ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்

தொடரும் ஜாதி வெறித் தாக்குதல்கள், ஜாதிய ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து  கோவையில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 23/07/2019 செவ்வாய் மாலை நான்கு மணியளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவல் துறையின் தடையை மீறி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தலைமை நிர்மல்குமார் (கோவை மாநகர செயலாளர்), முன்னிலை ப கிருட்டிணன் (கோவை மாநகர அமைப்பாளர்), வரவேற்புரை மா.நேருதாசு (கோவை மாநகர தலைவர்), கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில்ராசு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில்  தலைமைக் குழு உறுப்பினர்கள் ஆர். எஸ். சக்தி, காவலாண்டியூர் ஈசுவரன், ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் எழிலன் மற்றும் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கோபி, மேட்டூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த கழகப்  பொறுப்பாளர்களும், தோழர்களும் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக கழக வழக்கறிஞர் ர.சிலம்பரசன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 01082019 இதழ்

You may also like...