்,மாணவர் கழகம் முடிவு

சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் (04/05/25) சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு குறளரசி தலைமை தாங்கினார், இளவரசன் முன்னிலை வகித்தார். சூர்யா, ஷர்மிளா, தோழி, பிரசாந்த், பேரன்பு ஆகியோர் கலந்துகொண்டனர். எடுக்கப்பட்ட முடிவுகள்: 1)கல்லூரி சேர இருக்கும் மாணவ மாணவியருக்கான வழிகாட்டுதல் தருவது. 2)இட ஒதுக்கீடு பற்றிய அறிமுக வகுப்பு இந்த மாதத்தில் நடத்துவது. 3) புதிய இசைக்குழுவை தொடங்குவது. தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக 2025-2026 ஆண்டு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். தனியார் பள்ளிகளில் 25% பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு RTE முலமும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தில் விண்ணப்பித்து தரப்படும். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி சேரும் மாணவ மாணவியருக்கான ஆலோசனை மையம். தொடர்புக்கு: பேரன்பு(சென்னை): 89731-19313, இளவரசன்(சென்னை): 88382-77257 நாகராஜன்(சேலம்): 90929-04626, ஷர்மிளா(ஈரோடு)-75987-04581 நவீன்(கோவை)-63698-18361, ஷியாம் (தஞ்சாவூர்)-90808-18987 பெரியார் முழக்கம் 22052025இதழ்

நிமிர்வோம் வாசகர் வட்டம் எடுத்த திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு

நிமிர்வோம் வாசகர் வட்டம் எடுத்த திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு

நிமிர்வோம் வாசகர் வட்ட‌த்தின் 27-வது சந்திப்பு 09.05.2025 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில், தென்சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, மறைந்த திராவிட இயக்க இளம் எழுத்தாளர் சு.விஜயபாஸ்கரின் உருவப் படத்தை, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் திறந்துவைத்தார். கழக வெளியீடுகளான “பெரியாரின் மானுடம்”, “பெரியார் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு” ஆகிய நூல்கள் குறித்து தி.வி.க. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி.எட்வின் பிரபாகரன் திறனாய்வு செய்தார். “அம்பேத்கர் நம் தலைவர்”, “இறுதிமூச்சு அடங்கும் வரை யாருக்காக உழைத்தார் பெரியார்?” ஆகிய நூல்களை, தாம்பரம் நகரக் கழக அமைப்பாளர் அருண் கோமதி திறனாய்வு செய்தார். அதன்பிறகு, மறைந்த எழுத்தாளர் சு.விஜயபாஸ்கரை நினைவுகூரும்விதமாக, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் கனடாவில் இருந்து காணொளி வாயிலாக உரையாற்றினார். கழகத்துடனான விஜயபாஸ்கரின் தொடர்பு, ஜாதி ஒழிப்புக் களங்களில் ஆற்றிய பணிகள் குறித்து பல்வேறு செய்திகளை தோழர் விஜயகுமார்...

செக்கடிக்குப்பம்-ஓர் பெரியார் மண்!

செக்கடிக்குப்பம்-ஓர் பெரியார் மண்!

தமிழ்நாட்டில் பெரியார் கொள்கைகளை முழுமையாக ஏற்ற கிராமங்கள் பற்றிய தொடர் ஒன்று முரசொலி நாளேட்டில் வாரந்தோறும் வெளிவருகிறது. அந்தத் தொடரை பெரியார் முழக்கம் நன்றியுடன் பதிவு செய்கிறது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, பார்ப்பனர்களை வைத்து, சடங்குகள் செய்து நடைபெற்றால்தான் அது திருமணம் என்று இன்றும் கருதுவோர் பலர் இருக்க, 1925-ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பெரியார், சுயமரியாதைத் திருமண முறையை, தமிழர்களுக்குத் தந்தார். இந்தத் திருமண முறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மதம் இருந்தால் போதும், பார்ப்பனர்களை அழைக்கத் தேவையில்லை, சடங்குகள் தேவையில்லை, தாலியும் கட்டாயமில்லை. மாலைமாற்றிக் கொண்டு, உறுதிமொழி எடுத்துக்கொண்டால் போதுமானது. பெரியார் அறிமுகப்படுத்திய இந்த எளிமையான திருமணமுறைக்கு, 1967-இல் அண்ணாவின் ஆட்சி அமையும் வரை சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனாலும், பல ஆயிரக்கணக்கானோர் சுயமரியாதைத் திருமணம் புரிந்தனர். அண்ணா இயற்றிய சட்டத்தால் இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாகிவிட்ட போதிலும், வைதீகத் திருமணங்களே இப்போதும் அதிகம். ஆனால்,...

