Category: குடி அரசு 1939

33. கடல் குமுறுது!

33. கடல் குமுறுது!

காற்றடிக்குது கடல் குமுறுது! கண்ணைத்திறவாய் நாயகமே என்று பாடிய கவியின் கருத்தை, சென்னை சென்ற ஞாயிறன்று, மிகமிக அழகாக எடுத்துக்காட்டிற்று. அன்று பெரியார் வரவேற்புக் கூட்டம் மிக ஆடம்பரமாக திருவல்லிக்கேணி கடற்கரையில் கொண்டாடப்பட்டது. கடல் அலை ஒலிக்கு சக்தி அதிகமா அன்றி தமிழரின் முரசொலிக்கு சக்தி அதிகமா என்று போட்டி நடந்து அன்று. கடற்கரையில் எங்கு நோக்கினும் தமிழர்கள்! தமிழ்ப்பெண்கள்! தமிழ் வாலிபர்கள்! தமிழ்த் தலைவர்கள்! 1000-க்கு மேற்பட்ட வெளியூர்த் தமிழர்கள் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஆச்சாரி சர்க்காரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சிறைசென்று மீண்ட தாய்மார்க்ள் ஒரு புறமும், தொண்டர்கள் மற்றொரு புறமும் அமர்ந்திருக்க உயரமாக எழுப்பப்பட்ட மேடைமீது மின்சார விளக்கொளியுடன் நீதிக்கட்சிச் சின்னமாகிய திராசு மின்னவெண்ணிறத்தாடி கடற்காற்றால் ஆடி அசைய, பிரகாசிக்கும் கண்கள் அங்குமிங்கும் பாய்ந்து நோக்க, பெரியார் மேடைமீது அமர்ந்த காட்சியை தமிழர் என்றும் மறவார்! அன்று கண்ட தமிழரின் உற்சாகத்தை பெரியாரும் என்றும் மறவார். அக்காட்சியை, சரிதமும் மறவாது....

32. காந்தீயத்தின் கிழப்பருவம்

32. காந்தீயத்தின் கிழப்பருவம்

காந்தீயம் ஒன்றுதான் நாட்டு விடுதலைக்கு ஏற்ற மார்க்கமென்றும், சுயராஜ்யம் பெற, காந்தியார் ஒருவரே வழிகாட்டியாக இருக்க முடியுமென்றும், அவர் அரசியலில் மட்டும் நிபுணரல்ல. மதத்திற்கும் குருவென்றும், அவர் இதற்குமுன் தோன்றிய எத்தனையோ காங்கிரஸ் தலைவர்களைப் போன்றவரல்ல, எல்லாரினும் இவரே உயர்ந்தவர் என்றும் சுருக்கமாக கூற வேண்டுமானால் அவர் வெறும் ஆத்மா அல்ல, மாகத்மா என்றும், பலத்த பத்திரிகைப் பிரச்சாரத்தால், நாடு முழுதும் பரப்பப்பட்டு, பாமர மக்கள் அவ்வளவு பேரும் அவரை அவதார புருஷர் என்ற அளவுக்குக் கொண்டாடூம் நிலை வந்து, அறிவாளிகளும் அவருடைய அந்தராத்மா, என்ற பேச்சிலே லயித்து, அவரைத் தம் ஞானாசிரியராக இருக்கச் செய்து, வந்த நிலை இன்று மாறி, காந்தீயம் என்றால் இன்னது அதைப்பற்றி சிலர் இன்னவிதமான தப்பர்த்தம் செய்து கொள்கின்றனர்; அதற்கு இது சமாதனம் என்று பலர் வியாக்யானம் செய்யவேண்டிய நிலை இன்று வந்துவிட்டது. ஒரே அடியாக காந்தீயத்தில் அமிழ்ந்து போயிருந்த மக்களுக்குள் இன்று ஒருவித விழிப்பு...

31. கொடி இறங்கும்

31. கொடி இறங்கும்

ஜுலை 11-ந்தேதி சென்னைக் கார்ப்பரேஷன் கட்டடத்தின்மீது இன்று பறந்து கொண்டிருக்கும் காங்கரஸ் கொடி இறக்கப்படுமெனத் தெரிகிறது. கொடி ஒவ்வொரு கட்சிக்கும் உண்டு. ஆனால் காங்கிரஸ்காரர்கள் தமது கொடி சாதாரண கட்சிக் கொடி அல்லவென்றும் அது தேசீயக்கொடி என்றும் கூறி வந்தனர். கோட்டையில் கொடி கட்டுவோம்! என தேர்தல் காலத்தில் பேசினர். ஆனால் கவர்னர் இது தேசீயக்கொடியாகாது. இது ஒரு சாதாரண கட்சிக்கொடி என்று கூறினார்.  காங்கரஸ் வீரர்கள் வீரத்தை வீட்டிலே பத்திரமாக மூடி வைத்துவிட்டு, கவர்னர் இருக்கும் திக்குநோக்கி தெண்டனிட்டு, சரி! சரி! துரையவர்களே. மூவர்ணக் கொடி என இனி இதை அழைக்கிறோம். வெள்ளையரின் கொடி ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் வேளைகளிலே இந்தக்கொடியை ஏற்ற மாட்டோம்; தங்கள் சித்தம் எமது பாக்கியம் என விண்ணப்பித்துக் கொண்டனர். இன்றும், இவர்கள் கூடி சட்டமியற்றும் சபையிலே இவர்கள் தலைக்கு மேலே வெள்ளைக்காரர் கொடி தான் பறக்கிறது. இதைக்கண்டும் உள்ளே இருப்பதால் தான் கவர்னர் முடுக்காக ஒரு...

30. மீனாட்சி அம்மையும் மஞ்சப்பெட்டி ஐயனும்!

30. மீனாட்சி அம்மையும் மஞ்சப்பெட்டி ஐயனும்!

நேக்கு நன்னா தெரியண்டி கமலம்! இந்தப்பாழும் பிராமணன் இப்படித்தான் ஆச்சாரங்கெட்டு அலையப்போறான் என்று என மதுரை அம்மாமிமார் பேசியிருப்பர். கலிகாலமேன்னோ! எல்லாம் தலைகீழா மாறிவிட்டது. பஞ்சமாளை அம்மன் சன்னதியிலே வுட்டூட்டாளாம். அபச்சாரம்! அபச்சாரம்! ரௌரவாதி நகரமன்னா சித்திக்கும் அவாளுக்கு என்று சனாதன சாஸ்திரிகள் கூறியிருப்பர். நானும் பார்த்துண்டே வர்ரேன். அந்த ராமசாமி நாய்க்கன் என்னென்ன சொன்னானோ அவ்வளவும் நடந்துண்டே வர்ரது. ஈஸ்வரனுக்குக் கண்ணில்லே என்று வைதீகர்கள் குளத்தங் கரையில் பேசியிருப்பர். இது ஒரு சரியான சான்சுதான் வரப்போற ஜில்லா போர்டு தேர்தலிலே ஒரு கை பார்க்கலாம். இந்த சு.ம.க்களுக்கெல்லாம் இனி வேலை ஏது என்று தேசீய சர்மாக்கள் பேசியிருப்பர். தினமணியோ வழக்கப்படி ராஜாஜி வாழ்க என்ற பல்லவியைப் பாடிவிட்டது. ஆனந்த விகடனுக்கு அத்தோடு திருப்தியில்லை. வாழ்த்துவதற்கு ஆளா இல்லை. ராஜாஜியில் ஆரம்பித்து காந்தியார் வரையில் சென்று, ஒரு மூச்சு வாழ்த்து வாழ்த்தென வாழ்த்தித் தீர்த்துவிட்டது. அதன் ஆசை அவ்வளவோடு தீர்ந்து போகவில்லை....

