காவலாண்டியூரில் பெரியார் பிறந்த நாள் விழா
17.09.2018 அன்று காலை 9 மணிக்கு 20 இரு சக்கரவாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் கொள்கை பாடல்களை ஒலிக்கச் செய்து ஊர்வலமாகச் சென்று குருவ ரெட்டியூர் பகுதியிலுள்ள பெரியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு தி.க மற்றும் காவலாண்டியூர் பகுதி தி.வி.க. தோழர்கள் இணைந்து மாலை அணிவிக்கப்பட்டது. அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறகு காலை சிற்றுண்டி குருவைப் பகுதித் தோழர்கள் ஏற்பாடு செய்தனர். காவலாண்டியூர் பகுதி தோழர்கள் சுமார் 50 பேர் ஊர்வலமாகச் சென்று மிளகாய் பொதை, கண்ணாமூச்சி, பாலமலை பிரிவு, செ.செ. காட்டுவளவு , செட்டியூர், மூலக்கடை பகுதிகளில் உள்ள அரசினர் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
பெரியாரைப் பற்றி காவை ஈஸ்வரன் உரையாற்றினார். பிறகு அனைத்து ஆசிரியர்களுக்கும் நிமிர்வோம் மற்றும் கழக வெளியீடுகள் அடங்கிய தொகுப்புகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கண்ணாமூச்சி, செ.செ. காட்டுவளவு, காவலாண்டியூர், செட்டியூர், காந்திநகர், மூலக் கடை, பகுதிகளில் கழகக் கொடிகள் ஏற்றபட்டன. அனைத்துப் பொது மக்களுக்கும் இனிப்பு மற்றும் துண்டறிக்கை வழங்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு தோழர்கள் அனைவரும் மேட்டூர் பகுதியில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு காவை ஈஸ்வரன். வசூல் ஒருங்கிணைப்பு சந்தோஷ்.
பெரியார் முழக்கம் 25102018 இதழ்