மேட்டூர் மகளிர் நாத்திக விழா சிந்தனை: விடை தெரியாத குழப்பம் “கடவுள்”

மேட்டூர் மகளிர் நாத்திக விழா சிந்தனை: விடை தெரியாத குழப்பம் “கடவுள்”

கொளத்தூரில் மே24 ஆன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் மகளிர் அணி நாத்திகர் விழாவை நடத்துகிறது. உலகிலேயே நாத்திக பெண்கள் நடத்தும் விழா வேறு எங்கும் நடந்தாகக் குறிப்புகள் இல்லை. மாநாட்டுச் சிந்தனையாக பெரியார் கருத்துக்களின் தொகுப்பு… `கடவுள்’ எதற்கு? கடவுள் என்பது அர்த்தமும் குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து வந்த போதிலும், அது, மனித சமூகத்தில் 100-க்கு 99 மக்களைப் பிடித்துத் தன்வயப்படுத்தி, மடமையாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. கடவுள் என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டுப் பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகியிருந்த போதிலுங்கூட, ‘கடவுள் என்பது இன்னது’ என்று குறிப்பாக, குளறுபடி இல்லாமல்-தெளிவுபட உணர்த்தியவர்களோ, உணர்ந்தவர்களோ, இதுவரையில் காணக்கிடைக்கவில்லை. பொதுவாக, அந்தப்படி ஒரு உணர்ச்சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி, அவர்களைப் பயப்படுத்தி வைக்க வேண்டும் என்கின்ற அவசியத்தியனால் அதற்கு என்று வேறொரு (மானச) உலகத்தையும், பாவ புண்ணியத்தின் பயனையும்,மோட்ச நரகத்தையும், கற்பித்து அதைப் பரப்பப் பலவித ஸ்தாபனங்களையும் உண்டாக்கி-அதன் பிரச்சாரத்தின் பேரால் பிழைக்க...

மண் சோறு சாப்பிடுவோர் என்‌ ரசிகர்கள் அல்ல – நடிகர் சூரி.

மண் சோறு சாப்பிடுவோர் என்‌ ரசிகர்கள் அல்ல – நடிகர் சூரி.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள திரைப்படம் `மாமன்’. மே 15-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் வெற்றியடைய வேண்டுமென்று சூரியின் ரசிகர்கள் மதுரையில் மண் சோறு சாப்பிட்டு, அந்த வீடியோவைப் பகிர்ந்தனர். மண் சோறு உண்பது, நடிகர்களின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம், மொட்டை அடிப்பது. அலகுக் குத்துவது என விதவிதமான பிற்போக்குத்தனங்களை, பல்வேறு நடிகர்களுக்கு ரசிகர்கள் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இத்தகைய பிற்போக்குத்தனங்களை இதுவரை எந்த நடிகரும் கண்டித்ததில்லை. அல்லது அவை, பிற்போக்குத்தனங்கள், இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வெளிப்படையாகக் கூறியதும் இல்லை. ஆனால், முதன்முறையாக, தனது ரசிகர்களைக் கடுமையாக எச்சரித்து, முன்னுதாரணமாகியிருக்கிறார் நடிகர் சூரி. ‘மாமன்” படம் வெற்றியடைய மண்சோறு சாப்பிட்டவர்களை ‘தம்பிகள்* என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. தம்பிகளா, இது ரொம்ப முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் படம் ஓடும். அதைவிட்டு, மண் சோறு சாப்பிட்டால், படம் எப்படி...

ஆணாதிக்கத்திற்கு எதிரான தீர்ப்பு!

ஆணாதிக்கத்திற்கு எதிரான தீர்ப்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்தத் தீர்ப்பு அரசியல் பார்வையில் விமர்சிக்கப்படுகிறது, அதுவும் தேவைதான் அதைவிட சமூகப் பார்வையில் இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவமானது‌‍. ஒரு பெண்ணுக்கு உயிரை விட கற்பு பெரிது என்ற ஆணாதிக்க சமூகப் பார்வைக்கு மரண அடி தந்திருக்கிறது இந்த தீர்ப்பு. கற்பு பெண்களுக்கு மட்டுமே புனிதமாக்கப்பட்டது, உடல் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள் துணிவுடன் வெளியே வருகிறார்கள். ஆனால் பாலியல் வன்முறை வழியாக பாதிக்கப்படும் பெண்கள் துணிவோடு வெளியே வருவது இல்லை; சமூகம் தன்னை இழிவாகப் பேசும் என்று அஞ்சுகிறார்கள். கட்டாய பாலியல் வன்முறை கூட ஒரு வன்முறைதான் என்ற புரிதலுக்கு சமூகம் வராததும் இதற்கு ஒரு காரணம். இதன் காரணமாகவே பல பெண்கள் பாலியல் வன்முறையை வெளிப்படுத்த அஞ்சுகிறார்கள். இந்த அச்சத்தை பொள்ளாச்சி கும்பல் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வீடியோக்களைக் காட்டி மிரட்டி அவர்களைப் பணிய வைத்து இருக்கிறது. ஆனாலும்...

ஆளுநர் அத்துமீறல்களுக்கு துணைபோவதா?

ஆளுநர் அத்துமீறல்களுக்கு துணைபோவதா?

இந்தியாவில் ஒற்றை மதவாத ஆட்சியைத் திணிக்கும் நோக்கத்தோடு செயல்படும் ஒன்றிய ஆட்சியின் அத்துமீறல்களுக்கு எதிராக திராவிட மாடல் ஆட்சி தான்‌ கொள்கைப் போராட்டம் நடத்துகிறது. தொகுதி மறுவரையறை திட்டத்தைப் பயன்படுத்தி தென் மாநிலங்களின் சட்டமன்ற, நாடாளுமன்ற எண்ணிக்கையைக் குறைக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே கண்டறிந்து முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர். இப்போது மீண்டும் மாநில முதலமைச்சர்களுக்கு சட்டமன்றஉரிமையை மீட்கும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.ஆளுநரின் அதிகாரப் பிடியில் இருந்து சட்டமன்ற உரிமையை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த உரிமைகளை ஒழிப்பதற்கு குறுக்கு வழியில் குடியரசுத் தலைவருக்கான 143-ஆவது அதிகாரத்தைப் பயன்படுத்த முன் வந்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. இதில் ஒன்றிய ஆட்சிக்கு என்ன பாதிப்பு வந்துவிட்டது? ஏன் இதை குறுக்கு வழியில் சீர்குலைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்? நாடாளுமன்றம் நிறைவேற்றுகிற மசோதாவுக்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்து விடுகிறார். பாஜக ஆட்சி செய்யும் மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் தீர்மானத்திற்கு உடனே...