29. சென்னையே! கொச்சியைப் பார்

29. சென்னையே! கொச்சியைப் பார்

கோவை நகர திலகம், தமிழ் நாட்டுச் செல்வம் சர்.ஷண்முகம் அவர்கள், கொச்சி திவானாகச் சென்ற போது கடுகடுத்துப்பேசி, கொச்சி உத்யோகம் கொச்சிவாசிகளுக்கே என்று கூந்தலை அவிழ்த்துவிட்டு அழுத தேசீய அம்மாமிகள் இன்று மூக்கின் மீது விரலை வைக்கும்படியான கீர்த்தியை அவர் பெற்றுவிட்டார். சமஸ்தானங்களிலே பொறுப்பாட்சிக் கிளர்ச்சிப் புயல் கிளம்புவதற்கு முன்னாலேயே, குறிப்பறிந்து நடக்கும் ராஜ தந்திரியாகிய சர்.சண்முகம், கொச்சி மன்னருக்கு யோசனை கூறி, மக்களுக்கு அரசியல் சுதந்திரமும், ஆட்சியில் பங்கும் மக்களின் பிரதிநிதியாக ஒரு மந்திரியும் ஏற்படுத்தினார். இந்தியாவிலேயே பொறுப்பாட்சியின் வித்தான இரட்டையாட்சி எனும் அரசியல் சீர்திருத்தத்தை பெற்ற முதல் சமஸ்தானம் கொச்சிதான். அந்தப் பெருமை சர்.சண்முகத்துக்கே உரியது. ஆனால் அதிலே தமிழர் யாவருக்கும் பங்கு உண்டு. சர்.சண்முகம் ஒரு தமிழர்! இன்று பல்வேறு சமஸ்தானங்களில் பொறுப்பாட்சிக் கிளர்ச்சி நடப்பதும், ஆங்காங்கு இந்திய டயர்கள் தோன்றுவதும், பல்வேறு இடங்களில் துப்பாக்கி வேட்டுகள் கிளம்புவதும், காணும் நாம் கொச்சியிலே அமைதி ஆனந்தத்தைக் காண்கிறோம்....

28. உண்மை வெளியாய்விட்டது

28. உண்மை வெளியாய்விட்டது

என் கைக்கு அதிகாரம் வந்தால் நான் சர்வாதிகாரியானால் இந்தியர்களை (இந்தியை மாத்திரமல்லாமல்) சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக படிக்கும்படி செய்வேன். என தோழர் எஸ்.சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் சென்னை லயோலா காலேஜில் மாணவர்கள் கூட்டத்தில் பேசும்போது திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். அதோடு நிற்காமல் அவர் அதே சமயத்தில் சர்க்கார் உத்தியோகங்களுக்கும் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் ஏற்படுத்தி விடுவேன். என்று கூறி இருக்கிறார். இவ்வளவோடு அவர் திருப்தியடைந்தாரா? இல்லை இல்லை. காந்தியார் உயிருடன் இருக்கும்போதே இந்தியாவில் ராமராஜ்ய மேற்பட்டு விடவேண்டுமென்று மிக ஆவலாய் இருக்கிறேன் என்றும் பேசி இருக்கிறார். ஏனென்றால் மக்கள் சமஸ்கிருதம் படித்தால் பிறகு ராமராஜ்யம் தானாகவே ஏற்பட்டுவிடும் என்பது அவரது நம்பிக்கை. உண்மையும் அதுதான். ஆங்கிலம் படித்ததால் ஆங்கில நாகரிகம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுவதுபோல் ஆரியம் படித்தால் ஆரிய நாகரிகம் தானாகவே ஏற்பட்டு விடுமல்லவா? ராமராஜ்யம் என்பது ஆரிய நாகரிகம்தானே. அதனால் அவர் சமஸ்கிருதம் கட்டாயப்பாடமாக்கப்பட்டவுடன் ராமராஜ்யத்திற்கு வியாக்கியானம் சொல்ல ஆரம்பித்த...

27. ஈ.வெ.ரா மதராஸ் மெயில் நிருபர் பேட்டி

27. ஈ.வெ.ரா மதராஸ் மெயில் நிருபர் பேட்டி

தம்முடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த தென்னிந்திய நல உரிமைச்த் தலைவர் 60 வயது முதிர்ந்த பெரியார் நேற்றிரவு மதராஸ் மெயில் நிருபரைக் கண்டவுடன் புன்முறுவல் பூத்தார். 6 மாத சிறைவாசம் பெரியாருடைய சுகத்தில் பெரிய மாற்றத்தை செய்துவிட்டது. மிகவும் களைத்தும் மெலிந்தும் காணப்பட்டார். பெரியாரைக் கண்டு தரிசிப்பதற்காக மக்கள் மாலைகளுடனும் பூச்செண்டுகளுடனும் வந்து குவிந்த வண்ணமாக இருந்தார்கள். பெரியார் சாதாரண பாயில் தரையில் உட்கார்ந்துகொண்டு நண்பர்களைக் குறித்தும் கட்சியினர்களைக் குறித்தும் அன்போடு விசாரித்துக்கொண்டிருந்தார். அவருடைய உடல் நிலையைக்குறித்து கேட்டதற்கு தாம் அன்று மாலை டாக்டர் எம்.ஆர். குருசாமி முதலியார் அவர்களிடம் உடல்நிலை பரி சோதித்துப் பார்த்ததாகவும் டாக்டர் அவர்கள் சிகிச்சை சொல்லி பூரண ஒய்வு எடுக்க வேண்டுமென்று தெரிவித்ததாகவும் பெரியார் சொன்னார். மற்றும் சில வாரங்கள் அவர் ஒரு குளிர்ச்சியான இடத்தில் தங்கி ஓய்வு எடுத்தால் அவருடைய ஆரோக்கியத்துக்கு நலமாயிருக்கும் என்று சொன்னார். சென்னையில் மெயில் பத்திரிகை நிருபர் பெரியாரை...

26. பெரியார் விடுதலை

26. பெரியார் விடுதலை

நமது தலைவர், ஈ.வே.ராமசாமிப் பெரியார், கோவைச் சிறையிலிருந்து 22-05-1939ந் தேதி காலை 12-மணிக்கு, எதிர்பாராதவிதமாக எந்த விதமான நிபந்தனையுமின்றி, விடுதலை அடைந்தார்! தமிழ்நாடு இச்சேதி கேட்டு, துள்ளிக்குதித்து ஆனந்த தாண்டவமாடும் என்பதில் சந்தேகமேது! தமிழரின் தலைவர், சிறையில் வாடியிருக்கிறார் என்பது கேட்டுக் கேட்டு, தமிழர் இல்லமெல்லாம், சோக சித்திரமாகவே இருந்து வந்தன! பெரியார் சிறைப்பட்டார் என்ற சேதி கேட்ட தமிழருக்கு, எத்துணை கொதிப்பு, எவ்வளவு ஆவேசம் பொங்கிற்று! எங்கெங்கும் கண்டனங்கள் எழும்பின. பெரியார் பெல்லாரிக்கு வெப்பத்தின் உறைவிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது கேட்ட தமிழர், எவ்வளவு சீற்றங்கொண்டனர்! கோவைக்கு அவர் மாற்றப்பட்டார் என்ற சேதி கிடைத்ததும், தமிழரின் மனம் எவ்வளவு குளிர்ந்தது. ஆம்! அவர் துக்கம் தம் துக்கமெனவும், அவர் கஷ்டம் தம் கஷ்டமெனவும், அவர் களிப்பே தம் களிப்பெனவும், தமிழர்கள் கொள்கின்றனர். இப்படியன்றோ, இருத்தல் வேண்டும், ஒரு தலைவரின் நிலை!. கோவையில், பெரியாருக்கு உடல் நலம் குன்றியே இருந்ததாம். நான்கைந்து நாட்களுக்கு...

