தலைமை ஆசிரியரின் ஜாதி வெறியை எதிர்த்து களமிறங்கினர் கோவை கழகத் தோழர்கள்

கோவை சரவணம்பட்டி அருகே கரட்டு மேடு கந்தசாமி நகர் நகரில் உள்ள அரசு துவக்கப் பள்ளி யில் தாழ்த்தப் பட்ட சமூகத்தை சார்ந்த குழந்தை களிடம் ஜாதி வெறியுடன் தலைமையாசிரியர் ஜெயந்தி நடந்து வந்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் அந்த பகுதி மக்கள் புகார் அளித்ததனர். இதை அறிந்த  திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வெங்கட் கிருஷ்ணன் நிர்மல் அந்த பகுதிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட குழந்தை திவ்யபாரதி மற்றும் அங்கு படிக்கும் சில குழந்தைகளிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொண்டு அந்தப்  பகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அங்கு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தெரிந்ததால். 26.6.2019 அன்று அந்த தலைமையாசிரியர் மீது சட்டப்படி தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் மாநகர காவல் ஆணையர் இடமும் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடமும் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை விரைவில் எடுப்பதாக உறுதியளித்தார். திராவிடர் விடுதலை கழகத் தோழர்களுடன்  சமூக நீதி வழக்கறிஞர்கள் திராவிடர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர் .

பெரியார் முழக்கம் 04072019 இதழ்

You may also like...