புத்தக வெளியீட்டு விழா!

மேட்டூர்த் தமிழ்ச் சங்கம், வாசகர் வட்டம், மேட்டூர் கிளை நூலகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நூலாசிரியர் அமிர்தம் பீட்டர் ராஜன் அவர்கள் எழுதிய ‘தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பகுதி-1 தமிழர்கள் வீழ்ந்த வரலாறு’ என்ற நூல் 29.05.2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் மேட்டூர், பொது நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். மேட்டூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆசிரியர் கு. பாரி முன்னிலை வகித்தரார். ஆய்வறிஞர் இரா.இலட்சுமி நாராயணன் வரவேற்புரையாற்றினார். கவிஞர் வை. சரவணன் நூல் அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் சிலம்பரசன் நூல் திறனாய்வு செய்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பகுதி-1 தமிழர்கள் வீழ்ந்த வரலாறு புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் அனுராதா புத்தகத்தை பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் அமிர்தம் பீட்டர் ராஜன் நூல் ஏற்புரையாற்றினார். மருத்துவர் சந்திரமோகன், எழுத்தாளர் மே. கா கிட்டு, வழக்கறிஞர் சிவராமன், கே. வி ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். கோ. பெ. நா. பாரிச்செல்வன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியை தமிழ்ப் பிரபா நெறியாளுகை செய்தார்.

தமிழர்களின் உரிமைக்கு எதிரி யார்?, சுயமரியாதைத் திருமணம் ஏன்? ஆகிய இரண்டு புத்தகங்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது. சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் நாகராஜ், முத்துராஜ், கோகுலக்கண்ணன் ஆகிய கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 11062026

You may also like...