ஆனூர்.ஜெகதீசன் துணைவியார் முடிவெய்தினார்
தோழர் ஆனூர்.ஜெகதீசன் அவர்களின் இணையர் மறைவுற்றார். அவருக்கு கழகம் சார்பில் 13.05.26 அன்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையைச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர். அவரது மறைவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் 15.05.2025 மதியம் 2 மணி அளவில் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஆனூர் ஜெகதீசன் அவர்களது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 29052026
