நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாவட்டம் செந்துரை அருகில்
சிறுகடம்பூர் தலித் சிறுமி நந்தினி படுகொலையை கண்டித்தும்

1.நந்தினியின் கூட்டுபாலியல் வன்கொலையின் முக்கிய குற்றவாளி இந்து முன்னனி மாவாட்ட தலைவர் ராஜசேகரனை உடனே கைது செய்.

2. தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி மத கலவரங்களை தூண்டிவரும் இந்துமுன்னனி அமைப்பை தடைசெய்.

3.நந்தினி குடும்பத்திற்கு ஒருகோடி நிதியும் அரசு வேலையும் உடனே வழங்கு.

4.சாதி மத அமைப்புக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவும் சாதிய உணர்வோடு செயல்படும் காவல்துறை ஆய்வாளர் மற்றும் Dsp மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்.

5. வழக்கினை CBI விசாரனைக்கு உத்திரவிடு.

6. நந்தினி குடும்பத்திற்க்கு உரிய பாதுகாப்பு வழங்கிடு.

7. மாவட்டதோறும் இயங்கும் தீண்டாமை ஒழிப்பு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடு.

8. SC ST வழக்குகளை விசாரிக்க தனி நீதீமன்றம் அமைத்திடு.

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் 04-01-2017 அன்று திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் அண்ணாசிலை பின்புறம் காலை10.00மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்தை தோழர்.விழுப்புரம் அய்யனார்
தலைமை செய்ற்குழு உறுப்பினர்
திராவிடர் விடுதலைக் கழகம் தொகுத்து வழங்கினார் .
முன்னதாக புதுச்சேரி சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் .தீனா அவர்கள்
நாமக்கல் மாவட்ட திவிக செயலாளர் வைரவேல்
புதுச்சேரி திவிக அமைப்பாளர் இளையரசன்
சமூக ஆர்வலர் தோழர் தமிழரசன்
தமிழ்வழிக்கல்வி இயக்கம் சின்னப்பத்தமிழர்
மக்கள் கண்காணிப்பகம் இராமு
பெரம்பலூர் மாவட்ட திவிக.செயலாளர் துரை.தாமோதரன்
ஆகியோர் கண்டன உரை ஆற்றினர் ..

பெரியார் திராவிடர் கழகம் – சுயமரியாதை சமதர்ம இயக்கம் தோழர் காசு. நாகராசு

தோழர்.திருச்சி பெரியார் சரவணன்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி

தோழர்.துரை அருண் வழக்கறிஞர் ,திவிக ,சென்னை
ஆகியோர் சிறப்புரை ஆற்ற இறுதியில்

தோழர். செல்வ நம்பி
மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
அரியலூர் மாவட்டம் அவர்கள் உரையாற்ற ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த தோழர்.இராவண கோபால் நன்றி தெரிவிக்க சுமார் 2.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது
மேலும் சென்னை மாவட்ட திவிக பொறுப்பாளர்கள்
இரா.செந்தில்,ஜான் மண்டேலா மற்றும் கல்லூரி மாணவர்கள் வினோத் குழுவினரும் விடுதலை சிறுத்தைகள் ,தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றார்கள்

ஆர்ப்பாட்டம் நடத்திட உறுதுணையாக இருந்த அரியலூர் தோழர் மு.சே.கலைச்செல்வன் அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறோம்

செய்தி கோபால் இராமகிருஷ்ணன்

16473304_1847988868814135_7168661618672839463_n 16473877_1847988892147466_3966784039474728700_n 16508357_1847988845480804_2631070852752160336_n16386914_10206263434624550_4373264889364664325_n16406827_10206263433464521_4345945442716221187_n16473587_10206263434904557_8607623339691043325_n

You may also like...