சனாதன சக்திகளை முறியடிக்க இளைஞர்கள் எழுச்சி மாநாடு’
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம் 27.11.22 ஞாயிறு காலை 10:30 மணி அளவில் மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், பரப்புரைத் திட்டங்கள், ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு சந்தா திரட்டல், இயக்கத்திற்கு முழு நேரப் பணியாளரை நியமித்தல், இயக்க வளர்ச்சி நிதி திரட்டல் குறித்தான ஆலோசனைகள் நடைபெற்றன. கழகத் தலைமைக் குழு உறுப்பினர்களின் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) 2023 பிப்ரவரி மாதம் சனாதன எதிர்ப்பு “இளையோர் மாநாடு” சேலத்தில் ஒரு நாள் மாநாடாக மிகச் சிறப்பாக நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. கருத்தரங்கம், பாட்டரங்கம், கவியரங்கம் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சனாதன எதிர்ப்பு கொள்கை உடைய சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்ட பொது மாநாடு என மாநாட்டு நிகழ்வுகள் தீர்மானிக்கப்பட்டன. 2) 2023 ஜனவரி 30, காந்தியார் நினைவு நாளை...