சென்னையில் சிறப்பாக நடந்த குழந்தைகள் பழகு முகாம்

சென்னையில் சிறப்பாக நடந்த குழந்தைகள் பழகு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் இணைந்து சென்னையில் 17.05.2025 அன்று ‘திராவிட வாரிசுகள்’ ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாமை நடத்தியது. இந்த பழகு முகாமில் குழந்தைகளுக்கு தலைமைப் பண்பு வளர்த்தல், பாலின சமத்துவம், கலைகள் கற்றல் இது போன்ற தலைப்பில் கலை வடிவத்திலும் விளையாட்டு, பாடல் மூலமாகவும் வகுப்புகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, முத்துராணி, விரட்டு கலைக்குழு ஆனந்த் ஆகியோர் பயிற்சி வழங்கினர். தோழர் சிற்பி ராஜனின் மந்திரமா? தந்திரமா? என்று அறிவியல் விளக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. கழகக் குடும்பங்களைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பழகு முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலந்துகொண்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர்...

பெரியார் பல்கலை.பேராசிரியர் கதிரவனை பொறுப்பில் இருந்து நீக்குக!

பெரியார் பல்கலை.பேராசிரியர் கதிரவனை பொறுப்பில் இருந்து நீக்குக!

தமிழக அரசுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கோரிக்கை! இது குறித்து கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆட்சிக் குழு உறுப்பினர் நிர்வாகப் பதவியில் பொறுப்பு வகிப்பதா? துணை வேந்தரின் செயலுக்குக் கண்டனம். ஆட்சிக் குழு பதவிக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் உளவியல் துறை பேராசிரியர் கதிரவன்” ஆட்சிக் குழு உறுப்பினர் என்பது நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுக்கும் ஒரு அமைப்பாகும். அவ்வாறான ஆட்சிக்குழுவில் உள்ளவரே கையெழுத்திட்டு பணி இடை நீக்க ஆணையைப் பேராசிரியர் வைத்தியனாதனுக்கு வழங்கி விட்டு இவரே எப்படி ஆட்சிக் குழுவில் ஒப்புதல் தர முடியும்? இந்த முறைகேட்டால் பேராசிரியர் கதிரவன் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற தகுதியை இழந்து விட்டார். இவரை உடனடியாக ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் சேலம் பெரியார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலின்...

நாத்திகர் விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

நாத்திகர் விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

வரும் மே 24 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மாவட்டம் கொளத்தூரில் நடைபெற உள்ள நாத்திகர் விழா – மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி – பொதுக்கூட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டம் நடத்த அனுமதி கேட்டும் இதுவரை போலீசார் தரப்பில் எந்த உத்தரவும் தராததால் சேலம் மாவட்ட தி.வி.க. மகளிர் அணி அமைப்பாளர் சுதா அவர்கள் கூட்டத்திற்கு அனுமதிகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது நீதிமன்றம் உத்தரவு. வழக்குரைஞர் திருமூர்த்தி கழக சார்பில் வாதாடினார். பெரியார் முழக்கம் 22052025இதழ்

“ஆகமத்தீண்டாமையை” வலியுறுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு

“ஆகமத்தீண்டாமையை” வலியுறுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தலித் சமூகத்தைச் சார்ந்த கவாய் பதவி ஏற்ற அடுத்த நாளிலே உச்சநீதிமன்றம் ஆகம தீண்டாமையை நியாயப்படுத்தி இருக்கிறது. ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்தத் தீர்ப்பை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வரவேற்று இருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைக்கு எதிரான இந்தத் தீர்ப்பை எப்படி வரவேற்கிறார்? இந்த கோரிக்கையின் நோக்கம் அர்ச்சகர் பதவிகளுக்கானது அல்ல, மாறாக ஆகமக் கோயில்களில் சூத்திரர்கள் அர்ச்சர்களாகக் கூடாது என்ற இழிவுக்கு எதிரான போராட்டம். ஒருமுறை கலைஞர் சட்ட மன்றத்தில் “கர்ப்பகிரகத்துக்கு பாதுகாப்பு தேவை தான், ஆனால் அது வர்ணாசிரம பாதுகாப்பாக இருக்கக் கூடாது” என்று காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்தார் கலைஞர் கருத்துக்கு எதிராகவே அமைச்சர் பேசுகிறார். அரசியல் சட்டம் தலைமை நீதிபதியாக ஒரு தலித் வர முடியும் என்று கூறுகிறது. ஆனால் ஆகமங்களோ பிராமணர்களைத் தவிர பிற ஜாதியினர்...

மேச்சேரியில் பொதுக்கூட்டம்

மேச்சேரியில் பொதுக்கூட்டம்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்! இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மேச்சேரியில் 20.04.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.தாமோதரன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்வு மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மகிழவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நிறைவுரையாக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் கருத்துரையாற்றினார். இறுதியாக சேலம்...

சங்கராபுரத்தில் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்!

சங்கராபுரத்தில் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்!

