கொளத்தூர் சரவணபரத்-பிரியதர்சினி இணை அறிமுக விழா – பெண் விடுதலைக் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் பகுதி தோழர் சரவணபரத் மற்றும் பிரியதர்சினி ஆகியோரது இணை அறிமுக விழா 30.12.2018 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம் அய்யம் புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடை பெற்றது.

முன்னதாக காலை 10 மணியளவில் அய்யம்புதூரைச் சார்ந்த  பெரியார் பெரும் தொண்டர் சி. சுப்பிரமணி அய்யம்புதூர் பகுதியில் கழகத்தின் கொடிக் கம்பத்தை நிறுவி , கொடியேற்று விழா ஏற்பாடு செய்திருந்தார். பறை முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகக் கொடியை ஏற்றினார்.

பின்னர் ஊர்வலமாக தோழர்கள் அனைவரும் சென்றனர். அதற்கடுத்து காலை 11 மணியளவில் பெண் விடுதலைக் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி தலைமை வகித்தார் . சேலம் மாவட்ட தலைவர்  சூரியக்குமார் முன்னிலை வகித்தார்.  இரத்தினசாமி (அமைப்புச் செயலாளா) மற்றும் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) ஆகியோர் இணையர்களை வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினர்.

‘இணையேற்பு உரிமையும் பெண்ணும்’ என்ற தலைப்பில் கௌசல்யா, ‘பெண்களை இழிவுபடுத்தும் சாஸ்திர சம்பிரதாயங்கள்’ என்ற தலைப்பில் விடுதலை.இராசேந்திரன், ‘இராமனா?இராவணனா’ என்ற தலைப்பில் கொளத்தூர் மணி உரையாற்றினர்.

இணை அறிமுக விழாவையொட்டி சரவண பரத் குடும்ப நிதியாக ரூபாய்.5000-த்தை சரவணபரத் தாயார் செல்வி வழங்கினார்.

பெரியார் முழக்கம் 10012019 இதழ்

You may also like...