வினா விடை
- ரஜினிகாந்த் சங்கி இல்லை, அப்பாவை சங்கி என்று சொன்னால் கோபம்
வருகிறது – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
பதில் : சங்கி அடையாளமல்ல, அவமானம் என மகளுக்குப் புரிகிறது, ரஜினிக்குத்தான் புரிவதில்லை.
- சமூக நல்லிணக்கத்திற்கான விருது முகமது ஜுபைருக்கு கொடுத்தது
பொருத்தமற்றது – அண்ணாமலை
பதில் : மசூதியை இடித்து மதக்கலவரத்தை தூண்டியவர்களுக்கு கொடுக்க இது என்ன ராமராஜ்ஜியமா? ராமசாமி ராஜ்ஜியம்!
- ராமர் கோயில் அனைவருக்கும் பொதுவானது; யார் வேண்டுமானாலும் சென்று பிரார்த்தனை செய்யலாம் – எடப்பாடி பழனிசாமி
பதில்: கரசேவைக்கு ஆள் அனுப்பிய அதிமுகவினர் ஏன் இன்னும் செல்லவில்லை? தேர்தல் முடியட்டும் என காத்திருக்கிறீர்களோ!
- ராமர் இல்லாமல் பாரதத்தை நினைத்துப் பார்க்க முடியாது, ராமர்தான் தேசிய அடையாளம் – ஆர்.என்.ரவி
பதில்: பிச்சைக்காரர்கள் கூட ராமர் வேடம் போடுகிறார்கள், அதற்காக அதுதான் பாரதத்தின் அடையாளம் என்று சொல்ல முடியுமா மிஸ்டர் ரவி?
- அனைவரையும் சமமாக மதித்து சமூக நீதிக்கு வித்திட்ட நாயகன் ராமர்
– தமிழிசை சவுந்திரராஜன்
பதில்: தவம் செய்ததற்காகவே சூத்திரனான சம்பூகனை கொன்ற பார்ப்பனச் சமூக நீதி காவலர் ஆயிற்றே ராமர்.