மேட்டூர் பகுதியில் விளக்கக் கூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தமிழர் கல்வி உரிமைப் பரப்புரை பயணம் வருகிற ஆகஸ்டு 20 முதல் 26 வரை நடைபெற இருக்கிறது.

பரப்புரை பயணத்தின் நோக்கங் களையும், கோரிக்கைகளையும்  மக்களிடையே விளக்கும் விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டம் சார்பில் பயண விளக்க தெருமுனைக் கூட்டங்கள் 4.08.2018 சனிக்கிழமை மாலை 4 மணி, சேலம் மாவட்டம் பொட்டனேரி மற்றும் 6.30 மணி மேச்சேரி ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது.  மேட்டூர் டிகேஆர் இசைக்குழுவின் பறையிசை மற்றும் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அ.சக்தி வேல் (தலைமைக் குழு உறுப்பினர்),  பரத் ஆகியோர் பயணத்தின் நோக்கம் குறித்து மக்களிடையே விளக்க உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு கோ.தமிழரசன் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

பெரியார் முழக்கம் 09082018 இதழ்

You may also like...