25. உழைப்பின்  பலன்

25. உழைப்பின் பலன்

இப்பொழுது உலகம் எக்காட்சியை வழங்குகிறது? போராட்டக் காட்சியை என்று எவரும் கூறுவர். போராட்டம்  ஒவ்வொரிடத்தில் ஒவ்வொருவிதமாக நிகழ்ந்து வருகிறது. போராட்டம் சிலவிடங்களில் வகுப்புவாதமாகவும், சிலவிடங்களில் சுரண்டல் காரணமாகவும், சிலவிடங்களில் பொருளாதாரத்தையொட்டியும் நிகழ்ந்து வருதல் கண்கூடு. போராட்டம் என்பது பொது. அது பல வடிவமாகக் காரியங்களை நிகழ்த்தும். என நவசக்தியில், மே 19-ல் தோழர் கலியாணசுந்தரனார் தீட்டியுள்ளார். போருக்குக் காரணம் யாது என்பது பற்றியும், அவர் ஆராய்ச்சி செய்கிறார். யாது அவ்வாராய்ச்சியின் முடிவு? இயற்கை அறத்தின் வழி உலகம் நில்லாது வேறு வழிச் செல்வதே, போராட்டத்திற்குக் காரணம். இது மிக அரியதொரு ஆராய்ச்சி முடிவு. நெருப்பின்றி புகையாது, நீரின்றி நனையாது, அஃதே போல காரணமின்றி எந்தக் கிளர்ச்சியும், எந்தப் போரும் நிகழாது. போலிக் காரணத்தால் நிகழ்வதாயின் அது பகலவன் முன் பனியெனக் கரைந்து போயே விடும். இதுவே இயற்கை. இந்த ஆராய்ச்சிக் கண்கொண்டே, நம் நாட்டுப் போராட்டங்களைக் கவனிக்க வேண்டுகிறோம். இங்கு போருக்குக்...

24. செத்த வாழ்வு வாழ்வதா?

24. செத்த வாழ்வு வாழ்வதா?

சர்வாதிகாரம் என்றால் ஒரே அரசியல் கொள்கை, அதை வற்புறுத்த ஒரே கட்சி, அந்தக் கட்சியிலும் ஒரே தலைவர், அவருடைய இரகசியமான சிறு கூட்டமொன்று, குற்றேவல் புரிய மற்றொரு பெருங்கூட்டம், அந்த தலைவரின் கீதம் பாடி, விளம்பரப்படுத்தி, பிரச்சார பலத்தால் மக்களைக் கட்டிப்போடுவதும், எதிர்ப்பு எங்கு இருப்பினும், கட்சிக்குள்ளாகவே தோன்றினும் நீதி நியாயம் நேர்மை எதையும் கவனியாது உடனே நசுக்கிப் பொசுக்குவதும், சட்டங்கள் இயற்றுவதிலும் அடக்கு முறை போடுவதிலும், வரிகள் விதிப்பதிலும், பொது மக்களைக் கலக்காமலும், அவர்கள் கொதிப்பைப் பொருட்படுத்தாமலும், நடப்பது ? இவைகளே சர்வாதிகாரியின் இலட்சணங்கள். இந்த சர்வாதிகாரம், ஆயுத பலத்தோடு இருந்தால், அது பாசீசம், நாசீசம் என இன்று ஐரோப்பியரால் அழைக்கப்படுகிறது. ஆயுத பலமின்றி, மக்களின் மனதை மயக்கி நடத்தப்படும் சர்வாதிகாரத்திற்கு இந்தியாவே தலைசிறந்த உதாரணம். காந்தியாரே அத்தகைய சர்வாதிகாரி. சர்வாதிகாரிக்கு ஒரே கட்சி. தன் கட்சி மட்டுமே தான் நாட்டில் நிலைக்க வேண்டுமென்பது அவா. ஏன்? வேறு கட்சியும்...

23. வகுப்பு வாதம் ஒழிய வழி!

23. வகுப்பு வாதம் ஒழிய வழி!

வகுப்புத் துவேஷக் குற்றம் (153 செக்ஷன்படி) இருப்பதாக தோழர்கள் ஈ.வெ.கிருஷ்ணசாமி, பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை அவர்களும் தண்டிக்கப்பட்டனர். உள்ளபடி நாட்டிலே வகுப்புவாத உணர்ச்சி இருப்பதாக ஆட்சி நடத்துபவர் கருதினால் அதனை ஒழிக்க முயல வேண்டாமா? அதனை எங்ஙனம் ஒழித்தல் முடியும்? கிளர்ச்சிகளை அடக்குதல் மூலமா? அன்று! அன்று! சரித்திரம், கிளர்ச்சியின் காரணத்தை ஒழித்தால் தான் கிளர்ச்சி அடங்குமெனச் சாற்றுகிறது. ஆகவே இது சமயம் வகுப்பு வாதம் என்ற நோய் ஒழிய நாம் சிற்சில கூறுவோம். மனித சமூகத்தில் பலவித வகுப்பு பிரிவுகளைப் பார்க்கின்றோம். ஒரு வகுப்பாரை ஒரு வகுப்பார் அடக்கி ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கின்றோம். ஒரு வகுப்பார் முன்னேற்றத்திற்குப் பலவகுப்பு மக்கள் பாடுபட்டு உழைப்பதைப் பார்க்கின்றோம். பாரதத்தாயின் அருந்தவப் புதல்வர்வர்களில் பறையர், பள்ளர், ஈழுவர், தீயர், பஞ்சமர், ஹரிஜன் என்ற பெயர்களால் 6-கோடிக்கு மேலிட்ட மக்கள் தீண்டாதார் என்று ஒதுக்கி வைத்துக்கொடுமைப் படுத்தி வருவதை பார்க்கிறோம். பல இடங்களில் இத் தீண்டாத...

22. தலைவர்கள் சிறையில்!    தமிழர் கடன் யாது?

22. தலைவர்கள் சிறையில்! தமிழர் கடன் யாது?

தமிழ்நாட்டில், பன்னெடு நாட்களாகத் தாண்டவமாடி வந்த ஜாதீயம், வகுப்புணர்ச்சி, மூடப்பழக்க வழக்கங்கள், ஒரு பெரிய இருளாகக் கிடந்தது. அதன் வயப்பட்டு அழிந்த சமூகத்தினர் பலர். அதனை எதிர்த்தொழிக்க இயலாது திகைத்தனர் வேறு பலர்.  அதனை ஓட்ட முயன்று தோற்றனர் சிலர். ஆனால் அந்த இருள் மட்டும் மிக இருமாப்புடன் நந்தமிழ் நாட்டைக் கப்பிக்கொண்டு நின்ற வண்ணம் இருந்தது. எங்கும் தேசீயம் பேசப்பட்டு வந்ததேயன்றி, காரியத்தில், நாட்டுப்பிளவிற்குக் காரணமான கேடுகள் களையப்படவில்லை. அந்த காரத்தில் அகப்பட்டுத் தவித்துக்கொண்டிருந்த தமிழ் நாட்டில் பதினைந்து ஆண்டுகட்கு முன்பு ஓரொளி தென்பட்டது. அது ஈரோட்டிலிருந்து எழும்பி சிறுகச் சிறுக அந்த காரத்தில் ஊடுருவிப் பாய்ந்து, தமிழ் நாட்டில் பல இடங்களிலும், பழைய சம்பிரதாயங்களைப் பறக்கடித்தது. கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக ?எனவும் ? ஜாதி மதபேத மெலாம் பித்துப்பிள்ளை விளையாட்டு என்றும் அருட்பா அடிகள் கூறிய உண்மையை நாடறியச் செய்ததுடன், சீர்திருத்தவாதிகளின் இயக்கத்தையும் உற்பத்தி செய்தது. அந்த...

