மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் நினைவேந்தல்!

கோவை மாவட்டக் கழகத்தினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரியார் பெருந்தொண்டர், மறைந்த கோவை மாவட்டக் கழகத் தலைவர் பா. இராமச்சந்திரன் அவர்கள் 17.05.2026 அன்று மறைவுற்றார், அவரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில் மேட்டுப்பாளையம், கெண்டையூர் பகுதியில் உள்ள இராமச்சந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார்,கோவை மாநகரச் செயலாளர் வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இராமசந்திரன் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.

கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, கழக சமூகஊடகப் பொறுப்பாளர் பரிமளாராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் வீ. சிவகாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்டப் பொறுப்பாளர் விஷ்ணு, தி.க மாவட்டத் தலைவர் ச. வேலுச்சாமி, பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் T. T ரங்கசாமி, த.பெ.தி.க மாவட்டத் தலைவர் து.இராமசாமி, ம.தி.மு.க நகரச் செயலாளர் இக்பால், வி.சி.க மாவட்டச் செயலாளர் தொல்குடிமைந்தன், த.பு.க பொதுச் செயலாளர் இளவேனில், சமுகநீதி கட்சியின் பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராசு, தோழர் அறக்கட்டளை சாந்தகுமார், புஇமு மலரவன்,பகுத்தறிவாளர் கழகம் ரங்கராஜ், பெரியார் தொண்டர் இரும்பொறை சுந்தரமூர்த்தி, மருத்துவர் மகேஸ்வரன், இராமச்சந்திரன் அவர்களின் மகள் தென்றல், பேத்தி அமைதி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்.

மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர் அமுல்ராஜ் நினைவுகளை பகிர்ந்து நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் தி.இ.த.பே அமைப்புச் செயலாளர் கா.சு.நாகராசு, சென்னை, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஒன்றிய, நகர, கிளை கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 11062026

You may also like...