உள்இடஒதுக்கீடு தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகச்சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது தலித் பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாமா? கூடாதா? என்பது குறித்த தீர்ப்பாகும். அப்படி சட்டப்படி உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்பதே இந்தத் தீர்ப்பின் முக்கிய சாரம்சமாகும். ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருவர் மட்டுமே உள் இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார். மீதி ஆறு பேரும் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அதில் மூன்று நீதிபதிகள் உள் இட ஒதுகீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தாலும் எஸ்.சி/எஸ்.டி இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை பின்பற்றப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர். குறிப்பாக ஒரு நீதிபதி மட்டும் முதல் தலைமுறையாகப் படிக்க வருகிறவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். மற்ற மூன்று நீதிபதிகள் இப்போது உள்ள...