21. காந்தீயத்தொல்லை

21. காந்தீயத்தொல்லை

காந்தியாருக்கு எப்படியோ மகாத்மாப் பட்டம் கிடைத்து விட்டது. அந்த மகாத்மாப் பட்டமளித்தவர் ஒரு வெள்ளைமாதரசியானாலும் பார்ப்பனர்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டு தமது ஆதிக்கத்தை இந்தியாவிலே மீண்டும் நிலைநிறுத்த முயன்று வருகின்hறர்கள். பார்ப்பன ஸ்தாபனமான காங்கிரசிலே மதிப்பும் ஆதிக்கமும் பெற வேண்டுமானால் பார்ப்பனர்களின் ஆதரவில்லாமல் முடியாதென தந்திரசாலியான காந்தியாருக்கு நன்கு தெரியும். ஆகவே தேசீயத்தின் பெயரால் ? ராமராஜ்யத்தின் பெயரால் ? தர்ம ராஜ்யத்தின் பெயரால் ?  பார்ப்பனியத்துக்குப் புத்துயிரளிக்க காந்தியாரும் தீராப்பொறியாக இணங்கி வேலை செய்து வருகிறார். அவரது முயற்சி பலிக்க வேண்டுமானால் அவரது கொள்கைகளை மக்கள் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டுமானால் இதுவரை எவரும் சாதியாத ஒரு காரியத்தை அவர் சாதிக்கவேண்டும். அப்பொழுது தான் அவருக்குத் தனிப் பெரும் தலைமையும் சிறப்பும் கிடைக்கும். ஆகவே இந்தியா பூராவும் மதுவிலக்குச் செய்து அழியாப் புகழையடைய அவர் ஆசைப்படுகிறார். குருட்டாம்போக்கில் 6 மாகாணங்களில் சென்ற தேர்தலில் காங்கிரசுக்கு மெஜாரட்டி கிடைக்கவே அந்த மெஜாரட்டியை...

20. காங்கரஸ்காரரின் பகிஷ்காரப் புரளி

20. காங்கரஸ்காரரின் பகிஷ்காரப் புரளி

பாபு சுபாஷ் சந்திரபோஸை காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்க காந்தி கோஷ்டியார் விரும்பாததின் காரணம் அறிய பலர் ஆசைப்படக்கூடும். ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் சமஷ்டி எதிர்ப்பிலும் மிக்க அக்கரை காட்டிவரும் சுபாஷ், காந்தி கோஷ்டியாருக்குப் புளிப்பாய் விட்டது பலருக்கு வியப்பாகவுமிருக்கலாம். ஆனால் காந்தியாருடையவும் அவரது வாலர்களுடையவும் தற்கால நிலையாகச் சரியாக உணர்ந்தவர்களுக்கு சுபாஷ் போஸை காந்தி கோஷடியார் வெறுப்பது ஆச்சரியமாகத் தோன்றாது. காங்கிரஸ் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, ஒரு காலத்திலே காங்கிரஸ்காரர் எதிர்த்த மாகாண சுயஆட்சித் திட்டத்தை சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு அமல்நடத்தி வருவதாய் காங்கிரஸ் சர்வாதிகாரியான காந்தியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் மந்திரிகளும் மாகாண கவர்னர்களுடனும் சிவிலியன்களுடனும் வெகு அந்நியோந்நியமாக நடந்த தகராறுக்கு இடம் கொடுக்காமல் நிருவாகம் நடத்தி வருகிறார்கள். சுகாதார மந்திரி பல்லாண்டு மாகாண கவர்னர் எங்கள் நண்பன், வழிகாட்டி, ஞானாசிரியர் என சென்னை மாகாண சுகாதார மந்திரி கனம் டாக்டர் ராஜனும் பல்லாண்டு பாடியுள்ளார். பிரிட்டிஷார் பொறுப்புணர்ச்சியுடையவர்கள். இந்தியாவை ஆள உரிமையுடையவர்கள்...

19. வாதத்துக்கு மருந்துண்டு; பிடிவாதத்துக்கு?

19. வாதத்துக்கு மருந்துண்டு; பிடிவாதத்துக்கு?

நோயாளிகள் வைத்தியனை நாடுவார்கள்; துணி வெளுக்க விரும்புவோர் சலவைத் தொழிலாலரைத் தேடுவார்கள்; சட்டைதைக்க விரும்புவார்கள். தையற்காரனிடம் போவார்கள்; மொழிபற்றிய சந்தேகத்துக் குள்ளானோர் மொழி வல்லார் அபிப்பிராய மறிய விழைவார்கள் இதுவே உலக இயல்பு. நோயாளி கருமானைத் தேடுவதும், சட்டைதைப்போர் வாணியனை நாடுவதும், சீனி வேபண்டுவோர் உப்புக்கடைக்குப் போவதும் உலகவழக்கல்ல. அவ்வாறு செய்வோர் வைத்தியக் காரராகவே மதிக்கப்படுவார்கள். ஆனால் காந்தி ராஜ்யத்திலே இந்த விநோதமே காணப்படுகிறது. கல்வித்துறையிலும் மொழித்துறையிலும் வர்த்தகம் கைத்தொழில் சுகாதாரம், உடை, உணவு, முதலிய துறைகளிலும் பகற்கனவு காணும் காந்தியார் அபிப்பிராயமே நாடப்படுகிறது. காந்தியார் சத்யாக்கிரகியாக இருக்கலாம்; சட்டமறுப்பு வீரராக இருக்கலாம்; பட்டினி நிபுணராக இருக்கலாம்; ஞானியாக இருக்கலாம்; அரசியல்வாதியாக இருக்கலாம்; ராஜ்யதந்திரியாக இருக்கலாம்; எனினும் மொழிவல்லார் என்றோ வர்த்தக கைத்தொழில் சுகாதார நிபுணரென்றோ கூறிவிட முடியாது. ஆயினும் தேசீயப் பொது மொழி விஷயத்தையே அவரது அபிப்பிராயத்தையே சென்னை முதன்மந்திரியார் ஒரு அத்தாரட்டியாக கொண்டிருக்கிறார். கல்வி நிபுணர்கள் கருத்தென்ன? கட்டாய...

18. திருநெல்வேலி மாநாடுகள்

18. திருநெல்வேலி மாநாடுகள்

தூத்துக்குடியில் நடைபெற்ற திருநெல்வேலி ஜில்லா தமிழ்ப் பெண்கள் மாநாடும் தமிழர்கள் மாநாடும் தமிழரிக்க சரித்திரத்திலே முக்கியமாக குறிப்பிடத்தக்க மாநாடுகள் ஆகும். தமிழர் இயக்கத்துக்கு அடிகோலியது திருநெல்வேலி ஜில்லா என்றே சொல்லவேண்டும். பார்ப்பன மதக்கொடுமையினால் தன்மதிப்புணர்ச்சியும் தன்னம்பிக்கை உணர்ச்சியுமின்றி தமிழர்கள் பின் நோக்கிச் செல்வதைக்  கண்ட  காலம் சென்ற திருநெல்வேலி பிஎம்.கைலாசம் பிள்ளையவர்கள் பிரம்ம சமாஜக்கிளையொன்றை திருநெல்வேலியில் ஸ்தாபித்து பகுத்தறிவியக்கத்துக்கும்  தமிழரி யக்கத்துக்கும்  முதல் முதலில் வித்தூன்றினார். அன்று முதல் பார்ப்பன மதிப்பிடையிலிருந்து விடுதலை பெறவும் தமிழர் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழர் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கவும் பற்பல முயற்சிகள் செய்யப்பட்டு வந்தன. ஜஸ்டிஸ் கட்சி தோன்றியபோது அம்முயற்சிகள் பலனடைந்தன. பழைய கதை முதலிரண்டு சீர்திருத்தச் சட்டசபைகளிலும் தமிழர்களே திருநெல்வேலி ஜில்லாப் பிரதிநிதிகளாக வீற்றிருந்தனர். ஜில்லா முழுதும் தமிழருணர்ச்சி பெருக்கெடுத்துப் பாய்ந்தது. ஜஸ்டிஸ் கட்சி தோன்றுவதற்கு முன் பொது ஸ்தாபனங்களில் ஆதிக்கம் பெற்று வந்தவர்கள் தலை குனியலாயினர். இவ் வண்ணம் தமிழர் இயக்கத் தோற்றுவாயாகவும்...

