நிர்மல்குமார் பிணையில் விடுதலை

மாட்டிறைச்சி குறித்து முகநூல் பதிவிட்டதற்காக இந்து முன்னணியினர் தந்த புகார் அடிப்படையில் கோவை மாநகர கழகச் செயலாளர் நிர்மல் குமார், ஜூலை 27இல் செய்து செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கைதிகளுக்கான உயர் பாதுகாப்புப் பிரிவு என்ற கொட்டடியில் 24 மணி நேரமும் அடைத்து வைக்கப்பட்டதோடு உணவு பெறும் நேரத்துக்கு மட்டும் வெளியே திறந்து விடப்பட்டார். பெரியார், அம்பேத்கர் நூல்களை உள்ளே படிப்பதற்குக் கொடுத்தபோது, ‘இது ஜாதித் தலைவர்கள் நூல்’ என்று சிறை நிர்வாகம் அனுமதிக்க மறுத்துவிட்டது. 10 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஆகஸ்டு 7ஆம் தேதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நிர்மல் கைதானவுடன் வழக்கறிஞர்கள் மலரவன், வெண்மணி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலரும் ஆர்வத்துடன் முன் வந்து சட்ட உதவிகளை செய்தனர். பி.யு.சி.எஸ். அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் பால முருகன் பிணை கோரி நீதிமன்றத்தில் வாதிட்டார்.

பெரியார் முழக்கம் 15082019 இதழ்

You may also like...