‘ஜே.என்.யூ’ வன்முறைக் கும்பலைக் கைது செய்: கோவையில் மாணவர்கள் போர்க் கொடி

தமிழ்நாடு மாணவர்  கூட்டமைப்பு சார்பாக கோவை  பந்தயச் சாலையில் 10.01.2020 அன்று மாலை 4 மணியளவில்,  புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ‘வன்முறை’யாளர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாணவர் கழகம் கனல்மதி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். சபரி கிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்), தினேசு (இந்திய மாணவர் மன்றம்), சம்சீர் அகமது மாநில அமைப்பாளர் (இந்திய மாணவர் ஜனநாயக சங்கம்), பூர்ணிமா (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), சந்தோஷ் (தமிழ்நாடு மாணவர் கழகம்), அபுதாகீர் (Campus), சண்முகவேல் பிரபு (தமிழ்நாடு மாணவர் மன்றம்), சௌந்தர் (தமிழ்நாடு மாணவர் கழகம்), பிரசாந்த் (தமிழ்நாடு மாணவர் கழகம்) ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

தமிழ்நாடு மாணவர் கழகம் ஒருங்கிணைத்த ஆர்பாட்டத்தில், இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களோடு தன்னெழுச்சியாகவும் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 16012020 இதழ்

You may also like...