Category: பெரியார் முழக்கம் 2026

‘சிட்டிசன்’ அடையாளம் ஏன் உறுத்துகிறது?

‘சிட்டிசன்’ அடையாளம் ஏன் உறுத்துகிறது?

`இந்தியாவின் குடிமகன்/குடிமகள்’  என்பதற்கான சான்றாகவே  கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வந்தது. வெளியுறவுத் துறை அமைச்சகம் இப்போது அதை மறுக்கிறது; அது ஒரு பயண ஆவணம் தான் என்று கூறுகிறது. அதேபோல் ஆதார் அடையாளமும் குடிமகன் அல்லது குடிமகள் என்பதற்கான சான்று இல்லை என்றும் கூறுகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் குடிமகன் அல்லது குடிமகள் என்றே சட்டம் கூறுகிறது. ஆங்கிலத்தில் `சிட்டிசன்’என்று அழைக்கப்படும் இந்தச் சொல்லுக்கு ஜாதி, மத அடையாளங்கள் பாலின அடையாளங்கள் எதுவும் இல்லை. இதுதான் சங் பரிவாரங்களை உறுத்துகிறது. இந்தியாவில் வாழும் எவரும் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு தான் வாழ வேண்டுமே தவிர, அதை மறுக்கும் `சிட்டிசன்’ என்ற அடையாளத்தை ஏற்க முடியாது என்பதுதான் அவர்களின் கொள்கை. இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தும் குடிமக்கள் என்ற அடையாளத்தை அகற்றிவிட்டு இந்துராஷ்டிரத்துக்கான சனாதன அடையாளங்களை நோக்கி நாட்டை நகர்த்துகிறது சங்பரிவார். அரசியல்...

உயர்ஜாதி ஏழை ஒதுக்கீட்டில் மோசடிகள்

உயர்ஜாதி ஏழை ஒதுக்கீட்டில் மோசடிகள்

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், பொருளாதார நலிந்த பார்ப்ப னர்களுக்கான (EWS) இட ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஒன்றிய அரசின் விதிமுறைப்படி, ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கே 10% இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகைகள் வழங்கப்பட சட்டம் இருக்கிறது. ஆனால், அண்மையில் தேர்ச்சி பெற்ற உயர்ஜாதி ஏழைப் பிரிவைச் சேர்ந்த 104 மாணவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்தபோது பல அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளி வந்துள்ளன. தேர்ச்சி பெற்ற 104 பேரில் 67 மாணவர்கள், ஆண்டுக்கு ரூ. 2.65 லட்சம் வரை கட்டணம் வசூ லிக்கும் நாட்டின் மிக புகழ்பெற்ற சிவில் சர்வீசஸ் பயிற்சி மய்யங்களில் படித்துத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 46...

காவல் நிலையத்தில் கிடா வெட்டுவதா? கழகம் புகார்; அரசு உடனடி நடவடிக்கை!

காவல் நிலையத்தில் கிடா வெட்டுவதா? கழகம் புகார்; அரசு உடனடி நடவடிக்கை!

சேலம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக கிடாவெட்டி மாந்திரீக பூஜை போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் 26.06.2026 புகார் மனு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. மாவட்டக் காவல் துறை அதிகாரிகள் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தி விவரம்: கடந்த 20.06.2026 ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் “குற்றங்கள் குறைய வேண்டும்” என்பதற்காக காவல்துறையினரே கிடாவை பலியிட்டு, அதன் ரத்தத்தை காவல் நிலைய கட்டிடத்தின் நான்கு மூலைகளிலும் பூசி, மாந்திரீக பூஜை நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ஆணைப்படி, அரசு அலுவலகங்கள் , காவல் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டிடங்களிலும் மதச்சார்புடைய வழிபாடுகள், பூஜைகள், கடவுள் படங்கள், மாந்திரீக சடங்குகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையே அரசு ஆணையை மீறி, மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில்...

கழகப் பரப்புரைப் பயணத்துக்கான தலைப்பு

கழகப் பரப்புரைப் பயணத்துக்கான தலைப்பு

* ஜாதியில் திருமணம் * மதத்தில் பார்ப்பனியம் * வாழ்வில் மூடநம்பிக்கை தடை, அதை உடை…… * மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரை பயணம் பெரியார் முழக்கம் இதழ் 02072026

அதிகாரத்தில் கால் பதிக்காத குரலற்ற சமூகங்களின் உரிமைக்கு  கருத்தரங்குகள் குடும்ப விழாக்கள்         மாற்றத்துக்கான வாழ்வியல் பரப்புரை பயணம்  கழகத் தலைமைக் குழு முடிவுகள்

அதிகாரத்தில் கால் பதிக்காத குரலற்ற சமூகங்களின் உரிமைக்கு கருத்தரங்குகள் குடும்ப விழாக்கள் மாற்றத்துக்கான வாழ்வியல் பரப்புரை பயணம் கழகத் தலைமைக் குழு முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம் 28.06.26 ஞாயிறு பிற்பகல் 2.30 மணி அளவில் திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழுக் கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள், பரப்புரை பயணம், கருத்தரங்குகள் நடத்துவது, குடும்ப விழாக்கள் நடத்துவது ஆகியவை குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. நிறைவாக தலைமைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. “குரலற்ற மனிதர்களுக்கான குரல்” சீர் மரபினர் (DNC/DNT) என்று பட்டியலிடப்பட்டுள்ள ஜாதிகளில் இன்று வரை அரசியல் அதிகாரமோ, அரசு பதவிகளையோ பெறும் வாய்ப்பே கிட்டாமல் அமிழ்த்தபட்டுக் கொண்டிருக்கும் சமூகத்து மக்களின் பாடுகளை பொதுச் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து அவர்களுக்கான உரிமைகளுக்காய் குரல் கொடுக்கும் நோக்கத்துடன் “குரலற்ற மக்களின் குரலாக” ஒலிக்கும் வகையில்...

வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம்

1.காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், 2.ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தனிச் சட்டம் இயற்றிக் கோரியும் வேலூர் மாவட்டக் கழகம் சார்பாக 20.6.2026 மாலை குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு மாவட்டத் தலைவர் காத்தவராயன், சிபிஎம் குடியாத்தம் நகரச் செயலாளர் குபேந்திரன், மாவட்டச் செயலாளர் சிவா நந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முரளி தன்மானன் நன்றி கூறினார். கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 25062026

நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு

நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு

நிமிர்வோம் வாசகர் வட்ட 32-வது சந்திப்பு, ஜூன் 14,2026 (ஞாயிறு) மாலை 6 மணிக்கு, கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டத்தின் அமைப்பாளர் ர.பிரகாசு நிகழ்வை ஒருங்கிணைத்தார். “தேர்தல் முடிவுகளை எப்படி எடுத்துக்கொள்வது?” எனும் தலைப்பில், தோல்விக்கான காரணங்கள் குறித்தும், மக்களின் முதன்மையான ஊடகமாக மாறியுள்ள சமூக வலைத்தளங்களில் பகுத்தறிவுப் பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுக்கவேண்டிய அவசியம் குறித்தும், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் உரையாற்றினார். “பேருந்து தீண்டாமையை ஒழித்த இயக்கம்!” எனும் தலைப்பில், தோழர்கள் கெம்பனூரில் கள ஆய்வு செய்த அனுபவங்களையும், கோவை கெம்பனூர் வரை வரவிடாமல் தடுக்கப்பட்டிருந்த 21-ஆம் எண் பேருந்தை மீண்டும் வரவைக்க நடந்த போராட்டங்களின் வெற்றி குறித்தும், கோவையில் தலைமைக் குழு உறுப்பினர் நிர்மல்குமார் இணையவழியில் உரையாற்றினார். நிறைவாக தலைமையுரையாற்றிய தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், பாஜகவின் சமஸ்கிருத திணிப்பைப் பற்றியும், கடந்த காலங்களில் பெரியார் இயக்கம் முன்னெடுத்த வீரஞ்செறிந்த போராட்டங்களைப் பற்றியும்...

