விழுப்புரம், கோவையில் பரப்புரைப் பயணம்
விழுப்புரம்-கோவை மாவட்டங்களில் “நமக்கான அடையாளம் திராவிட மாடல்” பரப்புரை – மக்கள் பேராதரவுடன் நடந்தது. விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் 23-04-22 அன்று காலை11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன் தலைமையில் கண்டமங்கலத்தில் தொடங்கியது. பாக்கம் கூட்ரோடு, வளவனூர், கோலியனூர், விழுப்புரம் இரயில் நிலையம் நிறைவாக பழைய பேருந்து நிலையத்தில் இரவு 9 அளவில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் ம.க.இ.க கலைக் குழுவின் இசை நிகழ்ச்சி பிரகாஷ், ராஜ் ஆகியோர் மக்களைக் கவரும் வகையில் பாடல்களை பாடி சிறப்பித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்புரை செயலாளர் விஜி பகுத்தறிவு, பா. விஜய குமார், திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் தோழர்கள் அழகர், தமிழ், லிங்க...
