மருத்துவர் சிவபாலன் கட்டுரைக்கு பாராட்டு

கடந்த வாரம் பெரியார் முழக்கத்தில் வெளிவந்த மருத்துவர் சிவபாலன் எழுதிய கட்டுரை மிகவும் சிறப்பானது. சமூகத்தில் நிகழ்ந்துள்ள உளவியல் மாற்றங்களை புரிந்து கொள்ள உதவியது. பெரியாருடைய கொள்கைகளையும் திட்டங்களையும் கொண்டு செல்லும் வழிமுறைகளை உருவாக்குவதற்கு இந்த உளவியல் மாற்றங்களை எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டிய அவசியத்தை கட்டுரை உணர்த்துகிறது.

குடும்ப வாழ்க்கை முறை குறித்து பெரியார் முன்வைத்த கருத்துகளோடு இந்தக் கட்டுரையைப் பொருத்திப் பார்த்தால் புதிய வெளிச்சங்கள் கிடைக்கும் என்று கருதுகிறேன். சமூக ஊடகங்கள் இளைஞர்களிடம் உருவாக்கும் உளவியல் நெருக்கடிகளையும் முதியவர்களின் உளவியல் பாதிப்புகளையும் கட்டுரை அற்புதமாக படம் பிடித்திருக்கிறது ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. –
இரா.உமாபதி (சென்னை)
பெரியார் முழக்கம் இதழ் 18062026

You may also like...