பயிலரங்கம் நடத்த கோவை மாவட்டக் கழகம் திட்டம்!

ஜூன்-6,மாலை 4.30மணி அளவில் கோவை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்ப் புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:

21 ஆம் நம்பர் அரசுப் பேருந்து ஜாதிய தீண்டாமைகளைத் தகர்த்து கோவை தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு பல வருடங்களுக்குப் பிறகு சென்றது. அதற்கு காரணமாக இருந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, முதலமைச்சர் ஜோசப் விஜய் அகியோருக்கு நன்றி பாராட்டுகிறோம்

● பெரியார் கொள்கைகளை பரப்புவதற்கு தொடர்ந்து தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது;

● சமூக வலை தளங்களில் இளம் தலைமுறையினர் மூலம் புதிய(apps) செயலிகளைப் பயன்படுத்தி பெரியாரிய கொள்கைகளைக் கொண்டு செல்வது;

● விரைவில் புதிய தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார் , வெங்கட் ,சிவராசு,கிருஷ்ணன் சதீஷ், ஸ்டாலின் ராஜா,சத்தியமூர்த்தி, தரணி, நவீன், கதிரவன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 18062026

You may also like...