17. காந்தியார் தோல்வி

17. காந்தியார் தோல்வி

பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரைப் பலகாலம் ஏமாற்றலம்; ஆனால் எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாதென்பார்கள். இப் பழமொழி காந்தியார் விஷயத்தில் சரியாகப் பலித்து விட்டது. போக்கு முட்டும் போது பட்டினி கிடந்து உலகத்தை ஏமாற்றுவது காந்தியாரின் வாடிக்கையாக இருந்து வந்தது. 1914-ல் தென்னாப்பிரிக்காவில் 14 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உண்ணாவிரத அரிச்சுவடி கற்றார். 1915-ல் ஆமதாபாத் ஆலைத்தொழிலாளர்கள் பலாத்காரத்தில் இறங்கியதற்காக 3 நாள் உண்ணாவிரதமிருந்து ஆலைத்தொழிலாளரை நல்வழிப்படுத்த முயன்றார். 1922-ல் சௌரி சௌரா பலாத்காரக் கொடுமைக்காக உண்ணாமிருந்து, கண் மூடித்தனமாய் சட்டத்தை மீற உபதேசம் செய்ததற்குப் பிராய்சித்தம் செய்து கொண்டார். 1924-ல் ஹிந்து முஸ்லிம் பிணக்கை ஒழிக்க 21 நாள் உண்ணாவிரதமிருந்தார். பலன் பூச்சியம்தான். இந்து-முஸ்லிம் பிணக்கு இன்னும் ஒழியவில்லை. 1924-ல்சபர்மதி ஆச்சிரம ஒழுங்கீனக்ளைப் போக்க உண்ணாவிரதமிருந்தார். ஆச்சிரம வாசிகள் ஒழுக்க முடையவர்களானார்களா! இல்லவே இல்லை. கடைசியில் ஆசிரமந்தான் கலைக்கப்பட்டது. 1932-ல் ஹரிஜனங்களுக்குத் தனித் தொகுதியளித்ததை எதிர்த்து சாகும் வரை உண்ணா விரதமிருந்தார்....

16. காந்தியார் புதுக்கோலம்

16. காந்தியார் புதுக்கோலம்

காந்தியார் ஒரு நாலணா காங்கிரஸ் மெம்பர் கூட அல்லாமலிருந்தாலும் கிரியாம்சையில் காங்கிரஸ் சர்வாதிகாரியாக இருந்துவந்ததை உலகம் அறியும். மாகாண சுய ஆட்சித் திட்டத்தை ஒழிக்கவேண்டும். அதைக் கண்ணெடுத்தும் பார்க்க கூடாது. சட்ட சபைகளை பகிஷ்கரிக்கவேண்டும். பதவி ஏற்கக்கூடாது என்றெல்லாம் மாயக்கூச்சல் போட்டுக்கொண்டிருந்த காங்கிரஸ்காரர்கள் சட்டசபையில் புகுவதற்கும் எட்டு மாகாணங்களில் மந்திரி சபைகள் அமைப்பதற்கும் காரணஸ்த வராயிருந்தவர் காந்தியார் என்பதையும் உலகம் அறியும். பதவியேற்பதும் மாகாண சுயாட்சித் திட்டத்தை ஏற்று நடத்துவதும் காங்கிரஸ் தீர்மாணங்களுக்கு முரணாக இருந்தாலும் உலகப் பெரியாரான காந்தியார் யோசனைப்படியே பதவியேற்றிருப்பதினால் அவ்வாறு செய்தது காங்கிரஸ் கொள்கைக்கு முரணாயிருப்பதை காந்தியார் பேரிலுள்ள மாய பக்தியினால் கிறுக்கினால் படிப்பாளிகளும் கூட மறந்துவிட்டார்கள் என்ற உண்மையை மறைக்கவே முடியாது. இவ்வண்ணம் காந்தியாரை உலக மக்களை ஏய்க்கும் ஒரு கருவியாக வைத்துக் கொள்ளும் பொருட்டே காந்தியார் திட்டங்களிலும் கூட மறந்துவிட்டார்கள் என்ற உண்மையை மறைக்கவே முடியாது. இவ்வண்ணம் காந்தியாரை உலக மக்களை ஏய்க்கும் ஒரு...

15. காந்தீய வெற்றியா? கபட நாடக வெற்றியா?

15. காந்தீய வெற்றியா? கபட நாடக வெற்றியா?

திரிபுர காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு சில மாகாண காங்கிரஸ் கமிட்டியார் பாபு சுபாஷ் சந்திரபோஸ் பெயரை இரண்டாம் முறையும் சிபார்சு செய்தார்கள்; சில மாகாணத்தார் மௌலானா அபுல் கலாம் ஆசாத்  பெயரையும், டாக்டர் பட்டாபி சீதாராமய்யா பெயரையும் சிபார்சு செய்தார்கள். ஆனால் சுபாஷ் சந்திரபோஸ் இரண்டாம் முறையும் காங்கிரஸ் தலைவராவது காந்தியாருக்குப் பிடிக்க வில்லையாம். ஆகவே தேர்தலுக்கு நிற்கக் கூடாதென்று காந்தியார் ஒரு தந்திச் செய்தியனுப்பினாராம். இது காந்தி கோஷ்டியாருக்கு மட்டுமே தெரியும். பொது ஜனங்களுக்கோ ஏனைய காங்கிரஸ் வாதிகளுக்கோ தெரியாது. பட்டாபி சீதாராமய்யா தலைவராக வேண்டுமென்பது காந்தியார் விருப்பமாம். இதையுணர்ந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதுமை காரணமாகத் தாம் தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லையென்றும் பட்டாபி சீதாராமய்யாவை எல்லாரும் ஆதரிக்க வேண்டுமென்றும் நாசூக்காக ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டுப் பின் மாறிக்கொண்டார். மௌலானா சாகிப் பட்டாபியை எல்லாரும் ஆதரிக்க வேண்டுமென்று சிபார்சு செய்தது பாபு சுபாஷ் போசுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அத்துடன்...

14. ஆச்சாரியார் ஆட்சிப் பலன்

14. ஆச்சாரியார் ஆட்சிப் பலன்

மஞ்சட் பெட்டிக்காரர் மந்திரிமார்ஆன அன்றே நாடு குட்டிச்சுவராகும் என்று அரசியல் ஞானமும் உலக அனுபவமும் உடையவர்கள் எதிர்பார்த்ததுதான். காங்கிரஸ்காரர் பதவிபெற்று 603- நாட்களுக்குள் தேச நிருவாகம் செய்ய அவர்களுக்கு ஆற்றவில்லையென்பதும் சட்டங்களை மிகவும், கறுப்புக் கொடி ஊர்வலங்கள் நடத்தவும் கடற்கரை குளக்கரை அந்திக்குடிக் கூட்டங்களில் கூச்சல் போடவும் மட்டுமே அவர்களுக்குத் திறமையுண்டென்பதும் நிரூபணமாகிவிட்டன. தேசீயக் கடனை ஒழிக்கப்போவதாய் காங்கிரஸ் வீரர்கள் கூறியிருந்தும் நமது மாகாண முதல் மந்திரி கனம் ஆச்சாரியார் பழைய தேசீயக் கடன்களை ஒப்புக்கொண்டு சுமார் 4 1/2- கோடி ரூபாய் கடனும் வாங்கிவிட்டார். இவ்வருஷம் 1 1/2கோடி கடன் வாங்கப் போகிறாராம். இவ் வண்ணம் 603-நாட்களில் மாகாணத்தின் தலைமீது சுமார் 6கோடி ரூபாய் கடன் பளுவை ஏற்றிய ஒருவருக்கு தேச நிருவாகம் நடத்த ஆற்றலுண்டென யாராவது மனந்துனிந்து கூற முன் வருவார்களா? வரவே மாட்டார்கள். தாங்கமுடியாத வரிப்பளுவால் நாட்டு மக்கள் நசுங்குவதாயும் தாம் பதவியேற்றால் வரிகளையெல்லாம் குறைத்து விடுவதாயும்  ...