பொன்னம்பலனார் நடத்திய கொள்கைப்  போராட்டங்கள்

பொன்னம்பலனார் நடத்திய கொள்கைப் போராட்டங்கள்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் பொன்னம்பலனார் குறித்து எழுதிய கடந்த இதழில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி… வேலூர் கந்தசாமி கண்டர் பள்ளியில், பொன்னம்பலனார் பணியாற்றிய காலத்திலேயே தனது சொந்த ஊரான செந்துறையில் இருந்து ஆண்டுக்கு, ஏழெட்டு மாணவர்களை அழைத்துச்சென்று, பரமத்தி வேலூரில் தன் வீட்டிலேயே தங்கவைத்து, அவர்களைப் படிக்கவைத்தார். பின்னர், அங்கிருந்து பணியில் நீக்கப்பட்டபோது, சேலத்தில் பணி வழங்கிட அவருக்குப் பரிந்துரைத்தவர் தந்தை பெரியார். கந்தசாமி கண்டர் பள்ளியில் இருந்து பொன்னம்பலனார் நீக்கப்பட்டபோது, அவரோடு ஏழு ஆசிரியர்கள் வேலையை விட்டுவிட்டனர். ஏறத்தாழ 6 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின்னர், முசிறிக்குப் பணி மாறுதல் அடைந்தார். அப்போது, திருச்சியில் பெரியாரின் கூட்டம் எங்கு நடைபெற்றாலும், பொன்னம்பலனார் சென்று விடுவார். இவர் பணியாற்றிய...

நிலாச்சோறு உணவக உரிமையாளர் தோழர் ரகுநாத் அவர்களின் குடும்பப் பின்னணி:

நிலாச்சோறு உணவக உரிமையாளர் தோழர் ரகுநாத் அவர்களின் குடும்பப் பின்னணி:

1950 அக்டோபரில் பெரியார் அறிவித்த வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டத்தில் 8.11.1950 அன்று தோழர் ரகுநாத் அவர்களின் பாட்டியும் சேலம் சிவதாபுரம் திராவிடர் கழகத்தின் பொருளாளருமான அகிலாண்டம் அவர்களும், அவரது மாமனார் 80 வயது உள்ள மாரி அவர்களும், அவரது குழந்தைகள் ஆன 13வயது சரஸ்வதி, 10 வயது சொர்ணாம்பாள், 8வயது ஜெகநாதன், 3வயது திராவிட கனி, 1,1/2 ஒன்றரை வயது பாண்டியராசா ஆகியவர்களுடன் கைதாகிறார். அதில் குழந்தைகளில் 1,1/2 வயது பாண்டிராசாவைத் தவிர மற்ற நால்வரையும் அன்னையை விட்டுப் பிரித்து Children’s Society-யில் தனியாக காவலில் வைக்கப்படுகிறார்கள். ஒரு வார தண்டனைக்குப் பின் விடுதலையான அகிலாண்டம் அம்மாள், அவரது கணவரும் சேலம் சிவதாபுரம் காட்டூர் திராவிடர் கழக தலைவருமான எஸ் எம் வெள்ளியங்கிரி அவர்களும் 21.11.1950 அன்று மீண்டும் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி உள்ளார்கள். ஒரு மாதம் தண்டனை வழங்கப்பட்டு 22.12.1950 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 16.5.1983 அன்று...

பயிலரங்கத்தின் வெற்றி; பயிற்சி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

பயிலரங்கத்தின் வெற்றி; பயிற்சி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

சேலம் பயிலரங்கத்தில் பங்கேற்றவர்கள் நிகழ்வின் இறுதியில் பயிலரங்கம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நாமக்கல் ரேஷிகா வர்சினி: பெரியார் குறித்த எனக்குத் தெரிந்த விவரங்களைத் தாண்டி பெரியார் பற்றிய வரலாறுகளை விரிவாக கற்றுக் கொள்ள முடிந்தது. இது என்னுடைய படிப்புக்கு உதவியாக இருக்கும். நான் பார்ப்பனரல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனைத்து சடங்குகளையும் பின்பற்றி வந்தது என்னுடைய குடும்பம். இந்த பயிலரங்கத்துக்கு வந்ததற்குப் பிறகு விடுதலை அடைந்த உணர்வை எட்டி இருக்கிறேன். இனி நல்ல வாழ்க்கை முறைக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் பெரியார் தான் என்று கூறினார். இசக்கி ராஜன் (திருநெல்வேலி): இங்கே வருவதற்கு முன் பெரியார் குறித்த நான் நிறைய படித்திருக்கிறேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இங்கே தோழர்கள் பேசியதற்குப் பிறகு நான் இன்னும் படிக்காதது நிறைய இருக்கு என்று உணர்ந்து கொண்டேன். ஜாதி குறித்தும் சடங்குகள் எப்படி பெண்கள் வழியாக கடத்தப்படுகிறது என்பது பற்றியும் பெரியாரின்...

அய்.அய்.டி-களில் நடக்கும் ‘மறுபிறவி’ ஆராய்ச்சிகள்

அய்.அய்.டி-களில் நடக்கும் ‘மறுபிறவி’ ஆராய்ச்சிகள்

இந்திய அறிவுசார் முறை என்ற பெயரில் அய்.அய்.டிகளில் போலி அறிவியல் பாடமாக கற்பிக்கப்பட்டு இந்துத்துவா பழமை வாதத்துக்கு உயிர் கொடுப்பதை விளக்குகிறது இக்கட்டுரை. கடந்த சில ஆண்டுகளாக, “இந்திய அறிவு முறை” (Indian Knowledge System -IKS) என்ற திட்டம் குறித்த மூடநம்பிக்கையை பாரம்பரிய இந்திய அறிவு முறை என்ற பெயரில் மறுபிறவி கருத்துக்களை நவீன கல்விப் பாடத்திட்டங்களுடன் ஒருங்கிணைக்க முயன்று வருகிறது. கடந்த கால வரலாறுகளைப் பேசுவது தவறு அல்ல! ஆனால் மதம் சார்ந்த பழமை கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பாணினியின் மொழி ஆய்வு, நியாய (Nyaya)வாதம், , இரும்பின் பயன்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் தற்போது என்ன நடக்கிறது? மாண்டி அய்.அய்.டி இயக்குநர் லட்சுமிதர் பெஹேராவின் தலைமையின் கீழ் அமைத்த குழு புராணங்களை வரலாறாகக் கருதுதல், சடங்குகளை தொழில்நுட்பமாக திரித்துக் கூறல் போன்ற பாடத்திட்டங்களை பரிந்துரைக்கிறது. அறிவியல் அடிப்படையில் மறுக்கப்பட்ட மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் முலாம் பூசுகிறது. 2020 –...

“சவுண்ட் – ஆக்க்ஷன் “டயலாக்”

“சவுண்ட் – ஆக்க்ஷன் “டயலாக்”

ரசிகர்களை வெறியூட்டுவதற்கும் உசுப்பேற்றுவதற்கும் தயாரிக்கப்பட்ட பேச்சுகளை பேசி பழக்கப்பட்டவர் விஜய். இப்போது முதல்வர் பதவிக்கு வந்த பிறகும் அதைத் தவிர வேறு எந்த பேச்சையும் அவரால் பேச முடியவில்லை. எனவே தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் அவையை விட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்பது அவரது முதல் பிரச்சினையாக இருந்தது. அதற்காகவே வசைச் சொற்களை வீசினார் ; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு தான் அவருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்தது” அப்பாடா; இனி ஸ்கிரிப்ட்டை ரசிகர்களிடம் பேசுவது போல் பேசலாம் என்ற நிம்மதி பெருமூச்சு அவருக்கு வந்திருக்கிறது. எதிரே அமர்ந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ரசிகர்கள் அல்ல! அவர்கள் முதல்வர் விஜயின் பேச்சுக்கு விசில் அடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய சட்டமன்றத்திற்கு வரவில்லை என்பதை அவருக்கு பேச்சு தயாரித்து கொடுத்தவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். விஜய் வருகைக்கு முன் தங்கள் அலுவலகத்துக்கு சோபா வந்தது என்பதை சில தலைவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்;...

