கல்விக் கொள்கை ஆபத்துகளை விளக்கி மாணவர்களிடம் கழகம் துண்டறிக்கை

“புதிய தேசிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் மீண்டும் குலக் கல்வி” என்கிற தலைப்புடன் மத்திய பாஜக வின் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சேலம் மற்றும் சென்னையில் துண்டறிக்கைகள் கல்லூரி மாணவர்களிடையே தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களால் வழங்கப்பட்டது. 29.07.2019 அன்று சென்னையில், இராணி மேரி, விவேகானந்தா ஆகிய கல்லூரிகளில் மாணவர் கழகத் தோழர்கள் அருண், பிரவீன், தமிழ்தாசன், யுவராஜ், வெங்கடேஷ் ஆகியோர் துண்டறிக்கைகளை வழங்கினர். யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதி மாணவர் கழகத் தோழர்கள், ஜூலை 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய மூன்று நாட்கள் கல்லூரி மாணவர்களிடையே துண்டறிக்கைகளை வழங்கினர். முதல் நாள் 30.07.2019 அன்று, மேட்டூர் அரசு கலைக் கல்லூரி முன்பும், பேருந்து நிலையம் முன்பும் வழங்கப்பட்டது. இரண்டாவது நாளான 31.07.2019, நங்கவள்ளி பேருந்து நிலையம், அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும் வழங்கப்பட்டது. மூன்றாவது நாளாக 1.08.2019 அன்று,  தி காவேரி கல்லூரி முன்பும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. சந்தோஷ், திவாகர், பிரபாகரன், கிருஷ்ணன், இராசேந்திரன், கண்ணன், செந்தில், மனோஜ்குமார், உமாசங்கர், சந்திர சேகர், ஆர்.எஸ்.சந்திரன், நாகராஜ், ஜெகதீஸ், இராமச்சந்திரன் ஆகியோர் துண்டறிக்கைகளை வழங்கினர். காவலாண்டியூர் சந்தோஷ் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

பெரியார் முழக்கம் 08082019 இதழ்

You may also like...