வினாடி வினா
தமிழ்நாடு இரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய ஆட்சி அனுப்பிய நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பி விட்டது. -செய்தி
ஆமாம்.தெற்கு ரயில்வே வடக்கு இரயில்வேவாக மாறிவிட்டது.
“ஆச்சாரியா பஞ்சகச்சம்” வேட்டியை வெளியிட்டு ராமராஜ்ய மரபுகளுக்கு பெருமை சேர்த்துள்ளோம். -ராம்ராஜ் காட்டன்
ராம்ராஜ் காட்டன் ஜட்டிகளைத் தயாரித்து ராமனுக்கு பெருமை சேர்த்ததையும் சேர்த்து சொல்லுங்க.
கீழடி அகழ்வாய்வு அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத்துக்கு திருத்தி எழுத திருப்பி அனுப்பியுள்ளது. -ஒன்றிய ஆட்சி
ஆர்எஸ்எஸ் ஆபிஸ்க்கு மெயில் போடுங்க. அமர்நாத் வேலையை அவங்க பார்த்துப்பாங்க.
எங்க கூடத்தான் பாமக இருக்கு -பாஜக தலைவர் நயினார்
சரி; பாமக யாரு கூட இருக்கு நயினார் ஜீ.
குற்றவாளி ஞானசேகரன் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை விசாரிக்க வேண்டும். -அண்ணாமலை
இது நீதிமன்ற விசாரணை ஜீ, அமலாக்கத்துறை விசாரணை அல்ல.
பெரியார் முழக்கம் 01062025இதழ்.