கருத்து செறிவுடன் நடந்த     கழக இளைஞரணி பயிலரங்கம்

கருத்து செறிவுடன் நடந்த கழக இளைஞரணி பயிலரங்கம்

சேலம் மாவட்டக் கழக இளைஞரணி நடத்திய இரண்டு நாள் பயிலரங்கத்தில் எண்பது இளைஞர்கள் பெண்களும், ஆண்களுமாய் பங்கேற்றனர். கால மாற்ற சூழலில் பெரியார் கருத்தியல் மற்றும் பெரியார் இயக்கத்தின் தேவை குறித்து பயிலரங்கம் விரிவாக விவாதித்தது. சேலம் மாவட்ட இளைஞர் அணி பயிலரங்கம் ஜூன்20,21 தேதிகளில் சேலம் நிலாச்சோறு உணவக அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. 20.06.2026 சனிக்கிழமை இளைஞர்களின் எழுச்சியோடு தொடங்கியது. தோழர்கள் லதா, சத்யா, பொன்ராஜ், உமாபதி குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து “இன்றைய சமூக அரசியல் சூழலில் பெரியாரியத்தின் தேவை” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முதல் வகுப்பினை தொடங்கினார். தேநீர் இடைவேளைக்கு பிறகான இரண்டாவது அமர்வில் “சமூக ஊடகங்கள் – பயன்படுத்தல்” என்ற தலைப்பில் ( Wild South Raiders podcast) தோழர் கக்காஷி காணொளி மூலமாக விளக்கி வகுப்பெடுத்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான மூன்றாவது அமர்வில்...

மருத்துவர் சிவபாலன் கட்டுரைக்கு பாராட்டு

மருத்துவர் சிவபாலன் கட்டுரைக்கு பாராட்டு

கடந்த வாரம் பெரியார் முழக்கத்தில் வெளிவந்த மருத்துவர் சிவபாலன் எழுதிய கட்டுரை மிகவும் சிறப்பானது. சமூகத்தில் நிகழ்ந்துள்ள உளவியல் மாற்றங்களை புரிந்து கொள்ள உதவியது. பெரியாருடைய கொள்கைகளையும் திட்டங்களையும் கொண்டு செல்லும் வழிமுறைகளை உருவாக்குவதற்கு இந்த உளவியல் மாற்றங்களை எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டிய அவசியத்தை கட்டுரை உணர்த்துகிறது. குடும்ப வாழ்க்கை முறை குறித்து பெரியார் முன்வைத்த கருத்துகளோடு இந்தக் கட்டுரையைப் பொருத்திப் பார்த்தால் புதிய வெளிச்சங்கள் கிடைக்கும் என்று கருதுகிறேன். சமூக ஊடகங்கள் இளைஞர்களிடம் உருவாக்கும் உளவியல் நெருக்கடிகளையும் முதியவர்களின் உளவியல் பாதிப்புகளையும் கட்டுரை அற்புதமாக படம் பிடித்திருக்கிறது ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. – இரா.உமாபதி (சென்னை) பெரியார் முழக்கம் இதழ் 18062026

பயிலரங்கம் நடத்த கோவை மாவட்டக் கழகம் திட்டம்!

பயிலரங்கம் நடத்த கோவை மாவட்டக் கழகம் திட்டம்!

ஜூன்-6,மாலை 4.30மணி அளவில் கோவை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்ப் புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்: 21 ஆம் நம்பர் அரசுப் பேருந்து ஜாதிய தீண்டாமைகளைத் தகர்த்து கோவை தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு பல வருடங்களுக்குப் பிறகு சென்றது. அதற்கு காரணமாக இருந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, முதலமைச்சர் ஜோசப் விஜய் அகியோருக்கு நன்றி பாராட்டுகிறோம் ● பெரியார் கொள்கைகளை பரப்புவதற்கு தொடர்ந்து தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது; ● சமூக வலை தளங்களில் இளம் தலைமுறையினர் மூலம் புதிய(apps) செயலிகளைப் பயன்படுத்தி பெரியாரிய கொள்கைகளைக் கொண்டு செல்வது; ● விரைவில் புதிய தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார் , வெங்கட் ,சிவராசு,கிருஷ்ணன் சதீஷ், ஸ்டாலின் ராஜா,சத்தியமூர்த்தி, தரணி, நவீன், கதிரவன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம்...

கரட்டுப்பாளையம் செல்லப்பன் 82 வயதிலும் கொள்கை உறுதி!

கரட்டுப்பாளையம் செல்லப்பன் 82 வயதிலும் கொள்கை உறுதி!

சென்னிமலை கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் அவர்கள் 17 வயதில் தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சமூக மாற்றத்திற்கான பெரியாருடைய எதிர்நீச்சல் பணிக்கு வந்தவர். தற்போது 82 வயதிலும் பெரியாரியப்பற்றுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழராக வாழ்ந்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக பெரியார் பெருந்தொண்டர் சென்னியப்பன் அவர்களின் உடல்நிலை அவ்வப்போது பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், திருப்பூர் முத்து, அய்யப்பன் ஆகியோர் ஜூன் 11, 2026 அன்று மாலை தோழரின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். சிறுவயதில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் மதச் சடங்குகளுக்கு எதிராகவும் அன்றைய 1960,1970 காலகட்டங்களில் இருந்த மிகக் கொடுமையான ஜாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக செய்த பணிகளையும் பெரியாரிய இயக்கங்களில் நடந்த போராட்டங்கள் பிரச்சாரங்கள் சிறைக்குச் சென்று வந்த அனுபவம் ஊரில் கவுண்டர்கள் தாழ்த்தப்பட்டவர்களை நடத்திய ஜாதிக் கொடுமைகள் மற்றும் கவுண்டர்கள்...

ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மக்கள் மனதிலிருந்து ஜாதிய உணர்வை ஒழிப்பதற்கான பொறுப்பை அரசு முன்னெடுக்க வேண்டும்’ என, ஆணவக் கொலை வழக்கு விசாரணையின் போது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் மென் பொறியாளர் கவின், 25, ஆணவக் கொலை வழக்கில், கவின் காதலியின் தந்தையான போலீஸ் எஸ்.அய்., சரவணன் ஜாமின் மனு மீதான விசாரணை, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் நேற்று நடந்தது. வழக்கை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘மனுதாரர் தன் மனைவியுடன் சேர்ந்து ஆதாரங்களை மறைத்தார். அவரது மகள், கவின் இடையிலான காதல் விவகாரத்தை அறிந்திருந்தும், சுர்ஜித் குற்றம் செய்ய உடந்தையாக இருந்தார். ஜாமினில் விடுவித்தால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும். அது விசாரணையை பாதிக்கும்’ என்றார். ‘‘குற்றம் செய்வதில் மனுதாரர் நேரடி பங்காற்றவில்லை என்றாலும், தன் மகனை ஜாதிய மனப்பான்மையுடன் வளர்த்ததற்காக அவர் பொறுப்பேற்க வேண்டும். ஜாதிய மனப்பான்மையின் உச்சகட்ட...

அறிஞர்களை உருவாக்கிய பகுத்தறிவு ஆசிரியர்

அறிஞர்களை உருவாக்கிய பகுத்தறிவு ஆசிரியர்

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரைத் தொடர். உடையார்பாளையத்தை, சிற்பி போல செதுக்கி, கல்வி – வேலைவாய்ப்பில் முன்னேற்றமடைய பாடுபட்ட பகுத்தறிவு ஆசிரியர் வேலாயுதத்தைப் போலவே, அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செந்துறையை அடுத்த கீழமாளிகையைச் சேர்ந்தவர் மற்றொரு ஆசிரியர். பழுத்த ஆன்மிகவாதியாக இருந்த அந்த ஆசிரியரை, பகுத்தறிவு ஆசிரியராக மாற்றியது பெரியாரின் `குடி அரசு’ இதழ். பெரியாரியவாதியாக மாறிய பின்னர், கருப்புச்சட்டையோடுதான் பள்ளிக்குச் செல்வார். பெரியாரின் பகுத்தறிவைத் துணைகொள்வதற்கு முன்பே, மறைமலை அடிகளாரின் மொழியியல் கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டிருந்தார். 1926-31 வரையில் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பின்போது, மறைமலை அடிகளின் மகன் மறை. திருநாவுக்கரசுவும் பொன்னம்பலனாரும் ஒரே அறையில் தங்கிப் படித்தனர். அவர்கள்...

