பாரூக் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி உதவிய தோழர்கள்

மதவெறிக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் குழந்தைகளுக்கான  2018 முதல் பருவ பள்ளிக் கட்டணம் ரூ46,492/- செலுத்தி அவர்களது இரண்டாம் வருடத்திய கல்வியினை துவக்கி வைத்துள்ள வழக்கறிஞர் சிவகுமார், வழக்கறிஞர் கலையரசு ஆகியோருக்கும்,  கடந்தாண்டு இரண்டாம் பருவ கட்டணம் ரூ. 34000 செலுத்திய மதுரை வழக்கறிஞர் தன பாலாஜி அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.

பாரூக் குழந்தைகளை இஸ்லாமிக் பள்ளியில் இருந்து எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு இரண்டு பருவக்கட்டணம் செலுத்த வேண்டும். வாய்ப்புள்ள தோழர்களிடம் உதவி பெற்று செலுத்தி வருகிறோம். வாய்ப்பிருக்கும் தோழர்கள், ஆதரவாளர்கள், பள்ளிக் கட்டணத்திற்கு உதவ விரும்பினால் மகிழ்வோம்.

நேருதாஸ், திராவிடர் விடுதலைக் கழகம் , கோவை மாவட்டம்

பெரியார் முழக்கம் 13092018 இதழ்

You may also like...