இரசாயன வினாயகன் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க அமைச்சரிடம் மயிலாடுதுறை கழகம் மனு
மயிலாடுதுறையில், தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதி மன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகள் பிளாஸ்ட ஆப் பாரீஸ் என்ற வேதிப் பொருளால் செய்யப்பட்டு வர்ணம் பூசி விநாயகர் சதுர்த்திக்காக தயாராகி வருகின்றன.
நீர் நிலைகளை மாசுபடுத்தும் இந்தச் செயலை தடுத்து நிறுத்த கோரி 05.09.2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அப்பொழுது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உடனிருந்தார்.
இந்நிகழ்வில் திவிக மாவட்ட தலைவர் மகாலிங்கம், செயலாளர் மகேஷ், அமைப்பாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயராகவன், நகர தலைவர் நாஞ்சில் சங்கர், செயலாளர் நடராஜன், தோழர்கள் தில்லைநாதன், கார்த்திக், ராகவன், வழக்குரைஞர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப் பாளர், இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 11082022 இதழ்