அரசுப் பேருந்துகளில் மத சுவரொட்டிகளை அகற்றக் கோரி கோவை கழகம் மனு

அரசுப் பேருந்துகளில் திட்டமிட்டு ஒட்டப்பட்டுள்ள மத அடையாள சுவரொட்டிகளை அகற்றுமாறு 16.10.2019 அன்று அரசு போக்குவரத்து கழகக் கோவை மாவட்ட மேலாண் இயக்குநரைச் சந்தித்து கோவை திவிக சார்பில் நேருதாஸ் தலைமையில்  மனு அளிக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட மேலாண் இயக்குநர், அப்படி இருந்தால் தவறு தான் நிச்சயம் இதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.  உடன் கலந்து கொண்ட தோழர்கள்: ஃபெரோஸ், வேல்முருகன் புஇக, இராவணன் தமிழ்ப் புலிகள்,  அஸ்வின் புஇமு,  ஜின்னா.

பெரியார் முழக்கம் 07112019 இதழ்

You may also like...