சென்னையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறது
சென்னை மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 – நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 10, 2024, மாலை 6 மணிக்கு வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட முன்னேற்றக் கழக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சென்னை தெற்கு மாவட்டத் துணை அமைப்பாளர் தடா ஓ.சுந்தரம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் உமா ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றவுள்ளனர்.
திண்டுக்கல் : பழனியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் பிப்ரவரி 10, 2024, காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
பெரியார் முழக்கம் 08022024 இதழ்