காவலாண்டியூர் கழகத் தோழர் ஈசுவரன் தந்தையார் முடிவெய்தினார்

கழகத் தோழர் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவை ஈசுவரன் தந்தையார் பொ. கந்தசாமி, (87) (காவலாண்டியூர் கிளைச் செயலாளர் அ.தி.மு.க.), 5.1.2019 அன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் கழகத் தோழர்கள் பலரும் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். எந்த சடங்குகளுமின்றி பெண்களே சுமந்து சென்றனர்.

6.1.2019 அன்று காவலாண்டியூரில் பொ. கந்தசாமி உருவப்படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்து உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, மேட்டூர் ஆர்.எஸ். சக்தி, ஈரோடு மாவட்டத்தலைவர் நாத்திக ஜோதி,  கொளத்தூர் பஞ்சாயத்து தலைவர் தா.செ. பழனிச்சாமி, திராவிடர் கழகப் பொறுப்பாளர் பிரகலாதன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மனோகரன் (அதிமுக), கொளத்தூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரத்தினம், கொளத்தூர்துணைத் தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதையை செலுத்தினர்.

பெரியார் முழக்கம் 17012019 இதழ்

You may also like...