சின்னியம்பாளையத்தில் அம்பேத்கர் நினைவு பொதுக் கூட்டம்
கோவை சின்னியம் பாளையத்தில் டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கரின் 62 ஆவது நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 1ஆம் தேதி நினைவு நாள் பொதுக்கூட்டம் சிவா தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் சீலாராஜ் உரையாற்றினர். டி.கே.ஆர். குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்னிலையில் திராவிடர் விடுதலை கழகத்தில் சிலம்பரசன் (வழக்கறிஞர்), ரஞ்சித் இணைந்தனர். அவர்களுக்கு நிமிர்வோம் இதழை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கி வரவேற்றார்.
பெரியார் முழக்கம் 13122018 இதழ்