ஜாதி எதிர்ப்பும் உட்ஜாதி அரசியலும்!

ஜாதி எதிர்ப்பும் உட்ஜாதி அரசியலும்!

ஜாதி கடந்த காதல் உணர்வுகளைச் சார்ந்து நிற்கிறது! ஜாதிகளுக்கிடையே உள்ள பிரிவுகளை மறுக்கிறது. ஜாதி சமூக அடுக்குகளை எதிர்க்கிறது என்பது காதல் குறித்த பார்வையாக இருக்கிறது. அது உண்மைதான்; ஆனால் காதலை மட்டும் சமூகம் உணர்வு சார்ந்த பார்வையாக மட்டும் பார்க்காமல் அரசியலாகவும் பார்க்க வேண்டும். சமூகத்தில் காதல், ஜாதி எதிர்ப்புக்கான அரசியல் முன்னெடுப்புக்கும் சமூக மாற்றத்திற்கான அரசியல் கருவியாகவும் செயல்படுகிறது. காதலில் சமூக மாற்ற ஜாதி ஒழிப்பை நோக்கிய அரசியல் இருக்கிறது என்பதே அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர்கள் மற்றும் மேற்கத்திய சிந்தனையாளர்களின் கருத்தாகும். ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு பட்டப் படிப்பு மாணவரான ரோகித் வெமுலா அம்பேத்கர் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட மிகச் சிறந்த கவித்துனமான அறிவியல் மாணவர். மதவாத ஜாதி வெறி சக்திகளால் ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலையில் 2016 ஜனவரி 17 அன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் அவரது இறுதிக் கடிதம் ஒரு வரலாற்று ஆவணமாக மதிக்கப்படுகிறது. தனது...

பள்ளிகளில் ஜாதிக் கயிறுகளுக்குத் தடை!

பள்ளிகளில் ஜாதிக் கயிறுகளுக்குத் தடை!

பள்ளிகளில் ஜாதிக் கயிறு, மத அடையாளங்களை மாணவர்கள் அணிய அனுமதி இல்லை என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பை பாராட்டி வரவேற்கிறோம். பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதிக் கலவரங்கள் தாக்குதல்கள் நடந்ததை ஒட்டி திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் தலைமையில் அமைத்த குழு அளித்த முக்கிய பரிந்துரைகளில் இது ஒன்றாகும்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நீதிபதி சந்துரு பரிந்துரைகளை அரசு ஏற்று செயல்படுத்தும் என்று அறிவித்திருப்பதையும் பாராட்டி வரவேற்க வேண்டும். இந்த அறிவிப்பு வந்தவுடன் முதல் எதிர்ப்பு பாஜக தலைவர் நயினாரிடம் இருந்து வந்திருக்கிறது.”ஜாதி மத அடையாளங்கள் தமிழர் மரபு என்றும் பாரம்பரியம் என்றும் அதில் கை வைக்கஅனுமதிக்க மாட்டோம்” என்றும் மிரட்டுகிறார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதே தமிழரின் அடையாளம், ஜாதியும் மதமும் அல்ல. ஆரிய பார்ப்பனியத்தின் சூழ்ச்சியால் திணிக்கப்பட்ட அடிமைச் சின்னங்களை தமிழர் மரபு என்று பாஜக கொண்டாடலாம் ஆனால் தமிழ் இன...

‘உண்மையான’ பக்தர்கள் எங்கே?

‘உண்மையான’ பக்தர்கள் எங்கே?

“கோயில் அறங்காவலர்களாக உண்மையான கடவுள் பக்தர்களையே நியமிக்க வேண்டும். நாத்திகர்களை நியமிக்கக் கூடாது” என்கிறார் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். பார்ப்பனர்கள், நீதிபதிகள், சங்கிகள் பலரும் உண்மையான பக்தர்களைத் தேடி அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் உண்மையான பக்தர்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதுதான்! உண்மையான நோய்களை கண்டுபிடிப்பதற்கு ஸ்கேன், எக்ஸ்ரே வந்துவிட்டன. உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் வந்துவிட்டன. உண்மையான பக்தர்களை எப்படி கண்டுபிடிப்பது? நாள் தவறாமல் பூஜைகளை செய்கிறவர்கள்; நெற்றியில் அடையாள மார்க்குகளை வைத்திருப்பவர்கள்; ஆச்சாரங்களை அனுதினமும் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவர்கள் இவர்களை எல்லாம் உண்மையான பக்தர்களாக அங்கீகரிக்கலாமா? அதற்கும் வாய்ப்பு இல்லை! கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து நீதிமன்றம் கொண்டுவரப்படும் குற்றவாளிகளைப் பாருங்கள்; அவர்கள் பழுத்த பக்தர்களாக விபூதி, குங்குமத்துடன் காட்சித் தருகிறார்கள். ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு முன்ஜாமின் பெற்று வெற்றிப் புன்னகையுடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் அரசியல் தலைவர்களைப்...

அம்பேத்கரைத் திரிக்கும் பார்ப்பனியம்!

அம்பேத்கரைத் திரிக்கும் பார்ப்பனியம்!

விஜில் என்ற பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பச்சையாக அம்பேத்கர் பார்வையில் சனாதனம் என்ற ஒரு கருத்தரங்கை நடத்தி அம்பேத்கரின் கருத்துக்களைத் திரிக்கும் புரட்டுகளை செய்திருக்கிறது. “பிராமணர்; சத்திரியர்; வைசியர்” என்ற பிரிவுகள் வர்ணம் அல்ல என்றும் அது குருகுலக் கல்வியில் தருகிற கல்வி பட்டம் என்றும் ஒரு ஆராய்ச்சியாளர் பேசியிருக்கிறார். இதில் கூட “சூத்திரர்” என்ற பிரிவை அவர் மிக சூழ்ச்சியாக ஒதுக்கி இருக்கிறார். அடிமை வேலை செய்வதற்காகவே சபிக்கப்பட்ட “சூத்திரர்களும்” குருகுலத்தில் படித்து பட்டம் பெற்று வந்தவர்களா? என்ற கேள்வி எழுமே என்ற காரணத்தினால் இதை தவிர்த்து இருக்கிறார்கள். குருகுலக் கல்வியில் குருவாக இருக்கும் தகுதியே “பிராமணருக்கு” மட்டும்தான் உண்டு; இந்தப் “பிராமண” குரு எந்தக் குருக்குலத்தில் படித்து அதற்கான பட்டத்தைப் பெற்றார் என்பதை இவர்களால் விளக்க முடியுமா? பிறப்பின் அடிப்படையில் பாரம்பரிய உரிமையாக கட்டமைக்கப்பட்ட இந்தக் கொடூரமான பார்ப்பனிய ஆதிக்கத்தை கல்வித் தகுதியாக மடைமாற்றி “காதில் பூ” சுற்றுகிறார்கள்....

சுவீடனில் ரத்த உறவு திருமணங்களுக்கு தடை!

சுவீடனில் ரத்த உறவு திருமணங்களுக்கு தடை!

