ஃபாரூக் துணைவியார் குடும்பத்தினருக்கு கழகத் தலைவரின் அன்பு வேண்டுகோள்

கோவையில் அண்ணாமலை அரங் கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை 23.03.2019 மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டம் கவரபாளையம் சரோஜா-இராமகிருஷ்ணன் ஆகியோரின் மகன் இராவண கோபால்  – ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலட்சுமி-நாச்சிமுத்து ஆகியோரின் மகள் கோமதி வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார்.   திருமணத்தை தலைமையேற்று நடத்திய கழகத் தலைவர் இந்தத் திருமணத்தில் ஒருவர் கணவனை இழந்தவர், ஒருவர் மனைவியைப் பிரிந்தவர். வாழ்க்கை இணையேற்கும் இரண்டு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். மேலும் கோமதியின் மகன், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் பிரபாகரன்தான் இந்த மறுமணத்திற்கு முன் முயற்சியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடைபெறும் இத்திருமணத்திற்கு வந்துள்ள ஹமீது (ஃபாரூக் தந்தை), இப்ராஹீம் (ரஷீதா தந்தை), ஷாஜகான் (ரஷீதா சகோதரர்) ஆகியோர்  இந்தத் திருமணத்தை எண்ணிப் பார்த்து ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அரங்கமே கரவொலி எழுப்பி வரவேற்றது. ஃபாரூக் இணையர் ரஷீதா தனது இரு குழந்தைகளுடன் நிகழ்விற்கு வந்திருந்தார்.

பெரியார் முழக்கம் 28032019 இதழ்

You may also like...