ஈரோடில் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா

dvk1 dvk2ஈரோடு வடக்கு மாவட்டம்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற
தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா

தோழர் பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா, ஈரோடு வடக்கு மாவட்டத் தோழர்களால் மிகச் சிறப்பாகக் கொ ண்டாடப் பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் , பின்னர் பெரியாரின் இல்லத்திற்குச் சென்று பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் மரப்பாலத்தில் கழகக் கொடியேற்றினர். அதன் தொடர்சியாக ரங்கம்பாளையத்திலும் கழகக் கொடியேற்றி கேக் வெட்டி யும் பொங்கல் வழங்கியும் மகிழ்ந்தனர். தொடர்ந்து சூரம்பட்டி வலசிலும், சத்யாநகரிலும், மரவபாளையத்திலும் கழகக் கொடியேற்றப்பட்டது். இறுதியாக சித்தோடு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கங்கினர் . மேலும் சித்தோடு நான்கு சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.

You may also like...

Leave a Reply