சுவீடன் நாடாளுமன்றத்தில் மே-26, 2026 அன்று ரத்த உறவு திருமணங்களைத் தடை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. எதைத் தடை செய்கிறது? முதல் உறவினர் திருமணம், அதாவது அத்தை/மாமா/சித்தப்பா/பெரியப்பா மகன்–மகள் போன்ற உறவுகளுக்கிடையிலான திருமணம் தடை. அதேபோல், ஒருவரின் சகோதரர் அல்லது சகோதரியின் நேரடி சந்ததியினருடன் திருமணம் செய்வதும் தடை செய்யப்படுகிறது. ஏன் இந்தச் சட்டம்? ஸ்வீடன் அரசு இதை இரண்டு கோணங்களில் பார்க்கிறது: நெருங்கிய உறவினர் திருமணங்களில் குழந்தைகளுக்கு மரபணு சார்ந்த உடல்நல ஆபத்துகள் அதிகரிக்கும் என்ற சுகாதாரக் கவலை; மேலும் சில சமூகங்களில் குடும்ப அழுத்தம், கட்டாயத் திருமணம், ஆணாதிக்கக் கட்டுப்பாடு போன்றவற்றைத் தடுக்க வேண்டும் என்ற சமூகநீதி காரணம். வெளிநாட்டில் நடந்த இப்படிப்பட்ட திருமணங்களையும் பொதுவாக ஸ்வீடன் அங்கீகரிக்காது என்று சட்டம் கூறுகிறது. ஏற்கனவே நடந்த திருமணங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. சட்டம் அமலுக்கு வந்த பிறகான திருமணங்களைத்...

அயோத்தி ராமன் கோயில் ஊழல் சந்தி சிரிக்கிறது! பெருகிவரும் கோயில் கொள்ளைகள்

அயோத்தி ராமன் கோயில் ஊழல் சந்தி சிரிக்கிறது! பெருகிவரும் கோயில் கொள்ளைகள்

அண்மைக்காலமாக கோயில் நிர்வாகிகள் அர்ச்சகர் திருட்டு மோசடியில் ஈடுபடும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.கோயிலுக்குள்ளே இருக்கும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கடவுளை ஏமாற்றி ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இந்தியாவின் தேசிய அடையாளம் போல் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயில் அயோத்தியில் கட்டப்பட்ட ” ராம ஜென்ம பூமி’’ கோயிலில் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை மோசடி குறித்து அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. கோயிலைக் கட்டிய ராமஜென்ம பூமி அறக்கட்டளை கோயிலுக்கு நிலம் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. பல மடங்கு கூடுதலாக விலையை உயர்த்தி நிலம் வாங்கப்பட்டது. இந்த ஊழல் மூடி மறைக்கப்பட்டது. இப்போது கோயில் கட்டுவதற்கு வசூலிக்கப்பட்ட நன்கொடையில் பெருமளவு ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அர்ச்சகர்கள் அறங்காவலர்கள் உறுப்பினர்கள் கையாடல் செய்துள்ளனர். இது குறித்து சி.பி.அய் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்துள்ளது. வழக்கு வந்தவுடன் உபியில் ராமராஜ்யம் நடத்தும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மூன்று சிறப்பு புலனாய்வுக்...

புத்தக வெளியீட்டு விழா!

புத்தக வெளியீட்டு விழா!

மேட்டூர்த் தமிழ்ச் சங்கம், வாசகர் வட்டம், மேட்டூர் கிளை நூலகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நூலாசிரியர் அமிர்தம் பீட்டர் ராஜன் அவர்கள் எழுதிய ‘தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பகுதி-1 தமிழர்கள் வீழ்ந்த வரலாறு’ என்ற நூல் 29.05.2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் மேட்டூர், பொது நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். மேட்டூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆசிரியர் கு. பாரி முன்னிலை வகித்தரார். ஆய்வறிஞர் இரா.இலட்சுமி நாராயணன் வரவேற்புரையாற்றினார். கவிஞர் வை. சரவணன் நூல் அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் சிலம்பரசன் நூல் திறனாய்வு செய்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பகுதி-1 தமிழர்கள் வீழ்ந்த வரலாறு புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் அனுராதா புத்தகத்தை பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் அமிர்தம் பீட்டர் ராஜன் நூல் ஏற்புரையாற்றினார். மருத்துவர் சந்திரமோகன், எழுத்தாளர் மே. கா கிட்டு, வழக்கறிஞர்...

மடத்துக்குளம் மோகன் நினைவுநாள் பரப்புரைக் கூட்டங்கள்!

மடத்துக்குளம் மோகன் நினைவுநாள் பரப்புரைக் கூட்டங்கள்!

மறைந்த மடத்துக்குளம் மோகன் (கழகத் தலைமைக் குழு உறுப்பினர்) அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் சூன்-1, 2026 திங்கள் காலை 10 மணி அளவில் மடத்துக்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலையில் மடத்துக்குளம் மோகன் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழ் வணக்கங்களையும் பெரியாரின் கொள்கை முழக்கங்களையும் கழகத் தோழர்கள் எழுப்பினார்கள். நிகழ்விற்கு மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் சு.சிவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்களுக்கு மடத்துக்குளம் மோகன் குடும்பத்தினர் காலைச் சிற்றுண்டி வழங்கி சிறப்பித்தனர். தொடக்க உரையாக கழக சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் ‘பெரியாரின் கொள்கைகளை, சுயமரியாதைக் கருத்துகளை தோழர் மடத்துக்குளம் மோகன் அவர்கள் பட்டித்தொட்டி எல்லாம்...

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் நினைவேந்தல்!

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் நினைவேந்தல்!

கோவை மாவட்டக் கழகத்தினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரியார் பெருந்தொண்டர், மறைந்த கோவை மாவட்டக் கழகத் தலைவர் பா. இராமச்சந்திரன் அவர்கள் 17.05.2026 அன்று மறைவுற்றார், அவரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில் மேட்டுப்பாளையம், கெண்டையூர் பகுதியில் உள்ள இராமச்சந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. கோவை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார்,கோவை மாநகரச் செயலாளர் வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இராமசந்திரன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, கழக சமூகஊடகப் பொறுப்பாளர் பரிமளாராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் வீ. சிவகாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்டப் பொறுப்பாளர் விஷ்ணு, தி.க மாவட்டத் தலைவர் ச. வேலுச்சாமி, பவானி நதிநீர் மற்றும்...

அன்றாட வாழ்வில் ஆணாதிக்க மொழிகள்

அன்றாட வாழ்வில் ஆணாதிக்க மொழிகள்

உங்கள் மனைவிக்கு சமையலறையில் நீங்கள் உதவி செய்வீர்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் ஆமாம் என்று தான் பதில் கூறுகிறார்கள். இப்படி கூறுகிறவர்கள் மிகவும் முற்போக்கானவர்கள் மனைவியை மிகவும் நேசிப்பவர்கள் என்று சமூகம் முடிவு செய்கிறது. சமூக ஊடகங்களில் ஒரு பிரபலமான இணையர்களிடம் பேட்டி எடுத்த போது இந்த பதில் கணவரிடம் இருந்து வந்தது. ஏராளமான லைக்குகளும் சேரும் குவிந்தன. இதில் அடங்கியுள்ள பாகுபாடு உணரப்படுவது இல்லை! உதவி என்ற சொல் எதைக் குறிக்கிறது? சமையலறை பொறுப்பை ஏற்க வேண்டியது பெண்; அவர் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கு கணவர் உதவுகிறார். இது கணவருக்கான பொறுப்பு அல்ல! என்பதே உதவி என்று சொல்லுக்கான உண்மையான உள்ளடக்கம். சமையல் பெண்களுக்கான பொறுப்பு என்று காலம் காலமாக மூளையில் திணிக்கப்பட்ட சிந்தனையின் தொடர்ச்சியாகவே உதவி என்ற சொல் வருகிறது. இங்கே உதவி என்பது ஒரு சொல் அல்ல; இது கருத்தியல். உதவி என்ற சொல்லுக்குள்...

