பொள்ளாச்சி பாலுறவு வன்முறை: மேட்டூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மேட்டூர் அனை சதுரங்காடி பெரியார் திடலில் 16.3.2019 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்துக் கட்சி, முற்போக்கு இயக்கங்கள், மகளிர் அமைப்புகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கி. கோவிந்தராசு தலைமை தாங்கினார்.

ஈழவளவன் (நாம் தமிழர்), அப்துல் கபூர் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), கே. நடராஜன் (அய்.என்.டி.யு.சி.), செ. மோகன்ராஜ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), வசந்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), என்.பி. இராஜா (தி.மு.க.), மா. சிவக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்), ஏ.எஸ். வெங்கடேஸ்வரன் (மேட்டூர் காங்கிரஸ் கட்சி), அ. சக்திவேல் (திராவிடர் விடுதலைக் கழகம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கழகத் தோழர் ம. குமரேசன், கண்டன முழக்கமிட்டு நன்றியுரையாற்றினார்.

கூட்டத்தில் காவை. ஈசுவரன் (கொளத்தூர் ஒன்றிய செயலாளர்), மேட்டூர் நகர செயலாளர் ஆ. சுரேசு குமார், மாவட்ட பொருளாளர்சு. சம்பத்குமார் மற்றும் மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, காவலாண்டியூர், ஆர்.எஸ். பகுதி தோழர்கள் மகளிரணி தோழர்கள் உள்பட அனைத்துக் கட்சி சார்பில் ஒன்றிய, நகர, மாவட்டப் பொறுப்பாளர்கள், பொது மக்கள், வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 28032019 இதழ்

You may also like...