மேட்டூரில் ஒரு நாள் ‘பெரியாரியல்’ பயிற்சி வகுப்பு
மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் ஜூன் 8, 2019 அன்று ஒரு நாள் பெரியாரியல் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மேட்டூரில் தொடர்ந்து மாலையில் மழை பெய்து வருவதால் பொதுக் கூட்டமாக நடக்க இருந்த நிகழ்ச்சியை பயிலரங்கமாக மாற்றிட தோழர்கள் திட்ட மிட்டார்கள்.
பயிற்சியில் 43 மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்றனர். மே 23, 24 தேதிகளில் காவலாண்டியூர் அய்யம் புதூரில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் 15 பேரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “ஏன் தோன்றியது திராவிட இயக்கம்?”, “திராவிடமும் தமிழ்த் தேசியமும்” என்ற இரண்டு தலைப்பு களிலும் பேராசிரியர் சுந்தரவள்ளி, ‘பெண்ணியம் ஓர் அறிமுகம்’, ‘இந்துத்துவத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள்’ என்ற இரண்டு தலைப்புகளிலும் வகுப்புகள் எடுத்தனர். காலை 10 மணியளவில் தொடங்கிய வகுப்புகள், இரவு 8 மணி வரை நீடித்தது. பயிற்சியாளர்கள் ஆர்வமுடன் வகுப்புகளைக் கேட்டனர். மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம், பயிற்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய் திருந்தது.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 13062019 இதழ்