மேலும் பார்ப்பனர்களை திணிக்காதே! உயர்நீதிமன்றம் முற்றுகை: 700 தோழர்கள் கைது!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதிகளுக்கான நியமனங்களில் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட் டம் எழுச்சியுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகம் முயற்சித்து பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர் களுடன் தொடர்பு கொண்டு பேசி ஒருங்கிணைத்தார்.
வேல் முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), திருமாவளவன் (வி.சி.), பாக்கர் (இந்திய தவ்ஹித் ஜமாத்), அப்துல் சமது (தமிழக மு°லிம் முன்னேற்றக் கழகம்), வீரலட்சுமி (தமிழர் முன்னேற்றப் படை), மீ.த. பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் கட்சி), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), செந்தில் (இளந்தமிழகம் இயக்கம்) ஆகிய அமைப்பு களைச் சார்ந்த பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர். தந்தை பெரியார் திராவிடர் கழகம், மீனவ மக்கள் முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, அகில இந்திய கிறி°தவ மக்கள் கழகம், தமிழ்நாடு ஆதிவாசிகள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, வழக்கறிஞர் ரஜினிகாந்த் (பகுஜன் சமாஜ்) மற்றும் வழக்கறிஞர் சங்கப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்களும் பங்கேற்றனர்.
பார்ப்பன ஆதிக்கத்தைக் கண்டித்தும், வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு சமூக நீதி வழங்கக் கோரியும், பாரிமுனை மூர் சாலையிலிருந்து தோழர்கள் ஊர்வலமாக புறப்பட்டு உயர்நீதிமன்றம் நோக்கி வந்தனர். நேதாசு சுபாஷ் சந்திர போஸ் சாலை – வழக்கறிஞர் சங்கம் அலுவலகம் அருகே – காவல் துறை, ஊர்வலத்தினரை தடுத்து நிறுத்தி கைது செய்தது. 700க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதானார்கள். கை தானவர்கள் இராய புரத்திலுள்ள இரண்டு திருமண மண்ட பங்களில் வைக்கப் பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைதானது குறிப்பிடத் தக்கது.
திருமண மண்டபத் தில் பல்வேறு அமைப் புகளைச் சார்ந்த தலைவர்கள், பார்ப்பன ஆதிக்கம் தலை விரித்தாடுவதைக் கண்டித்தும், பெரியார் கொள்கைகளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டியது குறித்தும் உரையாற்றினர். மாலை 6 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டத்தை விளக்கும் சுவரெழுத்துகளை நீதிமன்றம் இருந்த பகுதிகளைச் சுற்றியும் கடற்கரைச் சாலையிலும் கழகத் தோழர்கள் எழுதியிருந்தனர்.

பெரியார் முழக்கம் 19032015 இதழ்

You may also like...

Leave a Reply