மூத்த பெரியாரியர் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் சந்திப்பு

13-8-2015 அன்று நண்பகல் 2-00 மணிக்கு, மூத்த பெரியாரியரும், கீழ்வெண்மணி கோபாலகிருஷ்ண நாயுடு கொலை வழக்கில் கைதான 11 திராவிடர்க் கழகத் தோழர்களுக்கான வழக்கை முன்னின்று நடத்தியவரும், குடிதாங்கி நிகழ்வில் மையப் புள்ளியாய் நின்று இயங்கியவரும் ஆன ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் உடல் நலிவுற்றிருக்கிற செய்தி அறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக முன்னணித் தோழரும்,  எழுத்தாளருமான தஞ்சை பசு. கவுதமன் ஆகியோர் கும்பகோனத்தில், அம்பேத்கர் வளாகம், தந்தை பெரியார் இல்லத்தில்  சந்தித்தனர்.

அவரிடம் கீழ்வெண்மணி கொலை, குடிதாங்கி நிகழ்வு போன்றவற்றில் உள்ள அய்யங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்கால அரசியல் குறித்தும் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றனர்.

IMG_6417 IMG_6421 IMG_6423 IMG_6425 IMG_6428 IMG_6433 IMG_6434

You may also like...

Leave a Reply