28/04/2025 திங்கள் மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் செம்பராம்பட்டு ஊரில் கழக மு.சரத்குமார் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாள் மற்றும் மயிலாடுதுறை மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்ட நிகழ்வை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.இராமர் ஒருங்கிணைத்தார். மு.நாகராஜ், வீ.முருகன், தே.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமல்ல தந்திரமே என்ற சாமியார்களின் மோசடியையும், சோதிடம் போன்ற புரட்டுகளையும், மூடநம்பிக்கையால் மக்கள் எவ்வளவு ஏமாறுகிறார்கள் என்று தன்னுடைய அறிவியல் விளக்க கலைநிகழ்ச்சி மூலம் விளக்கினார். தொடக்க உரை செ.வே.ராஜேஷ் நிகழ்த்தினார். கழக மாவட்ட தலைவர் க.மதியழகன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ. இளையரசன், தபெதிக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் செ. பிரபு, மக்கள் அதிகார கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஆ.இராமலிங்கம், CPI இவிதொச, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் க.முருகேசன், அறிவியல் மன்ற தலைவர்...

சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!

சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!

பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சு தென்காசி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 03.05.2025 சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திராவிடம் – பெரியார் யாருக்கு எதிரி? என்ற தலைப்பில் கீழப்பாவூர் சென்ட்ரல் பேங்க் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சுயமரியாதைச் சுடரொளி கூ.சு.ரா திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குறும்பை. அரு. மாசிலாமணி தலைமை வகித்தார். கீழப்பாவூர் ஒன்றிய தி.வி.க. செயலாளர் செட்டியூர் சேர்மத்துரை திப்பணம்பட்டி தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட தி.வி.க. செயலாளர் பொ.பெ.சு.அன்பரசு வரவேற்புரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினர். அவர் தனது உரையில் இந்தியா எனும் மதச் சார்ப்பற்ற நாட்டை ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு RSS ன் கொள்கையான சனாதனக் கொள்கையை இந்தியாவின் சட்டமாக்கிட இந்தியாவை வேத காலத்திற்கு கொண்டு சென்று வேறுபாடு நிறைந்த ஜாதி வேற்றுமை கூடிய நாடாக மாற்றத் துடிக்கிறார்கள்....

ஜாதிக் குறியீடுகளை ஒழிப்பதும் ஜாதி ஒழிப்புதான்!

ஜாதிக் குறியீடுகளை ஒழிப்பதும் ஜாதி ஒழிப்புதான்!

கடவுள் ஜாதி மதத்தைக் கடுமையாக எதிர்த்த புரட்சிக் கவிஞருக்கு தமிழ்நாடு முதல்வர் அரசு விழா அறிவித்ததோடு காலனி என்ற சொல்லும் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும் என்று அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைப் பார்வையாகவே இதைக் கருத வேண்டும். இதே போல் நீதிக் கட்சி ஆட்சி ஆணைகளில் குறிப்பிடப்பட்டு வந்த “பஞ்சமன், பறையன்” என்ற வார்த்தைகளை நீக்கி ஆதிதிராவிடர் என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தெருக்களில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க ஆணையிட்டார். இதிலும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள், `காலனி’ என்ற பெயரை நீக்கி விட்டால் ஜாதி ஒழிந்து விடுமா? என்று கேட்கிறார்கள். தனது பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பட்டத்தை பெரியார் ஒழித்தார் ஜாதிப் பெயரை போட வேண்டாம் என்ற ஒரு இயக்கம் தமிழ்நாட்டில் நடந்தது. இப்போது ஜாதிச் சங்க தலைவர்கள் கூட தங்கள் பெயருக்குப் பின்னால்...

திராவிட  மாடல் ஆட்சியும் ஆல்பர்ட்டா மாகாணமும்!

திராவிட மாடல் ஆட்சியும் ஆல்பர்ட்டா மாகாணமும்!

கனடாவில் நடந்து முடிந்த தேர்தலில் நான்காவது முறையாக லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கனடாவில் கூட்டாட்சி அரசியல் அமைப்பு என்ற நடைமுறை இருக்கிறது. ஆல்பர்ட்டா என்ற மாநிலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி தான் மக்கள் செல்வாக்கோடு ஆட்சியில் இருக்கிறது. கனடா கூட்டாட்சி ஆட்சியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று ஆல்பர்ட்டா மாநில ஆட்சி குற்றம் சாட்சி வருகிறது. அதிக வரி செலுத்தும் மாநிலமாகவும், வளர்ச்சி திட்டங்களில் முதலிடம் பெற்ற மாநிலம் ஆல்பர்ட்டா தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து மாநில மக்களும் மாநில ஆட்சியும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கன்சர் வேட்டிவ் வெற்றி பெற்ற அடுத்த நாளே ஆல்பர்ட்டா சட்டமன்றம் கூடி மசோதா ஒன்றை நிறைவேற்றி உள்ளது. கனடா கூட்டாட்சி அமைப்பிலிருந்து ஆல்பர்ட்டா தனியாக பிரிந்து செல்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்த மசோதா கூறுகிறது. ஆல்பர்டடா மாநில பிரிமியர் ஸ்மித் மார்கார்னி இவ்வாறு கூறியுள்ளார்: ஆல்பர்ட்டா மக்கள் பெருமைமிக்க கனடியர்கள் நாங்கள்...

