தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கோவை 31072019

ஆர்ப்பாட்டம் !
கோவை – 31.07.2019.
தோழர் நிர்மல்குமார் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி !

”கருத்துரிமையை பறிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு” சார்பில் ………..

கழகத் தோழர் கோவை மாவட்டச்செயலாளர் தோழர் நிர்மல் குமார் அவர்கள் ஒரு முகநூல் பதிவிற்காக 27.07.2019 அன்று பொய் வழக்கில் தமிழக அர்சின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதனைக் கண்டித்தும்,தோழரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோவையில் ”கருத்துரிமையை பறிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு” சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 31.07.2019 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு த.பெ.தி.க.பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் அவர்கள் தலைமை வகித்தார்.கழகத்தின் மாவட்டத்தலைவர் தோழர் நேருதாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
மண்டல செயலாளர் சுசி கலையரசன்,
திராவிட தமிழர் கட்சியின் வெண்மணி,
சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பத்மநாபன்,
தமிழ்தேசிய இறையாண்மைக்கட்சி தென்மொழி,
பு.இ.முவின் மலரவன்,
பு.இ.க வின் பெரோஸ்பாபு,
பி.யூ.சி.எல்.இன் பாலமுருகன்
மற்றும் SDPI,PFI இயக்கத்தின் தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

கழகத்தின் சார்பில் பொருளாளர் திருப்பூர் துரைசாமி,அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி,வெளியீட்டு செயலாளர் கோபி இளங்கோவன், மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன்,திருப்பூர் மாவட்டத்தலைவர் முகில்ராசு, கிருஷ்ணன்,வெங்கட்,லோகு, கணேஷ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

You may also like...