கழகத் தோழர் இரா. விஜயகுமார் தாயார் மறைவு

சேலம் மாவட்டம் கொளத்தூர் தார்காடு கிளை கழகத் தோழர் இரா.விஜயகுமார் (இராணுவ ஓய்வு) தாயார் ஆர்.என்.காசிமதி (71) உடல் நலக்குறைவுக் காரணமாக 09.01.2019 அன்று காலை 10.00 மணிக்கு அவர்களது இல்லத்தில் முடிவெய்தினார்.  கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் மறைந்த காசிமதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பெரியாரியல் சிந்தனையாளரும் காசிமதி கணவருமான இராமசாமி (ஆசிரியர் ஓய்வு), மகன்கள் விஜயகுமார், சசிகுமார் ஆகியோர் காசிமதியின் உடலை எந்தவித சடங்குகளும் இன்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக  கையளித்தனர். தோழர்கள் கடந்த 2009ஆம் ஆண்டு தனது தாயாரின் உடல் கொடைக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தோழர்களின் இச்செயல்களை  நிகழ்வுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

பெரியார் முழக்கம் 17012019 இதழ்

You may also like...