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்குமா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்குமா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய‌ அமைச்சரவை ஏன் திடீர் முடிவுக்கு வந்தது? இதற்குப் பின்னால் பீகார் சட்டமன்றத் தேர்தல் எனும் கட்சி அரசியல் அடங்கி இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைக் குறிவைப்பதே இந்த திடீர் அறிவிப்பின் நோக்கம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த சமூகநீதி கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒருமித்த குரலாக இந்த கோரிக்கை உருவாகியுள்ளது. ஒன்றிய‌ பாஜக ஆட்சி இதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி கடுமையாக எதிர்த்துப் பேசினார். ஜாதி கணக்கீடு கேட்பவர்கள் பிரிவினைவாதிகள் என்றும் `அர்பன் நக்சல்கள்’ என்றும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி கணக்கெடுப்புகள் எடுக்கும் திட்டம்...

கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

தோழர்‌ பத்ரி நாராயணன் நினைவு நாளில்”கற்போம்! களம் காண்போம்!” என்ற தலைப்பில் 30/04/25 அன்று சென்னை இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில், கழக இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர் ப.அருண் தலைமையில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை கழக இளைஞரணி தோழர்கள் நேர்த்தியாக செய்திருந்தனர். பயிற்சி பெற்ற 55 பேரில் 15 க்கு மேற்பட்டவர்கள்‌ பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட இயக்க வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களின் படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. கழகத்தலைவர் தனது தொடக்க உரையில் சுயமரியாதை இயக்கத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் உள்ள பண்பு ரீதியான வேறுபாடுகளை சுட்டிக்காட்டி இயக்க வரலாறுகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவையை வற்புறுத்தினார். நிறைவுரை ஆற்றிய விடுதலை இராசேந்திரன் கழகத் தோழர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமான விடையளித்தார். கருத்துரையாற்றிய அனைவருக்கும் கழக வெளியீடுகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. “கொள்கை தரும் இன்ப வாழ்வு!” எனும் தலைப்பில் மாவட்டச்...

நீட் தேர்வில் தொடரும் ‘கெடுபிடிகள்’-ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைகிறது

நீட் தேர்வில் தொடரும் ‘கெடுபிடிகள்’-ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைகிறது

ஒன்றிய ஆட்சியின் தேர்வு நிறுவனம் நடத்தும் கெடுபிடிகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது 2021-க்குப் பிறகு 2025 இல் முதல் முறையாக மிக மோசமான அளவுக்கு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த 25 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுத முன் வந்துள்ளனர். ● நீட் நுழைவுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய, தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 42 பேர், மூன்று ஆண்டு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. ● எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாகப் புகார் எழுந்தது. ● இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து...

நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தோழர்களுக்கு வணக்கம்,வருகிற நாள் 24.05.25 சனிக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக பெண்களே தலைமையேற்று முழுமையாக நடத்தும் “நாத்திகர் விழா “நடைபெற உள்ளது. “நாத்திகர் விழா”வின் முதல் நிகழ்வாக முக்கிய நிகழ்வாக மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில், 1. முதுகில் அலகு குத்தி கார் இழுப்பது 2. முதுகில் அலகு குத்தி தொங்கும் பறவைக் காவடி 3. தீச்சட்டி ஏந்துதல் 4. ஆணிப் படுக்கையில் படுத்து வருவது 5. அரிவாளின் மீது ஏறி நிற்பது 6. கன்னத்தில் அலகு குத்துவது 7. கன்னத்தில் முதுகில் எலுமிச்சம்பழம் குத்துவது 8. நாக்கில் சூடத்தை எரிய விடுவது 9. நெருப்பை கக்குவது 10. சுருள் வீச்சு 11. தீப்பந்தம் சுற்றுதல் 12. சிலம்பம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கீழ்காணும் அலைபேசி எண்ணில் முன்கூட்டியே பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். “மூடநம்பிக்கைகளை...

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் இல்லம்‌ சென்று ஆ.ராசா நலம்‌ விசாரித்தார்.

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் இல்லம்‌ சென்று ஆ.ராசா நலம்‌ விசாரித்தார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் இல்லத்துக்கு சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் நலம் விசாரித்தார். உடன் திமுக பொறுப்பாளர்கள் ரோட்ஜ், முனுசாமி தொண்டாமுத்தூர் ரவி, சி.ஆர் இராமச்சந்திரன், அருண், அறிவரசு மற்றும் கழக தோழர்கள் பலர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் 08052025இதழ்

கழக தலைவர் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்!

கழக தலைவர் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்!

03.05.2025 அன்று கோவை சின்னியம்பாளையத்தில் பெரியார் உணர்வார்கள் ஏன் வேண்டும் திராவிட மாடல் ஆட்சி! என்ற தலைப்பில் பொதுக்கூட்டத்தை நடத்தினர். கூட்டத்திற்கு சிவா மொபைல்ஸ் சிவா தலைமை தாங்கினார். சூலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார். கழக மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். நிறைவாக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சிபிஐ(எம்) மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குமார், தி.மு.க. மருத்துவரணி பெரியார் செல்வி, அ.பா.சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, தி.மு.க. மகளிரணி ஜெயலலிதா, திருப்பூர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் விஷ்ணு நன்றி கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் கோவை திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுக்கூட்டம் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வை வழக்கறிஞர் சரவணக்குமார் ஒருங்கிணைத்தார். இனியன் கழக தலைவர் முன்னிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்....

