கழக வளர்ச்சிக்கு ரூ. 25,000 நன்கொடை: கோபி இராம இளங்கோவன்-க.ம. நாத்திகராணி புதிய இல்லம் திறப்பு

கழக வெளியீட்டு செய லாளர் கோபி இராம இளங் கோவன், க.ம. நாத்திக ராணி இணையரின் புதிய பெரியார் இல்லத் திறப்பு விழா, ஆகஸ்ட் 11ஆம் தேதி பகல் 12 மணியளவில் கொளப் பலூரில் சிறப்புடன் நிகழ்ந்தது. தா.செ. பழனிச்சாமி, கோ. இராமகிருஷ்ணன் ஆகியோர் புதிய இல்லத்தைத் திறந்து வைத்தனர். நிகழ்வையொட்டி மதுரை வேம்பனின் தந்திரவியல் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் ஆசைத்தம்பி வரவேற்புரையைத் தொடர்ந்து கோபி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.பா. வெங்கிடு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். இல்லத் திறப்பு விழா மகிழ்வாக கோபி. இளங்கோ கழக வளர்ச்சிக்கு ரூ.25,000 பொதுச் செயலாளரிடம் வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி,  பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கழகத் தோழர்கள் பெருமளவில் நிகழ்வில் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 30082018 இதழ்

You may also like...