சமூகத்தில் மாறிவரும் உளவியல்

சமூகத்தில் மாறிவரும் உளவியல்

அண்மையில் வெளியான மாதிரிப் பதிவு முறை (SRS) புள்ளியியல் அறிக்கை (Sample Registration System (SRS) Statistical Report 2024) புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மொத்தக் கருத்தரிப்பு விகிதம், அதாவது ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அளவு தற்போது 1.9 ஆகக் குறைந்துள்ளது. இது மக்கள்தொகையை நிலைத்திருக்கச் செய்யத் தேவையான 2.1 என்கிற மாற்று நிலையைவிடக் குறைவு. 2014இல் 21ஆக இருந்த பிறப்பு விகிதம் 2024இல் 18.3ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரம், இறப்பு விகிதம் 6.7இலிருந்து 6.4ஆக மட்டுமே குறைந்துள்ளது. இந்தியாவின் சராசரியான நடுத்தர வயது 40.2 தற்போது 29.2 சீனாவின் சராசரி நடுத்தர வயது 40.2 பல ஐரோப்பிய நாடுகளில் இது இன்னும் அதிகம். அதே நேரத்தில் இந்தியாவில் தற்போது 15 முதல் 29 வயதுக்குள் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 38கோடி. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 27% விழுக்காடாகும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள்...

தவெக அரசே சமூக அநீதிக்கு துணைபோகலாமா?

தவெக அரசே சமூக அநீதிக்கு துணைபோகலாமா?

தமிழ்நாட்டுக்கு உரிமையான உயர் சிறப்பு மருத்துவ மேல்படிப்புக்கான (super speciality) 152 இடங்களை ஒன்றிய ஆட்சியிடம் சரணடையச் செய்திருக்கிறது தவெக ஆட்சி; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த அதிர்ச்சியான தகவலை அம்பலப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஜோசப் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் திமுக ஆட்சி சரியான வாதங்களை எடுத்து வைத்தது. இந்த இடங்கள் அகில இந்திய கோட்டாவுக்கு சென்று விடாமல் தடுத்து நிறுத்தியது. இதை அகில இந்திய கோட்டாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு தனி நபர் தொடர்ந்த வழக்கில் நடந்த விவாதத்தில் த.வெ.க ஆட்சி சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சரண்டர் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்; சரியான உறுதியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை. குறிப்பாக வழக்கு போட்டவர் சுட்டிக்காட்டிய என். எஸ் கார்த்திகேயன் எதிர் தமிழ்நாடு அரசு வழக்கு இந்த வழக்கோடு தொடர்பு இல்லாதது நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்...

பாஜகவுக்கு நெருக்கடி முற்றுகிறது! போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

பாஜகவுக்கு நெருக்கடி முற்றுகிறது! போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

கடந்த மாதம் நாடு முழுவதும் உள்ள 5,432 மையங்களில் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் 2026 தேர்வை எழுதியிருந்தனர். பின்னர் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளால் மே-12 அன்று தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. மறுபுறம், சிபிஎஸ்சி அறிமுகப்படுத்திய புதிய On-Screen Marking (OSM) மதிப்பீட்டு முறையில் பல குறைபாடுகள் இருப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியதால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அரசு நீட் மறுதேர்வுக்கு உத்தரவிட்டதோடு சிபிஎஸ்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்திருந்தாலும், அரசியல் பொறுப்பு யாரிடமும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென்று காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டது. இன்ஸ்டாகிராமில் 2.2 கோடிப்பேர் இந்த காக்ரோச் ஜனதா கட்சியை பின் தொடருகிறார்கள். வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் போல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேசியது இளைஞர்கள்...

தவெக அரசே சமூக அநீதிக்கு துணைபோகலாமா?

தவெக அரசே சமூக அநீதிக்கு துணைபோகலாமா?

ரூ.12,698 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.3,923 கோடி: தென் மாநிலங்களை ஓரம்கட்டும் ஒன்றிய அரசு. ஒட்டுமொத்த நிதியில், தமிழ்நாடு இதுவரை 10 சதவீத பங்கைப் பெற்று முன்னணியில் இருந்தது. ஆனால், புதிய கணக்கீட்டு முறையின்படி, தமிழ்நாட்டின் பங்கு 4.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் எதிர்கால நிதி உரிமை, ஒரேயடியாக பாதிக்கும் கீழ் சரிந்துள்ளதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. இதுமட்டுமின்றி, ஜிராம்ஜி திட்டத்தின் கீழ் ஆந்திராவுக்கு 8.8 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் 4.20 சதவீதமும், கேரளாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.38 சதவீதமும், தெலங்கானாவுக்கு 3.94 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2.17 சதவீதமும் குறைப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. ஆனால் பாஜ ஆளக்கூடிய உத்தரபிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி 9.67 சதவீதத்தில் இருந்து 17.62 சதவீதமும், பீகாருக்கான நிதி...

திருப்பரங்குன்றம் விவகாரம்  தெளிவுபடுத்திய தவெக அரசு!

திருப்பரங்குன்றம் விவகாரம் தெளிவுபடுத்திய தவெக அரசு!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் `உச்சிப்பிள்ளையார் கோயிலில் அல்ல, மலையின் உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவின் சர்வே கல் பகுதியில்தான் விளக்கு ஏற்ற வேண்டும், அந்த சர்வே கல்தான் தீபத்தூண்’ என இந்து அமைப்புகள் கலவரத்திற்கு வித்திட்டு வருகின்றன. முந்தைய திராவிட மாடல் அரசு இவ்விவகாரத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிக்காட்டி, வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்படும் என்பதை உறுதி செய்தது. நீதிமன்றப் படியேறிப் பார்த்தும், சங்கிகளின் கலவர முயற்சி நடக்கவில்லை. மலையை முற்றுகையிட்டு கலவரம் செய்ய காவிகள் முயற்சித்த நொடியில் கூட, We are not allowing..we will face the consequences… என்று காவல்துறையை வைத்து தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது அன்றைய ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம். இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் ஆட்சி மாறிவிட்ட நிலையில், தற்போதைய...

கோவையில் பேருந்து தீண்டாமை முடிவுக்கு வந்தது கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கு வெற்றி!

கோவையில் பேருந்து தீண்டாமை முடிவுக்கு வந்தது கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கு வெற்றி!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் கெம்பனூர் கிராமத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பேருந்து தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட்டமாக நடத்தாமல் கிராமங்களில் நிலவும் தீண்டாமை அவலங்களின் பட்டியலை தயாரிக்கும் செயல்திட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் இறங்கியது. அப்போதுதான் இந்த பேருந்துத் தீண்டாமை கவனத்திற்கு வந்தது. பேருந்து நிற்கும் இறுதி முனையமாக இந்த ஊர் இருந்த காரணத்தினால் பட்டியல் இனப் பிரிவினர் பேருந்துகளில் உட்கார்ந்து விடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கட்சிகளைக் கடந்து ஆதிக்க ஜாதியினர் கைகோர்த்துக் கொண்டு பேருந்து ஊருக்கு வராமல் தடுப்பதில் ஜாதி வெறியுடன் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் கவனத்தில் கொண்டு வந்தும் போக்குவரத்துத் துறை அலட்சியம் செய்தது. இந்தக் கோரிக்கைக்காக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்...

தமிழீழ எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம்!

தமிழீழ எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம்!

புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி சார்பில் 2009 மே-18 தமிழ் இன அழிப்பு நாள் நினைவுகளோடு, “தமிழீழ வரலாற்றில் பெண் புலிகள் நூல்கள் அறிமுகம் நிகழ்ச்சி” 18.05.2026 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரி, மறைமலை அடிகள் சாலை, தோழமை ஒன்றுகூடல் அலுவலகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி தலைவர் அன்பு எழிலன் வரவேற்புரையாற்றினார். எந்த வித எதிர்பார்ப்புமின்றி பெரியாரிய கொள்கைக்காக கழகப் பணிகளை செய்தும், கொள்கைக்காக பல வழக்குகளை சந்தித்து சிறைக்குச் சென்ற தோழர்.கடலூர் தாமரைகண்ணன் முயற்சியில் தமிழ் ஈழ எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நூல் வடிவம் பெறுகின்றன. அவருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் லோகு. அய்யப்பன் பாராட்டி சால்வை அணிவித்தனர். “கஸ்தூரியின் ஆக்கங்கள், வானதியின் கவிதைகள், மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு, தமிழீழ தியாகச்சுடர் அன்னைபூபதி, கனவுக்கு வெளியேயான உலகு, தமிழீழ...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்; கழகத் தலைவர் பங்கேற்பு!

