ஜீவா நூலுக்கு சரியான பதில்!
கம்யூனிஸ்ட்களிலிருந்து ஆள் பிடித்தாரா பெரியார்? சில நாட்களுக்கு முன்பாக முகப்புத்தகத்தில் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. அதில் ஈரோட்டுப் பாதை சரியா? என ஜீவா எழுதிய புத்தகத்தை கண்டு கொளத்தூர் மணியே ஆடிபோனார். அவரால் கூட பதில் சொல்ல முடியாத ஏற்கத்தக்க விமர்சனங்களால் ஆன புத்தகம் அது எனப் பெரியாரை இகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. இதற்கு சரியான பதிலை கொளத்தூர் மணி எழுதினார். மிகச்சரியான புள்ளிவிவரங்களுடனும், அதை அந்தகாலத்தில் நடந்த சம்பவங்களுடனும் ஒப்பிட்டு எழுதியிருப்பது மிக அருமை. என்னைப் போன்றோர் பெரியாரை சரியாக புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.
– ந.யதிந்தர். மதுரை
பெரியார் முழக்கம் இதழ் 29052026
