எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்
எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும் தொடர் பரப்புரைக் கூட்டங்கள் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் மக்கள் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. முதலில் இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் மட்டும் நடத்துவதற்காக காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்தும், ஒரு மாத காலத்திற்கு எந்த நிகழ்ச்சிகளுக்குமே அனுமதி இல்லை என்றும் கடிதம் கொடுத்தார். (ஆனால் அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியது) மாவட்ட கழக பொருப்பாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்ட பின்னால், நாள் ஒன்றிற்கு ஒரு கூட்டம் வீதம் பத்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு மீண்டும் காவல் நிலையத்தில் எழுதி கொடுக்கப்பட்டது. முதலில் மணுவை பெற மறுத்த உதவி ஆய்வாளர், உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு மணுவை பெற்றுக்கொண்டார். பின்னர் கூட்டங்களின் எண்னிக்கையை அல்லது நாட்களை குறைத்து கொள்ள வேண்டினார். அதை ஏற்க மறுத்த தோழர்கள்...