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்; கழகத் தலைவர் பங்கேற்பு!

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சேலம், டவுன் ரயில்நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஆர். பி. மஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மா. லெ. மா மாவட்டச் செயலாளர் மு. மாரியப்பன் வரவேற்புரையாற்றினார். மக்கள் தேசம் கட்சியின் மாநில செயலாளர் சி. சுலைமான் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார். தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சந்தியூர் இரா. பார்த்திபன் மார்க்சியத்தின் பார்வையில் அரசியல் அதிகாரம் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலன் மதவாத அரசியலும், மார்க்கியமும் சர்வதேச பாதையும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்திய ஒன்றியமும், மாநில சுயாட்சியும் என்ற தலைப்பில் பேசுகையில் இந்திய ஒன்றியம் என்பது பல்வேறு...

எதையும் ஏன்? என்று கேள்வி கேள்!குழந்தைகள் மகிழ்வு பழகுமுகாம்

எதையும் ஏன்? என்று கேள்வி கேள்!குழந்தைகள் மகிழ்வு பழகுமுகாம்

தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய குழந்தைகள் பழகு மகிழ்வு ஒரு நாள் முகாம் 30.05.2026 சனிக்கிழமை கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. சுகந்தன் பிரபாகரன் (தமிழ்நாடு மாணவர் கழகம்) தலைமை வகித்தார். செ.யாழ் இன்பன் (தமிழ்நாடு மாணவர் கழகம்) முன்னிலையில் நடைபெற்றது. முதல் வகுப்பாக தன்னை அறிதல் என்ற தலைப்பில் `சிறார் நண்பன்’ ஆனந்த் குழந்தைகள் தாங்கள் யார்? தங்களின் அடையாளம் என்ன? வாழ்வில் தாங்கள் அடையவேண்டிய இலக்குகளை எவ்வாறு திட்டமிடுவது? என்பது குறித்து ஒரு கலந்துரையாடலாக, செயல்பாடுகளுடன் வகுப்பு நடைபெற்றது. ஏனென்று கேள்வி கேள்? என்ற தலைப்பிலான வகுப்பை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி நடத்தினார். சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலையும் பெற வேண்டும் என்பதனை குழந்தைகள்...

ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர்களின் தந்தையார் சென்னியப்பன் (73) அவர்கள் உடல் நலக்குறைவின் காரணமாக சில நாட்களுக்கு முன்பு முடிவெய்தினார். 17.05.26 அன்று இரவு நசியனூர் சாமிக்கவுண்டன் பாளையத்தில் உள்ள சண்முகசுந்தரம் இல்லத்துக்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி  ஆறுதல் தெரிவித்தார்.

ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர்களின் தந்தையார் சென்னியப்பன் (73) அவர்கள் உடல் நலக்குறைவின் காரணமாக சில நாட்களுக்கு முன்பு முடிவெய்தினார். 17.05.26 அன்று இரவு நசியனூர் சாமிக்கவுண்டன் பாளையத்தில் உள்ள சண்முகசுந்தரம் இல்லத்துக்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆறுதல் தெரிவித்தார்.

நீட்தேர்வு நடத்தும் அமைப்பின்  படுதேல்விகள் ஊழலில் பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி!

நீட்தேர்வு நடத்தும் அமைப்பின் படுதேல்விகள் ஊழலில் பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி!

2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ’நீட்’ நடத்தப்பட்டது. பல மாதங்களாகவும், பல ஆண்டுகளாகவும் கடுமையாக உழைத்த மாணவர்கள் தேர்வு முடிந்த மகிழ்ச்சியை சமூக ஊடகங்களில் கொண்டாடினர். ஆனால் இரண்டு வாரங்களுக்குள் அந்த மகிழ்ச்சி துயரமாக மாறியது. மே 12 அன்று, “கெஸ் பேப்பர்” பரவியதாகவும், தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து தேசியத் தேர்வு முகமை (என்.டீ.ஏ) நீட்-2026 தேர்வை ரத்து செய்தது. அதன்பின்னர் மனஉளைச்சலால் குறைந்தது 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான பிரதீப் மேக்வால், கடந்த 3- ஆண்டுகளாக ’நீட்’ தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த ஆண்டு சிறந்த மருத்துவக் கல்லூரியில் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேசத்தின் லகிம்பூர் கேரியைச் சேர்ந்த 21 வயது ரித்திக்...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல் தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும் ! கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் வேண்டுகோள்

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல் தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும் ! கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் வேண்டுகோள்

29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு பிளக்ஸ் பேனர் வைத்த விவகாரத்தில் ஏற்பட்ட சிறுவாக்குவாதம் தீவிரமடைந்து வன்முறை தாக்குதலாகி 8 பேருக்கு அரிவாள் வெட்டு என இன்று தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதியிலும் பேசு பொருளாகியுள்ளது. கண்ணில் பட்டோரை எல்லாம் வெட்டிப்போடும் அளவிற்கு அங்கு என்ன நடந்தது என விசாரிக்கும் போது பிளக்ஸ் பேனர் கதையினை சொல்கிறார்கள். பட்டியலின இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் 6-பேர் கடும் காயங்களோடு நெல்லை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூர்மையான ஆயுதங்களோடு 10-க்கும் மேற்பட்ட நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு இளைஞரது கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. கால், கை என காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடந்தேறியுள்ளது. இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் நெட்டூர் பகுதியில் தொடர்ந்து இது...

தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை வலியுறுத்தல் கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்

தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை வலியுறுத்தல் கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்

அமர்நாத் இராதகிருஷ்ணன் தந்த கீழடி அகழாய்வு ஆய்வு அறிக்கையை முடக்கி வைக்காமல் ஒன்றிய அரசு உடனே வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், ஓவியா உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அறிக்கையின் விவரம். 2014 – 2016 காலகட்டத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ( Archeological Survey of India – ASI ) சார்பாகக் கீழடி அகழாய்வு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் மேற்கொள்ளப் பட்டது. கீழடியில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு 2023 ஜனவரி மாதத்தில் முறைப்படி சமர்ப்பித்துள்ளார். அறிவியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கீழடியின் காலம் கி.மு.800 – 500 வரை...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. வழக்கைத் தொடர்ந்தவர் சூரிய பிரகாஷ் என்ற இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளர். பக்ரீத் பண்டிகையை ஒட்டி மாடுகள் வெட்டப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு இது. பொது இடங்களில் ஆடுகளை வெட்டலாம்; கோழிகளை வெட்டலாம்; ஆனால் மாடுகளை மட்டும் வெட்டக்கூடாது என்பதற்கு என்ன காரணம்? மதம் சார்ந்த பார்வைதான்! உலகம் முழுதும் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு மாட்டுக்கறி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாடு வெட்டுவதற்கோ; மாட்டுக்கறி உண்பதற்கோ இதுவரை எந்தத் தடையும் இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாடு வெட்டத் தடைச் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால் அப்போது நடந்த...

`திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

`திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

மத நல்லிணக்கத்தை பேசும் “திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய களம் என்ற அமைப்பு இந்த படத்தை திரையிடும் முயற்சிகளில் ஈடுபட்டது. திராவிட மாடல் ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுதும் எந்த தடையுமின்றி இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு வந்தது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் திரையிடப்பட்டது. `திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்!’ என்ற வெறிக்கூச்சலோடு மதவாத சக்திகள் சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதையும்; நீதிமன்ற தீரப்பின் முரண்பாடுகளையும் இந்த ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது.தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கும் இந்த முயற்சியை திராவிட மாடல் ஆட்சி உறுதியாக முறியடித்தது. காவல்துறை அனுமதி மறுப்பதற்கு மேலிட உத்தரவு என்ற ஒரு காரணத்தை கூறுகிறது. எந்த மேல் இடத்திலிருந்து உத்தரவு வந்தது? பெரியார் அம்பேத்கரை தங்களின் கொள்கைத் தலைவராக அறிவித்துக் கொள்ளும் த.வெ.க ஆட்சி அவர்கள் வலியுறுத்திய கொள்கைக்கு...

