கோவையில் கழகம் நடத்திய கல்விக் கொள்கைக் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இந்தியை திணிக்காதே! கல்வியை காவி மயமாக்காதே! என்ற முழக்கத்துடன், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 பற்றிய கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் 12.07.2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கத்தில் மாலை 4:30 மணிக்கு நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு நேருதாசு தலைமை வகித்தார். வெங்கட் வரவேற்புரையாற்றினார்.

பா.இராமச்சந்திரன், யாழ் வெள்ளிங்கிரி, இரா. பன்னீர்செல்வம், நா.வே. நிர்மல் குமார், ஜெயந்த், கிருட்டிணன், சிலம்பரசன், வைத்தீஸ்வரி, அஜீத்குமார், சபரிகிரி, தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றிய விரிவான கருத்துரையை, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் மாநில ஒருங் கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வழங்கினார். தமிழ்நாடு மாணவர் கழகத்தின் விஷ்ணு நன்றியுரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 18072019 இதழ்

You may also like...