இரண்டு நாள் பயிரங்கம் சேலம் மாவட்ட இளைஞர் அணி முடிவு!
24.05.2026 அன்று மாலை 5.00 மணியளவில் இளம்பிள்ளையில் சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவசண்முகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் இளைஞர் அணியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்பைடையில்கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மூத்த பெரியார் பெருந்தொண்டர் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் வயது மூப்பின் காரணமாக கடந்த 17.05.2026 அன்று காலமானார். அவரது மறைவிற்கு சேலம் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், புகழ் வணக்கத்தையும் இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் ஜீன் மாதத்தில் இளைஞர் அணியின் சார்பில் 2-நாள் பெரியாரியல் பயிலரங்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களின் மூலமாக இயக்கச் செயல்பாடுகளையும், இளைய தலைமுறையினருக்குச் சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைச் சிந்தனைகளை இளைஞர் அணி வாயிலாக அதிகளவில் கொண்டு செல்வதெனவும் ஆலோசிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், பெரிய சோரகை ஆனந்த், சிவதாபுரம் அவினேஷ், கொங்கணாபுரம் கோகுலக்கண்ணன், செல்வடை ரமேஷ், குஞ்சாண்டியூர் சுவதரன், இளம்பிள்ளை கோபி, சேகர், குப்புசாமி, தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 29052026
