வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் குடியாத்தம் எ.வி.ஆர். தங்கும் விடுதியில் 30-8-2015 அன்று நடந்தது. நெமிலி ப. திலீபன், கடவுள் ஆத்மா மறுப்பு கூறி தொடக்க உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார்.
நெமிலி திலீபன், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தாக்களை 100ஆக உயர்த்துவதாகவும், பரப்புரைப் பயணத்தை 3 நாள்கள் தங்கள் பகுதியில் நடததுவதாகவும் தெரிவித்தார். குடியாத்தம் இரா. சிவா பேசுகையில், புத்தர், புலே, பெரியார், அம்பேத்கர் பார்ப்பனக் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களை அணி திரட்டியதை நினைவுகூர்ந்தார். நெமிலி நரேஷ்குமார் கவுரவக்கொலைகள் தமிழகத்தில் நடப்பது, தமிழகத்துக்குத் தலைகுனிவு என்றார். கவுரவக் கொலைகளைக் கண்டித்து கூட்டம் நடத்துவதற்குக்கூட காவல்துறை அனுமதி மறுப்பதை சுட்டிக் காட்டினார். குடியாத்தம் பாண்டியன், நெமிலி முனியாண்டி, கார்த்தி, ஜெயக்குமார், கஜேந்திரன், திருமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த துரை. ஜெடீநுசங்கர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் பேசியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார்.
நெமிலி நரேஷ் குமார் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 03092015 இதழ்

IMG_7272 IMG_7273 IMG_7277 IMG_7282 IMG_7289

You may also like...

Leave a Reply