பிரதமர் ஆனவுடன் மோடி செய்த சதி அம்பலப்படுத்திய முன்னாள் அதிகாரி
குஜராத் மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த பிரதமர் மோடி, அப்போதெல்லாம் ஜி.எஸ்.டி கூடாது, அது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என்றார். ஒன்றிய அரசு மாநிலங்களுக்கான உரிமைகளை நசுக்கக்கூடாது, மாநில அரசுகளுக்கு உரிய நிதியை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பலமுறைப் பேசியிருக்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கூட, ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களுக்கு அதிக உரிமை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை முழங்கினார். அப்பேர்ப்பட்ட மாநில உரிமைப் போராளியாக தன்னைக் காட்டிக்கொண்ட நரேந்திர மோடி, ஆட்சிக்கு வந்தவுடன் சத்தமில்லாமல், பின்வாசல் வழியாக செய்ய முயன்ற காரியங்கள் அம்பலமாகியிருக்கின்றன. மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்தளிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு நிதிக்குழு. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த அமைப்பை, ஒன்றிய அரசு கடந்த 9 ஆண்டுகளாக கையாளும் விதம் பலமுறை சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. வளர்ந்த தென் மாநிலங்களுக்கான வருவாய் பங்கீட்டைக் குறைக்கும் விதமாக பரிந்துரைகளை நிதிக்குழு வழங்க, ஒன்றிய அரசின்...