வினா விடை
- அயோத்தி ராமன் கோயிலில் இடி விழாமல் காப்பாற்ற இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளது. – செய்தி
ஆமாம், அதற்காக புதிய ஆகமம் ஒன்றை எழுதி அதற்கு மோடி இடிதாங்கி ஆகமம் என்று பெயர் சூட்டியிருக்கிறோம்.
- அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது
– நாடாளுமன்றத்தில் மோடி
ஆமாம், அதற்காகத்தான் ஒரே இயக்குநரை மூன்றுமுறை முறைகேடாக பதவி நீடிப்பு வழங்கினோம். உச்சநீதிமன்றம்தான் சுதந்திரத்தைப் பறித்துவிட்டது.
- 1976 நெருக்கடி நிலை காலத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. இப்போது உயரவில்லை – மோடி
ராஜராஜ சோழன், பல்லவ மன்னன் காலத்தில் விலைவாசி அதிகமாக இருந்ததா?
- பிற மதத்தவர் இந்து மதத்தை தழுவ திருப்பதியில் ஏற்பாடு – சனாதன தார்மீக கருத்தரங்கில் தீர்மானம் – செய்தி
இந்து மதத்தில் எந்த ஜாதியில் அவர்களுக்கு இடம் கொடுப்பீர்கள்? ஜாதி மாறவும் சிறப்புத் திட்டம் எதாவது இருக்கிறதா?
- சண்டிகர் தேர்தலில் தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்
சரி, அவரை ஒரு மாநிலத்திக்கு ஆளுநராக அனுப்பி வைக்கிறோம்.