சென்னையில் கழகம் ஆர்பாட்டம்  பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது!

சென்னையில் கழகம் ஆர்பாட்டம் பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது!

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக்கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “ஒன்றிய அரசே! பாடத்திட்டத்தில் இந்தியைத் திணிக்காதே! தமிழ்நாடு அரசே! பி.எம். பள்ளிகளை அனுமதிக்காதே” எனும் உரிமை முழக்க ஆர்ப்பாட்டம், 30/5/26 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில், மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், இரண்யா ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் நோக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – லதா – சத்யா குழுவினரின் பாடல்கள் உணர்வூட்டின. ராஜா தமிழ்தேச மக்கள் முன்னணி மும்மொழிக்கொள்கையின் ஆபத்துகளை படம்பிடித்துக் காட்டினார். தபசி குமரன் “தவெக அமைச்சர்கள் வெளிப்படுத்தும் கருத்துகளில்” அதிருப்தியை வெளிப்படுத்தினார், திமுக வழக்கறிஞர் ஆலிம் அல்புகாரி “கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு...

ஜீவா நூலுக்கு சரியான பதில்!

ஜீவா நூலுக்கு சரியான பதில்!

கம்யூனிஸ்ட்களிலிருந்து ஆள் பிடித்தாரா பெரியார்? சில நாட்களுக்கு முன்பாக முகப்புத்தகத்தில் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. அதில் ஈரோட்டுப் பாதை சரியா? என ஜீவா எழுதிய புத்தகத்தை கண்டு கொளத்தூர் மணியே ஆடிபோனார். அவரால் கூட பதில் சொல்ல முடியாத ஏற்கத்தக்க விமர்சனங்களால் ஆன புத்தகம் அது எனப் பெரியாரை இகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. இதற்கு சரியான பதிலை கொளத்தூர் மணி எழுதினார். மிகச்சரியான புள்ளிவிவரங்களுடனும், அதை அந்தகாலத்தில் நடந்த சம்பவங்களுடனும் ஒப்பிட்டு எழுதியிருப்பது மிக அருமை. என்னைப் போன்றோர் பெரியாரை சரியாக புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது. – ந.யதிந்தர். மதுரை பெரியார் முழக்கம் இதழ் 29052026

ஆனூர்.ஜெகதீசன் துணைவியார் முடிவெய்தினார்

ஆனூர்.ஜெகதீசன் துணைவியார் முடிவெய்தினார்

தோழர் ஆனூர்.ஜெகதீசன் அவர்களின் இணையர் மறைவுற்றார். அவருக்கு கழகம் சார்பில் 13.05.26 அன்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையைச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர். அவரது மறைவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் 15.05.2025 மதியம் 2 மணி அளவில் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஆனூர் ஜெகதீசன் அவர்களது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 29052026

பொம்மைகளை பகுத்தறிவு பேச வைத்த கலைவாணன் விடைபெற்றார்

பொம்மைகளை பகுத்தறிவு பேச வைத்த கலைவாணன் விடைபெற்றார்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் இரங்கல் அறிக்கை: கலைவாணன் (67) இறந்துவிட்டார் என்ற செய்தியை உள்ளம் ஏற்கவே மறுக்கிறது; அவருடன் பழகிய எவரும் அவருடைய நினைவுகளில் இருந்து மீளவே முடியாது. தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் எப்போதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கக்கூடிய உயர்ந்த பண்பாளர். அவரது தந்தை முத்துக்கூத்தன் மிகச்சிறந்த திராவிட இயக்கத்தின் கலைப் போராளி; வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் வழியாக பகுத்தறிவு சிந்தனைகளையும் திராவிட இயக்க கொள்கைகளையும் பரப்பியவர். தனது மகனை மிகச்சிறந்த கொள்கை வாரிசாக வளர்த்து எடுத்தார். மகனுக்கு என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக அவர் சூட்டிய பெயர்தான் கலைவாணன். தந்தையிடமிருந்து பெற்ற உணர்வுகளோடு தனது கலை ஆர்வத்தை மிகச் சிறப்பாக வளர்த்துக் கொண்டார் கலைவாணன். தமிழ்நாட்டில் அபூர்வமாக உள்ள பொம்மலாட்டக் கலைஞர்களில் ஒருவர் கலைவாணன்.புராணங்களுக்கும் மடமை பிரச்சாரங்களுக்கும் பயன்படுத்தப்பட்ட பொம்மலாட்ட கலை வடிவத்தை சமூக மாற்றத்திற்கு பயன்படுத்திய பெருமை முத்துக்கூத்தன் அவர்களுக்கும் கலைவாணன் அவர்களுக்கும் உண்டு. பன்முக கலைத்திறன் அவரோடு இணைந்து...

இரண்டு நாள் பயிரங்கம் சேலம் மாவட்ட இளைஞர் அணி முடிவு!

இரண்டு நாள் பயிரங்கம் சேலம் மாவட்ட இளைஞர் அணி முடிவு!

24.05.2026 அன்று மாலை 5.00 மணியளவில் இளம்பிள்ளையில் சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவசண்முகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் இளைஞர் அணியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்பைடையில்கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூத்த பெரியார் பெருந்தொண்டர் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் வயது மூப்பின் காரணமாக கடந்த 17.05.2026 அன்று காலமானார். அவரது மறைவிற்கு சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், புகழ் வணக்கத்தையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. எதிர்வரும் ஜீன் மாதத்தில் இளைஞர் அணியின் சார்பில் 2-நாள் பெரியாரியல் பயிலரங்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களின் மூலமாக இயக்கச் செயல்பாடுகளையும், இளைய தலைமுறையினருக்குச் சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைச் சிந்தனைகளை இளைஞர் அணி வாயிலாக அதிகளவில் கொண்டு செல்வதெனவும் ஆலோசிக்கப்பட்டது. சேலம் மாவட்ட...

தகடூர் சம்பத்துக்கு தோழர்கள் இறுதி மரியாதை!

தகடூர் சம்பத்துக்கு தோழர்கள் இறுதி மரியாதை!

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் தகடூர் சம்பத் அவர்களுக்கு, மே-14, 2026 அன்று காலை 7:30 மணிக்கு மேடவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கழகத்தின் சார்பில், மாவட்ட அமைப்பாளர் ம. கி. எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைப்பில், திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா, கழகத் தோழர்கள் இரண்யா, திராவிட செல்வி, கவுரிசங்கர், மகேந்திரன், முகிலவன் ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தினர். பெரியார் முழக்கம் இதழ் 29052026

கொள்கைக்காக உயீர்நீத்த உடையார்பாளையம் வேலாயுதம்!

கொள்கைக்காக உயீர்நீத்த உடையார்பாளையம் வேலாயுதம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். உடையார்பாளையம் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரைத் தொடர். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் நாம் இருக்கிறோம். இந்த நூற்றாண்டு காலபயணம் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார- பண்பாட்டு வளர்ச்சிக்கான பாதையை அமைத்திருக்கிறது. ஒவ்வொரு தனிமனிதரின் கல்வி, வேலைவாய்ப்புக்கான ஏணியாக மற்றெந்த இயக்கத்தையும் விடவும் அதீத பங்களிப்பைச் செய்த இயக்கமாக சுயமரியாதை இயக்கமும், அதன் பரிணாம வளர்ச்சியாக உருவெடுத்த திராவிட இயக்கமும் திகழ்கின்றன. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலம் அவ்வளவு இனிமையானது அல்ல. நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுவதற்கு சமமான காலம் அது. இயக்கத்தின் தலைவராக இருந்த பெரியார் மீதே செருப்பு வீசப்பட்டது, பாம்பு வீசப்பட்டது, மலம் வீசப்பட்டது என்றால் சாமானிய தொண்டர்களைப் பற்றிச் சொல்லத்தான் வேண்டுமா? அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்...