13. காங்கிரஸ் வீணர் கர்மபலன்

13. காங்கிரஸ் வீணர் கர்மபலன்

காங்கிரஸ்காரர் வீரத்தனத்தின் பயனாகவோ பிரிட்டிஷ் ராஜ தந்திரிகளின் பெருந்தன்மையின் பயனாகவோ அல்லது பிரிட்டிஷ் ஆட்சியின் இயற்கைப் பயனாகவோ மாகாணங்களுக்கு சுயஆட்சி அளிக்கப்பட்டது. எல்லா மாகாணங்களையும் ஒன்றுபடுத்தி இந்தியாவை ஒரு நேஷனாக்க சமஷ்டி அரசுத் திட்டமும் வகுக்கப்பட்டது. மாகாண சுய ஆட்சித் திட்டத்தில் பல குற்றம் குறைகள் இருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு அமல் நடத்தி சாத்தியமான நன்மைகளை நாட்டுக்கும் மக்களுக்கும் செய்து மேற்கொண்டு அதிகப்படியான நன்மைகளைப் பெறலாமென நம்பி காங்கிரஸ்காரர் நீங்கலாக உள்ள இந்திய அரசியல் வாதிகள் எல்லாம் மாகாண சுய ஆட்சித் திட்டத்தை வரவேற்றனர். ஆனால் ஏனைய அரசியல் வாதிகளைப் போல குறைகூறிக்கொண்டே தாமும் மாகாண சுய ஆட்சித் திட்டத்தை வரவேற்றால் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் தமக்கும் வித்தியாச மில்லாது போகுமே என எண்ணி காங்கிரஸ்காரர் மாகாண சுய ஆட்சித் திட்டத்தை நிராகரிக்கவேண்டுமென்றும் அதில் ஏராளமான பாதுகாப்புகளும் விசேஷாதிகாரங்களும்அடங்கியிருப்பதினால்நாட்டுக்குநன்மையே விளையா தென்றும் ஏகாதியத்தியத்தை வலியுறுத்துவதற்கே அது பயன் பெறுமென்றும் அந்நியரால் வகுக்கப்பட்ட அத்திட்டத்தை...

12. காங்கிரஸ் கொடுங்கோலாட்சி

12. காங்கிரஸ் கொடுங்கோலாட்சி

பேச்சுச் சுதந்தரம், கூட்டச் சுதந்தரம், எழுத்துச் சுதந்தரம், அபிப்பிராய சுதந்தரம் முதலியவை களைப் பெறுவதற்காகவே போராடுவதாக காங்கிரஸ்காரர் தேர்தலுக்கு முன் சொல்லிக்கொண்டார்கள். ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலே மக்கள் இந்த சுதந்தரங்களையெல்லாம் இழந்து திண்டாடியதாகவும் காங்கிரஸ்காரார் பொய் பிரசாரம் செய்தார்கள். காங்கிரஸ்காரருக்கு ஏராளமான பத்திரிகைகளும் பிரசாரர்களும் இருந்ததினால் அவர்கள் செய்த பொய்ப் பிரசாரங்களை பாமர ஜனங்கள் மெய்யென நம்பினார்கள். காங்கிரஸ்காரர் சட்ட சபைகளைக் கைப்பற்றி பதவி ஏற்றால் மக்கள் எல்லா சுதந்தரங்களையும் வெகு சுளுவாகப் பெற்றுவிடுவார்கள் என நம்பி வாக்காளர்கள் சென்ற தேர்தலில் மஞ்சள் பெட்டியை நிரப்பினார்கள். அதன் பயனாய் 7-மாகாணங்களில் காங்கிரஸ்காரர் மந்திரி சபையும் ஸ்தாபித்தார்கள். காங்கிரஸ்காரர் பதவி வகிக்கும் மாகாணங்களிலே காந்தி ராஜ்யம் ? ராமராஜ்யம் ? தர்ம ராஜ்யம் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. காந்தியார் அஹிம்சா மூர்த்தி யல்லவா? எனவே அஹிம்சா தர்மப்படியே காங்கிரஸ் மந்திரிகள் நிருவாகம் நடத்துகிறார்கள் என பாமர ஜனங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். காங்கிரஸ் ராஜ்ய யோக்கியதை...

11. பனியா சூழ்ச்சி பலிக்குமா?

11. பனியா சூழ்ச்சி பலிக்குமா?

நாட்டிலே அரசியல் உலகில் காந்தீயத்தைப்பற்றிய பிரச்சினையே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. காந்தீயத்தை வளர்த்து வந்த காங்கிரஸ் தளகர்த்தர்களான படேல் கம்பெனியாரின் ஆதிக்கம் என்று காங்கிரசிலே வீழ்ச்சியடைந்தோ? என்று செல்லாக்காசு ஆகக்கருதப்பட்டதோ அன்றே காந்தீயத்துக்கு சாவுமணியடித்து விட்டதென்று சொல்லலாம். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலே இக்குட்டை வெளிப்படுத்தி விட்டது. தோழர் போஸின் வெற்றி தமது தோல்வி என்று தோழர் காந்தியாரே தமது பத்திரிகையாகிய ஹரிஜன் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். எப்பொழுது அவர் பட்டாபி தோல்வி தமது தோல்வி என்று சொல்லியபின்னும் காந்தீயம் ஒழியவில்லை என்று சொல்லப்படுமானால் அறிவுள்ளவர்கள் இதை ஒப்புக்கொள்வார்களா? இதற்கு ஷாஹாபாத் அரசியல் மாநாட்டில் ஒரு அபேதவாதத் தோழர் பேசுகையில் மகாத்மா காந்தியின் வேலைத் திட்டம் நாட்டின் பொருளாதாரப்பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வெற்றி பெறவில்லையென்றும் காங்கரசின் காந்தீய வேலைத்திட்டத்தினால் வகுப்புப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கிறதென்றும் வெளுத்து வாங்கியிருக்கிறார். இவ்வளவு பச்சையாக, பகிரங்கமாக காந்தீயத்தைக் கண்டித்ததை காந்தி பெயரால் செல்வாக்குப் பெற்று, காந்தியின்...

9. காந்தியார் தகிடுதத்தம்.

9. காந்தியார் தகிடுதத்தம்.

காங்கிரஸ்காரருக்கு நாணயமோ, யோக்கியப் பொறுப்போ உறுதியான கொள்கையோ, நேர்மையோ இல்லை யென்பதற்குத் திரிபுர காங்கிரஸ் தலைவர் தேர்தல் விஷயமாக ஏற்பட்டிருக்கும் தகராறே போதிய அத்தாட்சியாகும் அடுத்த காங்கரஸ் தலைவர் தேர்தலுக்கு மௌலானா அபுல்கலாம் அசாத், தோழர் சபாஷ் சந்திரபோஸ் தோழர் பட்டாபி சீதாராமய்யா ஆகி மூவர் பெயர்களும் திரிபுர காங்கிரஸ் பிரதிநிதிகளால் சிபார்சு செய்யப்பட்டன. காந்தியர் தூண்டுதலினால், உடல்நிலை சரியில்லை யென்றும் தள்ளாத வயதில் மிகப் பொறுப்பு வாய்ந்த காங்கிரஸ் தலைவர் பதவியைத் தாங்க முடியாதென்றும் ஒரு போலிக் காரணம் சொல்லிக்கொண்டு மௌலானா அபுல்கலாம் அசாத் போட்டி போடாமல் விலகிக்கொண்டார். விலகியவர் பட்டாபியை எல்லாரும் ஆதரிக்க வேண்டுமென ஒருகுறும்பு சிபார்சும் செய்தார். மௌலானா விலகியதும் தோழர் படடாபி சீத்தாராமய்யாவும் விலக விரும்பினாராம். ஆனால் காந்தியார் சம்மதிக்க வில்லை. தோழர் பட்டாபி போட்டி போடவேண்டுமென்று அவர் வற்புறுத்திக் கேட்டாராம். தோழர் சுபாஷ் சந்திரபோஸ் அடுத்த வருஷ காங்கிரஸ் தலைவராக வரக்கூடாதென்பது காந்தியார் முடிவாம்....

