தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா
கழகத்தின் மாவட்ட செயலாளர் மேட்டூர் கி.கோவிந்தராஜ்-மு.கீதா இணையரின் மகள் கீ.கோ. தேன்மொழி – திருப்பூர் நா. பரமசிவம்-ப. மாலதி ஆகியோரின் மகன் கழகத் தோழர் ப. மணிகண்டன் ஆகியோர் ஜாதி-சடங்கு மறுப்பு மண விழா ஜன. 3, 2019 பகல் 11 மணியளவில் மேட்டூர் அணை அரசப்பா திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணவிழாவை நடத்தி வைத்தார். மாவட்ட கழகத் தலைவர் ப.கு. சூரிய குமார் வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அ. தமிழரசு, காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) நா. முனியன் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியும் பறை இசையும் நடைபெற்றது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு வந்திருந்தனர். அனைவரும் ‘தமிழின உரிமைக்கு எதிரி யார்?’ நூல் பரிசாக வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 07022019 இதழ்