நூற்றாண்டு காணும் பெரியார் பேரொளி திருவாரூர் தங்கராசு

நூற்றாண்டு காணும் பெரியார் பேரொளி திருவாரூர் தங்கராசு

சுயமரியாதை சுடரொளி திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு கூட்டத்தை நிமிர்வோம் வாசகர் வட்டம் கழக தலைமை அலுவலகத்தில் 9-5-25 அன்று நடத்தியது. திருவாரூர் தங்கராசு இயக்கத்தின் பரப்புரையளராக பெரியார் கொள்கைகளை வாழ்நாள்‌ முழுவதும் கொண்டு சென்றார். 1927-ல் பிறந்த அவர் 1947-லிருந்து 1973 வரை திராவிடர் கழகத்தில் முதன்மை இயக்கப் பேச்சாளராக இருந்தார். ஒவ்வொரு திராவிடர் கழகத்தின் குடும்பத்தினருடன் அவர் நெருக்கமாக இருந்தவர். 1957 நடந்த சட்ட எரிப்பு போராட்டத்தின்‌ போது தமிழ்நாடு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட கழகத் தோழர்களை பெரியார் நேரில் சென்று சந்தித்தார். அப்போது திருவாரூர் தங்கராசு அவர்களை பெரியார் உடன் அழைத்து சென்றார். கலைஞர் எழுதி நடிகர்வேள்‌ எம்.ஆர் ராதா‌ நடித்த தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் திருவாரூர் தங்கராசு. நடிகர்வேள் எம்.ஆர்.ராதா நடித்து நாட்டையே அதிரச் செய்த ராமயாணம் நாடகத்துக்கு கதை வசனம் எழுதியவர் இவர் தான். நடிகர்வேள்‌ நடிப்பில் இவர் எழுதிய ரத்த கண்ணீர் நாடகம்...

இணையத்தை ஆக்கிரமித்த ஏ.ஐ. பெரியார்!

இணையத்தை ஆக்கிரமித்த ஏ.ஐ. பெரியார்!

சட்டகத்தில் அடங்காத பெரியாரின் படம் ஒன்று, `The Man who does not fit into frames’ என்ற குறிப்போடு புகழ்பெற்றது. அதன் அர்த்தமும் ஆழமானது. எந்தப் புதிய தொழில்நுட்பம் றிமுகம் ஆனாலும், அதை பெரியார் எப்படி அணுகுவார் என்பது பேசுபொருளாக ருக்கும். அந்த வகையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. மறைந்து அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கருத்தியலாகவும், விவாதமாகவும் இருக்கும் பெரியார், இப்போது அழகியலாக `டிரெண்டிற்கு’ வந்திருக்கிறார். ஏ.ஐ.-யில் உருவாக்கப்பட்ட பெரியார் படங்கள் பல சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. புரட்சியாளர் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸோடு அமர்ந்து பேசுவது போலவும், மடிக்கணினி பயன்படுத்துவது போலவும், அம்பேத்கரை அமர த்து பெரியார் `புல்லட்’ ஓட்டிச் செல்வது போலவும், பள்ளிச் சிறுமியை அழைத்துச் செல்வதுபோலவும், பட்டம் வாங்கிய இளம்பெண்கள் பெரியாரைத் தூக்கிச் சுமந்து கொண்டாடுவது போலவும் என விதவிதமான பெரியார் படங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு சமூக ஊடக உலகில்...

விகடனின் ஜாதி ஒழிப்பு நாடகம்!-

விகடனின் ஜாதி ஒழிப்பு நாடகம்!-

விஜய் தொலைக்காட்சி நடத்திய ‘நீயா நானா நிகழ்ச்சியில்’ போடி நாயக்கனூரைச் சேர்ந்த ஒரு தலித் மாணவி ‘காலனி’ என்ற சொல் எப்படி காயப்படுத்துகிறது என்ற வேதனையை உருக்கமுடன் பேசினார். அடுத்த இரண்டு நாட்களில், தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் இனி அரசு பதிவேடுகளில் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த வாரம் வெளிவந்துள்ள ஆனந்த விகடன் வார ஏடு வார்த்தையை நீக்கி விட்டால் மட்டும் ஜாதி தீண்டாமை ஒழிந்து விடுமா? என்று தமிழ்நாடு அரசை கடுமையாக் கண்டித்து தலையங்கம் தீட்டி இருக்கிறது. ஜாதி ஒழிப்புக் களத்தில் குறியீட்டு ஒழிப்புகளும் ஒரு தேவைதான்; ஜாதி ஒழிப்புக்கு மந்திரக்கோல் எதுவும் கிடையாது.பல்வேறு களங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற வேண்டும். ஜாதி தீண்டாமைகளை முற்றிலும் ஒழித்து விடாமல் இப்படி பெயரை மட்டும் மாற்றுவது சரியா என்று கேட்கும் கேள்விகளில் திமுக எதிர்ப்பு என்ற உள்நோக்கத்தைத் தவிர கொள்கை பார்வை ஏதும் இருப்பதாக நமக்கு...

அமித்ஷாவின் பார்ப்பனியம்

அமித்ஷாவின் பார்ப்பனியம்

இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதமே என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் பேசி இருக்கிறார். ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 சமஸ்கிருத்துக்கு மட்டுமே அழுத்தத்தையும் முன்னுரிமையும் தருகிறது. வணிகம், வானவியல், தத்துவம் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுடன் சமஸ்கிருத தொடர்புகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்தை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜகவினர் இதில் இந்தி இல்லை என்று வாதிட்டனர். தாய்மொழி தான் வலியுறுத்தப்படுகிறது என்றும் இதற்காக மோடி இந்தி குறித்த சொற்றொடர்களை நீக்கி விட்டார் என்றும் பேசினார்கள். நடைமுறையில் மும்மொழி திட்டம் என்பது இந்தி திணிப்புக்கே வழிவகுக்கும் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் அமித்ஷாவின் இந்த பேச்சு மும்மொழி திட்டம் பார்ப்பனியத்தை வலியுறுத்துவதே என்பதை உறுதிப்படுத்துகிறது. அமித்ஷா மொழி அறிஞர் அல்ல. அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதமே தாய்மொழி என்பதற்கு அவர் எந்த வித சான்றுகளையும் முன்வைக்கவில்லை. உண்மையில் அமித் ஷாவின்...

