கழகத் தோழர்கள் வாக்கு சேகரிப்பு!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரையில் தோழர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

திருப்பூர், அவினாசி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, மொடக்குறிச்சி, சேலம் (மேட்டூர், எடப்பாடி) புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர் (திண்டிவனம்), புதுச்சேரி, சென்னை (மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராயர் நகர், சைதை, பெரம்பூர், வில்லிவாக்கம், ஆர்.கே நகர், எழும்பூர்), காஞ்சிபுரம், உத்திரமேரூர், வேலூர், குடியாத்தம், கே.வி குப்பம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் தோழர்களே நட்சத்திர பேச்சளார்களாக வலம் வந்தனர்.

தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்ற நோக்கத்தில் முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் Zero BJP என்ற பெயரில் பாஜக போட்டியிடும் தொகுதிகளான திருச்செந்தூர், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர், நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் கிராமங்கள்தோறும் பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தோழர்கள் மேற்கொண்டனர்.
பாஜகவை வீழ்த்த களமிறங்கிய கழகத் தோழர்கள்!
30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாஜக ஏன் ஆட்சிக்கு வரகூடாது என்பதை பற்றியும், திமுக 2.0 ஆட்சியின் தேவையையும் எடுத்துரைத்தனர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் தலைமையில் தோழர்கள் சந்திரசேகர் (தூத்துக்குடி பொருளாளர்), மாத்தூர் நீதியரசர் (குமரி மாவட்டச் செயலாளர்), மாசிலாமணி (தென்காசி மாவட்டத் தலைவர்), அண்டன் தமிழரசன், கார்த்திக் ஆகியோர் 12 நாட்கள் தொடர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
கழகத் தலைவர் மேட்டூர், அவினாசி ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கழகப் பொதுச் செயலாளர் காணொளி வழியாக மருத்துவர் எழிலன் அவர்களுக்கு ஆதரவுப் பரப்புரையை மேற்கொண்டார். இணையதளத்தில் திமுக ஆதரவு பரப்புரையை செய்து வந்தார்.
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் கழகத் தோழர் வெள்ளியங்கிரி தலைமையில் தோழர்கள் திமுக கூட்டணியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மருத்துவர் எழிலன் அவர்களுக்கு ஆதரவாக காஞ்சிபுரம் ரவி பாரதி, வேலூர் சிவா ஆகியோர் தலைமையில் தோழர்கள் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியான காவிரி நகர், உழவர் சந்தை உடையார்பேட்டை, நாராயண நகர், அம்மன் நகர், மேற்கு காலனி, பள்ளிபாளையம் பிரிவு சாலை, எம்ஜிஆர் நகர் போன்ற பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் எஸ்.பாலு அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் நாமக்கல் மாவட்டக் கழகத் தோழர்கள் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் மீ.த தண்டபாணி (நகரத் தலைவர்) முன்னெடுப்பில் செ.வடிவேலு (நகரச் செயலாளர்), கேப்டன் அண்ணாதுரை (தலைமைக் குழு உறுப்பினர்), மு.சாமிநாதன் (மாவட்டத் தலைவர்), தோழர்கள் மோகன், மாதேஸ்வரன், தேவி, மணிராஜ், மணியம்மை, சந்திரா, செல்வராசு விசிக பிரபு, தி.க மாவட்டத் தலைவர் சு.சரவணன், குமார், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினர் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பத்து நாட்கள் மாலை நேரத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
எந்தவித பொருளாதார வசதிகளையும் எதிர்பாராமல் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக கழகத் தோழர்கள் கடும் வெயிலிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 30042026

You may also like...