8. மூன்றாம் மாதம் ஆரம்பம்

8. மூன்றாம் மாதம் ஆரம்பம்

வருகிற பிப்ரவரி 6ந் தேதி பெரியார் சிறை புகுந்து இரண்டு மாதம் முடிவடைந்து மூன்றாவது மாதம் ஆரம்பமாகிறது. பெரியாரைச் சிறைப்படுத்துவதினால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை ஒழித்துவிடலாமென்று காங்கிரஸ் சர்க்கார் எண்ணியிருந்தால் அவர்கள் இதற்குள் ஏமாற்ற மடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம் 19/8/ஜுன் 3ந்தேதி தோழர் செ. தெ. நாயகம், சாமி ஷண்முகானந்தா, பல்லடம் பொன்னுனசாமி ஆகியவர்கள் கைது செய்யப்பட்டது முதல் இந்தியப்போர் ஆரம்பமாயிற்று அன்று முதல் பெரியார் சிறை புகுந்த 1938 டிசம்பர் 6ந்தேதி வரை அதாவது சுமார் 6 மாத காலத்தில் கைதியானனவர்கள் தொகை ஆண்கள் 470பெண்கள் 20 குழந்தைகள் 8 ஆனால் டிசம்பர் 6ந்தேதி முதல் நேற்று வரை அதாவது 53நாட்களில் சிறை புகுந்தவர்கள் தொகை ஆண்கள் 215 பெண்கள் 20 குழந்தைகள் 8 இதனால் விளங்குவது என்ன? மறியலுக்கும் பெரியாருக்கும் கோடியான சம்பந்தம் இல்லை என்பது விளங்கவில்லையா? பெரியார் தூண்டுதலினாலேயே நடந்திருந்தால் அவர் சிறைபடுத்தப்பட்டதோடு  விரோதியான பெரியாருடையவும் ஆரிய...

7. ஜஸ்டிஸ் கட்சி வேலைத்திட்டம் பெரியார் வகுத்தது

7. ஜஸ்டிஸ் கட்சி வேலைத்திட்டம் பெரியார் வகுத்தது

1931 வருடம் செப்டம்பர் மாதம் சென்னையில் பொப்பிலிராஜா சாஹெப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஜஸ்டிஸ் மகாநாட்டிலும், 1935 வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி பொப்பிலிராஜா சாஹெப் அவர்கள் பங்களாவில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கமிட்டியிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் திட்டங்கள். விவசாயிகளைக் கடன் தொல்லையிலிருந்து விடுவிக்கவும் அவர்கள் மறுபடியும் கடன்காரராகி கஷ்டப்படாமல் இருக்கவேண்டிய காரியங்களை கடனுக்காக கடன்காரர்களை பூமியைச் கைப்பற்ற முடியாமல் செய்வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதை எல்லாம் செய்ய வேண்டும் அநியாய வட்டி லேவாதேவிக்காரர்களால் விவசாயிகள் அழிந்து போகாமல் இருக்கும்படி கூட்டுறவு நாணைய ஸ்தாபனங்களையும், நில அடமான பாங்குகளையும் தாராளமாகப் பெருக்க வேண்டும். நில அடமான பாங்கை மாகாணம் பூராவும் நல்ல அமைப்பில் ஏற்படுத்தி அதை ராஜாங்கத்தாரே நடத்த வேண்டும். சொத்துரிமை சம்பந்தமாக விவகாரங்களை குறைப்பதாகச் சொத்து பாத்தியங்களை குறிப்பிடத்தகுந்த தெளிவான ஆதாரங்களை சர்க்கார்...

6. பிராமணர் திராவிடரா?

6. பிராமணர் திராவிடரா?

வேலூரில் நடைபெற்ற தமிழர் மாநில மாநாட்டில் தலைமை வகித்த ஸர்.எ.டி.பன்னீர் செல்வம் பிராமணர் தமிழரா? என்ற பிரச்சினையைக் கிளப்பியது முதல் அதுபற்றிப் பலர் பலவிதமாகப் பத்திரிகைகளில் எழுதியும் பொது மேடைகளில் பேசியும் வருகிறார்கள். ஆரியர்? திராவிடர் தகராறை இப்பொழுது கிளப்புவது அனாவசியமென்றும் திராவிடர்களுக்குள் ஆரியர்  இரத்தமும் ஆரியருக்குள் திராவிட இரத்தமும் வெகு நாட்களுக்கு முன்னமேயே கலந்து விட்டதென்றும், சுத்த ஆரியரோ சுத்த திராவிடரோ இப்பொழுது இல்லையென்றும், இப்பொழுது ஆரியர் என்று சொல்லிக்கொள்வோரெல்லாம் திராவிடர்களே என்றும், திராவிடர் என்று சொல்லிக்கொள்வோரில் பெரும்பாலோர் ஆரியரே என்றும் ஒரு ஆந்திர ஜமீன்தார் ஜனவரி 13-ந்தேதி ஹிந்துப் பத்திரிகையில் எழுதி அதற்கு ஆதாரமாக சில ஆங்கில நூல்களிலிருந்து மேற்கோள்களும் எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆரியர்க்குள் திராவிட இரத்தமும் திராவிடர்க்குள் ஆரிய இரத்தமும் வெகு நாட்களுக்கு முன்னமேயே கலந்திருப்பது உண்மையே. சுத்த ஆரியரோ சுத்த திராவிடரோ இப்பொழுது இல்லை என்பது மெய்யே. திராவிடர்களுக்குள் ஆரிய இரத்தமும், ஆரியருக்குள் திராவிட ரத்தமும் வெகு...

5. விடுதலை வழக்கு தீர்ப்பு

5. விடுதலை வழக்கு தீர்ப்பு

சென்ற ——— விடுதலை நிகழ்ச்சிகளில்  —- —– படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இவ்வழக்கின் முடிவைத்தான் இரண்டொரு மாதங்களாக தமிழர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்திருந்தது. இந்த முடிவைக் கண்டு எவரும் ஆச்சரியமோ அல்லது மனச் சஞ்சலமோ அடைந்திருப்பார்கள் என்று நாம் கருதவில்லை. விடுதலை ஆசிரியர் பண்டிதர் எஸ்.முத்துசாமிப் பிள்ளை மீதும் பதிப்பாளர் தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மீதும்  இ.பி.கோ 124 எ, 153 எ செக்ஷன்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருந்ததை நமது நேயர்கள் அறிவார்கள். மேற்படி வழக்கில் தீர்ப்புக் கூறிய கோவை ஜில்லா அடிஷனல் ஜட்ஜ் கனம் கொய்லோ அவர்கள் எதிரிகள் இருவரும் இ.பி.கோ 124எ செக்ஷன்படி ராஜதுவேஷக் குற்றம் செய்யவில்லை என்றுதாம் அபிப்ராயப்படுவதாலும் அஸெஸர்களும் எதிரிகள் குற்றவாளிகள் அல்ல என்று ஏகோபித்து கூறிய முடிவையும் ஏற்று எதிரிகளை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  இங்குதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய பிரச்சினையிருக்கிறது. அதாவது அதிகார வர்க்கத்தாரால் அதுவும் அன்னியரால் தங்களது ஆதிக்கத்தை...

4. எது பயித்தியக் காரத்தனம்?

4. எது பயித்தியக் காரத்தனம்?

சென்றவாரம் ராஜபாளைத்தில் நடைபெற்ற சென்னை மாகாண 40-வது காங்கரஸ் மாநாட்டைத் திறந்து வைத்த கனம் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தமது பிரசங்கத்தில் தமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதியாகக் கூட இருக்கக்கூடாதென்று காங்கிரஸ் எதிரிகள் சொல்லுகின்றனர் இது பயித்தியக்காரத் தனத்தைத் தவிர வேறு இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது சமயம் இதைக் குறித்து சிறிது ஆராய்வது கடமையென உணர்கின்றோம். முதலாவது இவ்வாறு கூறியவர் பயித்தியக்காரரா? அல்லது கேட்டுக்கொண்டு வாளாதிருந்தவர்கள் பயித்தியக்காரர்களா? என்ற சந்தேகம் நமக்கு உண்டாகிறது. ஏனெனில் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறவர்களும் செய்கிறவர்களும் ஒன்று பயித்தியக்காரர்களாயிருக்கவேண்டும் அல்லது அவ்வாறு பேசுவதைக் கேட்டு சிந்திக்க சக்தியற்று வாளாதிருந்தவர்கள் பயித்தியக்காரர்களாக இருக்க வேண்டும். ஏன் நாம் இவ்வாறு சொல்லுகின்றோமென்றால் தமிழ்நாடு தமிழருக்கே என்று செயல்வது எவ்வாறு பயித்தியக் காரத்தனமாகும்?அந்தந்த நாடு சொந்தமாகும். அப்படியிருக்க தமிழ் மொழி பேசும் தமிழருக்குத் தான் தமிழ் நாடு சொந்தமென்றால் அது எவ்வாறு பயித்தியக்காரத்தனமாகும்?  மொழி, கலை, நாகரிகம் முதலிய...