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மே18 அன்று திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர இசை திருவிழா கன்னிகுமரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட அறிக்கையை விடுத்து இருந்தார். துயர மிகுந்த இந்த நாளில் இவ்வாறான கொண்டாட்டத்தை நடத்துவது இன உணர்வுமிக்க தமிழர்களின் உணர்வுகளைப் பதறவைக்கும் ஒன்றாகும். அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை இதனை வேறு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டுமாறு முதற்கட்டமாக கனிவுடன் கோருகிறோம் என்று குறிப்பிட்டுருந்தார். அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்‌ நாசர்‌ இதில் தலையிட்டு நிகழ்ச்சியை தள்ளி வைக்க முயற்சிகளை எடுத்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டது. இத்தகவலை திரு நாசர் கழக தலைவருக்கு கடிதமாக எழுதியுள்ளார். இன‌முரசு சத்தியராஜ் இந்த கடிதத்தை கழக தலைவருக்கு அனுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கையில்: ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கழகத்...

கழகத் தலைவருக்கு சீர் விருது

கழகத் தலைவருக்கு சீர் விருது

சீர் வாசகர் வட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு 2025 ஆண்டுக்கான‌ சமூக போராளி விருது வழங்குகிறது. விருது தொகை ரூ. 1,00,000 இது தொடர்பாக சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் போராட்ட களங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர் என்று பாராட்டி உள்ளது.வாசகர் வட்டத்தின்‌ அறிக்கை: சாதி ஒழிப்பு, சமூகநீதி, பாலின சமத்துவம், பகுத்தறிவுப் பரப்புரை, சுரண்டல் எதிர்ப்பு என மானுட விடுதலைக்கான அனைத்துத் தளங்களிலும் போராட்டக் களங்களிலும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர். இட ஒதுக்கீட்டு வரலாறு, விடுதலை வேட்கை, தமிழர் பண்பாடு, பெரியாரும் தனித்தமிழ்நாடும், பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தமிழர், தமிழ்நாடு நலன்சார்ந்த போராட்டங்களுக்காக எண்ணற்ற முறை சிறை சென்றவர். சட்டத்தை விட நியாயமே மேலானது என்பதை உரத்துச் சொல்பவர். தன் பேச்சையும் மூச்சையும்...

வடகாட்டில் கொடூரமான ஜாதி வெறித் தாக்குதல்!-கழகத் தோழர்கள் கள ஆய்வு

வடகாட்டில் கொடூரமான ஜாதி வெறித் தாக்குதல்!-கழகத் தோழர்கள் கள ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம், வடகாடு கிராமத்தில் அடைக்கலங் காத்தார் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் ‘அண்ணா கைப்பந்துக் கழகம்’ என்ற பெயரில் விளையாட்டுத் திடல் அமைத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில், மேற்படி இடத்தில் தலித் மக்கள் பொங்கல் விழா நடத்துவதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முயற்சித்த போது, இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, மேற்படி இடம் பட்டியல் இன மக்களுக்குச் சொந்தமானது என்ற தீர்ப்பைப் பெற்றுள்ளனர். அண்ணா கைப்பந்து கழகத்தினர் மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட் களுக்கு முன்பாக மேற்படி அடைக்கலங் காத்தார் அய்யனார் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக தலித் மக்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். அப்போது பிற சமூகத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், எந்தக் குற்றமும் செய்யாத பட்டியலின...

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

கோவை: சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 135-வது பிறந்தநாளில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் நவீன் அவர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனர். பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் டெம்போ சிவா, திவிக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், திவிக கோவை மாநகரச் செயலாளர் வெங்கட், திவிக கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், முன்னாள் கோவை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் மதிவாணன், தமிழ்ப்புலிகள் தோழர்கள் தம்பி செந்தில், கோவை குமார், ராமகிருஷ்ணன், திவிக தோழர்கள் ஸ்டாலின், மாதவன், நிலவழகன், ராமகிருஷ்ணன், கீர்த்தீகா, அபிலேஸ் பாண்டியன் மற்றும் மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதியாக ரத்தினபுரி பகுதி திவிக பொறுப்பாளர்...

களப்பணியில் கழகத் தோழர்கள்

களப்பணியில் கழகத் தோழர்கள்

18.03.25: புலியூர், தரங்கம்பட்டியில் “பெரியார் இன்னும் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. பரப்புரையின் போது கரூர் மாவட்ட எல்லையில் நொய்யல் பகுதியில் கரூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் குடியரசு கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், பரப்புரைப் பயணத் தோழர்களுக்கு குடிநீர், பிஸ்கட் வழங்கி வழியனுப்பி வைத்தனர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி மற்றும் பயணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். 19.03.25: மணப்பாறை காமராஜர் சிலை, இலுப்பூர், அன்னவாசல் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றன. 20.03.25: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் 4-ரோடு, ஆலங்குடி, விராலிமலை, வடகாடு, கைகாட்டி பகுதிகளில் மக்கள் பேராதரவோடு பரப்புரைக் கூட்டங்கள் சிறப்புடன் நடைபெற்றன. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சொர்ண குமார், விசிக வழக்கறிஞர் அம்பேத்கர் வளவன், சிபிஜ முருகன் கலந்து கொண்டு உரையாற்றினர்....

வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, ஜான் இளமாறனுக்கு பாராட்டு!

வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, ஜான் இளமாறனுக்கு பாராட்டு!

கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ராஜ் பவன், வெல்கம் ஹோட்டல்களை முற்றுகையிட்டதாக தொடரப்பட்ட வழக்கு, எஸ்.வி.சேகர் வீட்டை முற்றுகையிட்ட வழக்கு, பெரியார் சிலையை உடைப்போம் என ஹெச்.ராஜா கூறியதற்காக சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் எதிர்வினையாற்றியதாக தொடரப்பட்ட வழக்கு, இலங்கை தமிழர் விவகாரத்தில் புத்த மட முற்றுகை வழக்கு என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த பல முக்கிய வழக்குகளில் இருந்து கழகத் தோழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் கழகத் தோழர்கள் சார்பாக ஆஜராகி விடுதலை பெற்றுத் தந்த வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, இளமாறன், ஜான் ஆகியோருக்கு பாராட்டு விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த பாராட்டு நிகழ்வில், கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகத்தினர் மீதான வழக்குகளை திறம்பட நடத்திய வழக்கறிஞர்களை பாராட்டிப் புத்தகங்களை வழங்கினார்....

பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

கோயம்­புத்­தூர் மாவட்­டம், ஆர்.எஸ்.புரத்­தில் உள்ள மாந­க­ராட்சி கலை­ய­ரங்­கத்­தில் திரா­விட இயக்­கத் தமி­ழர் பேரவை சார்­பில் சுய­ம­ரி­யாதை இயக்க நூற்­றாண்டு விழா­வை­யொட்டி இரண்டு நாட்­கள் நடை­பெ­றும் கருத்­த­ரங்­கம், கவி­ய­ரங்­கம், கலை நிகழ்ச்சி, பேரணி மற்­றும் பொது மாநாட்டை (26–04–2025) தொடங்கி வைத்து, விழா­வில் திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழு தலை­வரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் தொடக்க உரை­யாற்­றி­னார். இம்மாநாட்­டில் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அவர்கள் பேசி­ய­தா­வது:– “அண்­ணன் சுபவீ அவர்­கள் இந்த மாநாட்­டிலே நீ கலந்­து­கொள்ள வேண்­டும் என்று கேட்­ட­போது… எத்­த­னையோ பெரு­மை­கள் நமக்கு கிடைக்­க­லாம், தேர்­த­லிலே வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்­க­லாம், நம் உழைப்பை அங்­கீ­க­ரித்து நாம் சார்ந்­தி­ருக்­கும் இயக்­கங்­கள் நமக்கு பொறுப்­பு­கள் அளிக்­க­லாம். ஆனால் இதை­யெல்­லாம் விட பெரு­மை­யாக நான் நினைப்­பது, தலை­வர் கலை­ஞர் அவர்­கள் என்­னைப் பற்றி மேடை­யிலே குறிப்­பிட்­டுச் சொன்­னார்­கள். எங்­கள் வீட்­டில் எல்­லா­ரும் திமுக என்­றால் என் மகள் கனி­மொழி திரா­வி­டர் கழ­கத்­தைச்...

பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

பெரியார் கடவுள் மதத்தை எதிர்த்தது ஏன்? கனிமொழி எம்பி விளக்கம்

கோயம்­புத்­தூர் மாவட்­டம், ஆர்.எஸ்.புரத்­தில் உள்ள மாந­க­ராட்சி கலை­ய­ரங்­கத்­தில் திரா­விட இயக்­கத் தமி­ழர் பேரவை சார்­பில் சுய­ம­ரி­யாதை இயக்க நூற்­றாண்டு விழா­வை­யொட்டி இரண்டு நாட்­கள் நடை­பெ­றும் கருத்­த­ரங்­கம், கவி­ய­ரங்­கம், கலை நிகழ்ச்சி, பேரணி மற்­றும் பொது மாநாட்டை (26–04–2025) தொடங்கி வைத்து, விழா­வில் திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழு தலை­வரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் தொடக்க உரை­யாற்­றி­னார். இம்மாநாட்­டில் கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. அவர்கள் பேசி­ய­தா­வது:– “அண்­ணன் சுபவீ அவர்­கள் இந்த மாநாட்­டிலே நீ கலந்­து­கொள்ள வேண்­டும் என்று கேட்­ட­போது… எத்­த­னையோ பெரு­மை­கள் நமக்கு கிடைக்­க­லாம், தேர்­த­லிலே வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்­க­லாம், நம் உழைப்பை அங்­கீ­க­ரித்து நாம் சார்ந்­தி­ருக்­கும் இயக்­கங்­கள் நமக்கு பொறுப்­பு­கள் அளிக்­க­லாம். ஆனால் இதை­யெல்­லாம் விட பெரு­மை­யாக நான் நினைப்­பது, தலை­வர் கலை­ஞர் அவர்­கள் என்­னைப் பற்றி மேடை­யிலே குறிப்­பிட்­டுச் சொன்­னார்­கள். எங்­கள் வீட்­டில் எல்­லா­ரும் திமுக என்­றால் என் மகள் கனி­மொழி திரா­வி­டர் கழ­கத்­தைச்...