3. பொப்பிலி ராஜாவே மேலும் தலைவர்

3. பொப்பிலி ராஜாவே மேலும் தலைவர்

தோழர்களே! இந்தச் சந்தர்ப்பத்தில் நமது தலைவர் பொப்பிலி ராஜா அவர்களைப்பற்றிச் சில வார்த்தைகள் குறிப்பிடவேண்டியது மிகவும் அவசியமாகும். நமது கட்சியானது பல வழிகளிலும் சிதறுண்டு, பலஹீனப்பட்டிருந்த காலத்தில் பொப்பிலி ராஜா அவர்கள் தன் முயற்சியையும், செல்வத்தையும் கட்சியின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தினார் என்பது நீங்கள் யாவரும் அறிந்ததேயாகும். எந்தக் காரணத்தைக்கொண்டு அவர் கட்சித் தலைமைப் பதவியை ராஜீநாமாச் செய்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அவரே தான் நம் கட்சிக்கு இன்னும் தலைவர் என்றே கருதிக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் பொப்பிலி ராஜா அவர்களுடைய நெஞ்சுறுதி, கட்சிப் பற்று தியாகம் முதலிய அருங் குணங்கள் ஒருவரிடம் ஒருங்கு சேர்ந்திருப்பதென்பது மிக மிக அருமையாகும். ஆகையால் இன்னமும் நான் அவர்கள் இட்ட கட்டளையை மீறாமல் அவருக்கு ஒரு உதவித் தொண்டனாகவே இந்த ஸ்தானத்தை வகிக்கிறேன் என்பதே எனது எண்ணமாகும். இந்த சந்தர்ப்பத்தில் இதுகாறும் என்னுடன் கூட பல கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் நம்மக்களுக்கு இடைவிடாத்தொண்டு புரிந்து கொண்டு வருகின்ற எனதருமைத்...

2. தென்னிந்திய நலவுரிமைச் சங்க 14-வது மாநாடு தமிழரைத் தட்டியெழுப்பும் தலைமைப் பேருரை பெரியார் ஈ.வெ.ரா முழக்கம்

2. தென்னிந்திய நலவுரிமைச் சங்க 14-வது மாநாடு தமிழரைத் தட்டியெழுப்பும் தலைமைப் பேருரை பெரியார் ஈ.வெ.ரா முழக்கம்

அருமைத் தோழர்களே! தேசீயம், ஆத்மார்த்தம் என்னும் பெயர்களால் ஒரு சிறு கூட்டத்தினரால் ஏமாற்றப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும், சமுதாயம், கல்வி, செல்வம், அரசியல் இத்துறைகளிலே பின் தள்ளப்பட்டும், தாழ்த்தப்பட்டும், தீண்டப்படாதவராகவும், கீழ் ஜாதியாராகவும், மிலேச்சர்களாகவும், பிறவி அடிமை (சூத்திரர்) களாகவும் இழிவுபடுத்தி வைக்கப்பட்டுள்ள 100-க்கு 97 பகுதியுள்ள இம்மாகாணத்தின் பழம் பெருங்குடிகளும், பலகோடி மக்களுமான நம்மவரின் விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் உழைப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்டுள்ள மாபெரும் ஸ்தாபனத்தின் பெயரால் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்கு அளித்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமென்னும் இந்த ஸ்தாபனமானது இன்றைக்கு  22 வருடங்களுக்கு முன் அதாவது 1916-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 தேதியன்று தோற்றுவிக்கப் பட்டதாகும். இதை ஆரம்பித்தவர்கள் முதிர்ந்த அனுபவமும், சிறந்த அறிவும், நிறைந்த ஆற்றலும், மக்கள் உண்மை விடுதலை பெற்று உயர்நிலையடைந்து இன்பமெய்தி வாழவேண்டும் என்ற பேராதரவு முடைய சான்றோர்களாயிருந்ததோடு கூட...

1. தமிழர் கடமை

1. தமிழர் கடமை

வேலூரில் சென்னை மாநிலத் தமிழர் மாநாடும் சென்னையில் தென்னிந்திய நலவுரிமைச் சங்க 14-வது மாநாடும் கூடி முடிவடைந்துவிட்டன. வேலூரில் கூடிய மாநாட்டின் நோக்கம் நமது தாய் மொழியான தமிழைக் காப்பது; சென்னையில் கூடிய மாநாட்டின் நோக்கம் திராவிடப் பெருமக்கள் சகல துறைகளிலும் தமது பிறப்புரிமையைப் பெற வேண்டுமென்பது. இரு மாநாட்டாரும் ராமசாமிப் பெரியாரே தமது தனிப்பெருந்தலைவரென சபதம் செய்து விட்டனர். பெரியார் சிறை புகுந்து இன்று 27 நாட்கள் ஆகின்றன. அவர் எதற்காகச் சிறை புகுந்தார்? திராவிட பெருங்குடி மக்களுக்காகவே தமிழ் நாட்டாருக்காகவே சிறை புகுந்தார். திராவிட மக்கள் விடுதலையை முன்னிட்டே சிறை புகுந்தார்.  மதத்தையும் கலைகளையும் புதிய உருவத்தில் நமது தலைமேல் சுமத்த ஆரியப் பார்ப்பனர் காங்கிரஸ் மூலம் சூழ்ச்சிகள் செய்கின்றனர். தென்னாட்டாரில் ஒரு சாராருக்குக் காங்கிரஸ் மோகமும் காந்தி பக்தியும் இருந்து வருவதினால் காந்தி ஆணையே? காங்கிரஸ் ஆணையே முக்கியமெனத் தப்பாகக் கருதுகின்றனர், காந்தி மூலமே – காங்கிரஸ்...

1. தமிழர் கடமை

1. தமிழர் கடமை

வேலூரில் சென்னை மாநிலத் தமிழர் மாநாடும் சென்னையில் தென்னிந்திய நலவுரிமைச் சங்க 14-வது மாநாடும் கூடி முடிவடைந்துவிட்டன. வேலூரில் கூடிய மாநாட்டின் நோக்கம் நமது தாய் மொழியான தமிழைக் காப்பது; சென்னையில் கூடிய மாநாட்டின் நோக்கம் திராவிடப் பெருமக்கள் சகல துறைகளிலும் தமது பிறப்புரிமையைப் பெற வேண்டுமென்பது. இரு மாநாட்டாரும் ராமசாமிப் பெரியாரே தமது தனிப்பெருந்தலைவரென சபதம் செய்து விட்டனர். பெரியார் சிறை புகுந்து இன்று 27 நாட்கள் ஆகின்றன. அவர் எதற்காகச் சிறை புகுந்தார்? திராவிட பெருங்குடி மக்களுக்காகவே தமிழ் நாட்டாருக்காகவே சிறை புகுந்தார். திராவிட மக்கள் விடுதலையை முன்னிட்டே சிறை புகுந்தார்.  மதத்தையும் கலைகளையும் புதிய உருவத்தில் நமது தலைமேல் சுமத்த ஆரியப் பார்ப்பனர் காங்கிரஸ் மூலம் சூழ்ச்சிகள் செய்கின்றனர். தென்னாட்டாரில் ஒரு சாராருக்குக் காங்கிரஸ் மோகமும் காந்தி பக்தியும் இருந்து வருவதினால் காந்தி ஆணையே? காங்கிரஸ் ஆணையே முக்கியமெனத் தப்பாகக் கருதுகின்றனர், காந்தி மூலமே – காங்கிரஸ்...